என் மலர்
நீங்கள் தேடியது "World Test Championship"
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.
- WTC போட்டிகளில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.
கவுகாத்தி:
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.
288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 549 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
549 ரன் என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த தோல்வியால் இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதனால் வெற்றியின் சதவீதம் 48.15 ஆகும். இதன் அடிப்படையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் 100 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. 3-வது 4-வது இடங்கள் முறையே இலங்கை பாகிஸ்தான் அணிகள் உள்ளது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
- இதில் இந்தியா அணி எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தது.
துபாய்:
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025 - 2027) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில் 100 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடருகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி (66.67 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி (66.67 சதவீதம்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்த இந்திய அணி (54.17 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.
- உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன.
- தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்வெண்கலம் வென்றார்.
கெய்ரோ:
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் (26), நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார்.
போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார்.
அவர் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவின் பான் ஹியோஜின் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 2-வது இடமும் பிடித்தனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3வது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சும் மோடுகில் (2018), மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.
- சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
- டெஸ்ட் போட்டியை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்) 2019-ம் ஆண்டு அறி முகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய நாடுகளுக்கான டெஸ்ட்களை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில் , இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாட்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
லண்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின்போது, 2027-29 டெஸ்ட் தொடரில் சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐ.சி.சி தலைவா் ஜெய் ஷா இந்த முடிவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தங்களுக்கான அட்ட வணையில் அதிக நாட்களை எடுத்துக் கொள்வதாலும், செலவும் அதிகமாவதாலும் டெஸ்டை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.
ஒரு டெஸ்ட்டுக்கான நாட்களை 5-க்கு பதிலாக 4-ஆக குறைக்கும்போது, 3 போட்டி கொண்ட தொடரை 3 வாரங்களுக்கு உள்ளாக முடிக்க இயலும். இது, அந்த நாடுகள் டெஸ்டை நடத்த உந்துதல் அளிக்கும். குறைக்கப்படும் ஒருநாளின் ஆட்டநேரத்தை சமன் செய்ய ஒரு நாளுக்குள் வீசப்படும் ஓவர்களின் எண்ணிக்கையை 90-ல் இருந்து 98 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதி வருகின்றன.
- கோப்பையை வெல்லும்அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும். இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும்.
இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
- லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது.
ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.
தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம் வருமாறு:
உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் , பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி (WK), பேட் கம்மின்ஸ் (C), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்
- கடந்த இரு சீசன்களிலும் இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது.
- கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை.
லார்ட்ஸ்:
ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.
தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி டெம்பா பவுமா கேப்டன்சிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்தெழுச்சி பெற்றுள்ளது. கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை. அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் வருமாறு:
ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது.
- நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென்ஆப்பிரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் மட்டும் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இறுதிப்போட்டி நடத்தும் இடம் குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை ஒரே இடத்தில் நடத்துவதும் நல்லதுதான். அதே சமயம் கோப்பையை வெல்லும் அணியின் சொந்த நாட்டில், அடுத்த தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது சிறப்பான சாதனை தான் என்றாலும் 2023 இல் ஒருநாள் உலக கோப்பையை வென்றதை விடவும் அது கீழானது தான்" என்று கூறினார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
- இந்த போட்டிக்கான இரு அணிகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரில் விலக வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-
உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்)
இந்நிலையில் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் உள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக இருக்கும்.
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் பட்டுசாமி, டேன் பட்டுசாமி.
- ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
- 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.
ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.
ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.
ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.
2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
- அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.
இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது. ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
- இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
மும்பை:
டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வத்தை ரசிகர்களிடயே அதிகரிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த ஐசிசி திட்டமிட்டது.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் விளையாட அணிகள் கடுமையாக போராடி வருகின்றன.
தற்போதுள்ள புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 3வது இடத்தில் இலங்கை அணியும், 4வது இடத்தில் இந்திய அணியும், 5வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.
பாகிஸ்தான் அணி தற்போது தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருந்தது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தோல்வியால் இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் முதலில் வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன்பின் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினாலும் கூட இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது.






