என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvsSA"

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஆஸ்திரேலிய அணியில் மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய லெவன்:-

    உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லெபுசென், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட்.

    ஆஸ்திரேலிய ஆடும் லெவனில் இரண்டு பழங்குடி வீரர்கள் முதல் முறையாக இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் ஆகியோர் பழங்குடி வீரர்கள் ஆவர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, டெஸ்ட் போட்டிகளில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறது. இதுவரை ஒரு பழங்குடி வீரர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்று வந்த நிலையில் தற்போது இரண்டு பழங்குடி (Indigenous) வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட் மற்றும் பிரெண்டன் டாகெட் என்ற இரண்டு பழங்குடி வீரர்கள் ஒன்றாக விளையாட உள்ளனர்.

    பழங்குடி ஆஸ்திரேலியர்கள் என்பவர்கள் அபோரிஜினல் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெயிட் ஐலாண்டர் மக்கள். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை சில பழங்குடி வீரர்களே விளையாடியுள்ளனர். ஆண்களில் ஜேசன் கில்லெஸ்பி மற்றும் ஸ்காட் போலண்ட் மட்டுமே.

    அவர்களுக்கு அடுத்து மூன்றாவது பழங்குடி வீரராக டாகெட் இடம் பெற்றுள்ளார். இது பழங்குடி சமூகத்தின் திறமையை அங்கீகரிப்பதும், கிரிக்கெட்டில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும் ஆகும். இது அடுத்த தலைமுறை பழங்குடி இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.

    • 2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 207 ரன்கள் சேர்த்தது.
    • ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2ஆவது இன்னிங்சில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (11ஆம் தேதி) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச முதல் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது. பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். லபுசேன் (22), கவாஜா (6), கேமரூன் க்ரீன் (0), ஸ்மித் (13), டிராவிட் ஹெட் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அலேக்ஸ் ஹேரி தாக்குப்பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க்கு தாக்குப்பிடித்து விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 1344 ரன்கள் எடுத்திருந்தது.

    ஸ்டார்க் 16 ரன்களுடனும், நாதன் லயன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. நாதன் லயன் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்திருந்தது.

    9ஆவது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக 207 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் கடைசி விக்கெட்டாக 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரபாடா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆஸ்திரேலியா 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. 

    • தென்ஆப்பிரிக்கா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.
    • கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்த 138 ரன்னில் சுருண்டது.

    உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் (5 விக்கெட்) அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 212 ரன்னில் சுருண்டது.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்அப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. பவுமா 3 ரன்களுடனும், பெடிங்காம் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதி வருகின்றன.
    • கோப்பையை வெல்லும்அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும்.

    இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
    • இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

    • ஸ்மித், வெப்ஸ்டர் அரைசதம் அடித்தனர்.
    • யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது. 20 பந்துகளை சந்தித்து கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தபோதிலும் ரன்கள் குவிக்க இயவில்லை. லபுசேன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 56 பந்துகளை எதிர்கொண்டு, தென்ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 23.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    ஸ்மித் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் உடன் பியூ வெப்ஸ்டர் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் 76 பந்தில் அரைசதம் அடித்தார். தொடரந்து விளையாடிய அவர் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை மார்கிராம் வீழ்த்தினார்.

    6ஆவது விக்கெட்டுக்கு வெப்ஸ்டர் உடன் அலேக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. வெப்ஸ்டர் அரைசதம் அடித்தார். இதனால் தேனீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

    வெப்ஸ்டர் 55 ரன்களுடனும், அலேக்ஸ் கேரி 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தேனீர் இடைவேளை முடிவடைந்த ஆட்டம் தொடங்கியதும் ரபாடாவின் பந்து வீச்சு அபாரமாக எடுபட்டது. வெப்ஸ்டர் (72), பேட் கம்மின்ஸ் (1), மிட்செல் ஸ்டார்க் (1) ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். அலேக்ஸ் கேரி 23 ரன்னில் மகாராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா 56.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 212 ரன்னில் சுருண்டது. ரபாடா 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். யான்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

    • கவாஜா 20 பந்துகளை சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
    • ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரபாடா மற்றும் மார்கோ யான்சன் ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினர். ரபாடா பந்தை எதிர்கொள்ள உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன் ஜோடி திணறியது. 20 பந்துகளை சந்தித்து கவாஜா ரன்ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா பந்தில் வெளியேறினார்.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3ஆவது விக்கெட்டுக்கு லபுசேன் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இருந்தபோதிலும் ரன்கள் குவிக்க இயவில்லை. லபுசேன் 17 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 46 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் 56 பந்துகளை எதிர்கொண்டு, தென்ஆப்பிரிக்காவின் பொறுமையை சோதித்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். ஹெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் யான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 23.2 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் முதல் நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    முதல் செசனில் ஆஸ்திரேலியா 67 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு களம் இறங்கிய உடனே ஸ்மித் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலியா 150 ரன்னுக்குள் ஆட்டமிழக்க வாய்ப்புள்ளது.

    ரபாடா 6 ஓவரில் 9 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். யான்சன் 7.2 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • வானம் மேகமூட்டமாக உள்ளதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம்- பவுமா
    • 10 நாள் எங்களை தயார் படுத்தி போட்டிக்கு தயாராக இருக்கிறோம்- கம்மின்ஸ்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    "வானம் மேகமூட்டமாக உள்ளதால் நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். சிறந்த காம்பினேசன் அணியை தேர்வு செய்துள்ளோம். 15 வீரர்களும் நம்பிக்கையாக உள்ளனர். இது மிகப்பெரிய இறுதிப் போட்டி. ரசிகர்களுக்கு சிறந்ததாக இருக்க வேண்டும்" என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் "முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சிதான். மேக மூட்டமாக இருந்தாலம், சிறந்த ஆடுகளம் போன்று தோன்றுகிறது. 10 நாள் எங்களை தயார் படுத்தி போட்டிக்கு தயாராக இருக்கிறோம்" என்றார்.

    ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்

    தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    மார்கிரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ யான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

    • டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 47 ரன்னில் அவுட்டானார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 30 ரன்னும், வார்னர் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    கடைசியில் போராடிய இங்கிலிஸ் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்கொள்கிறது.

    ×