என் மலர்
நீங்கள் தேடியது "test match"
- நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது.
- சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்னும், நியூசிலாந்து 373 ரன்னும் எடுத்தன.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 105.3 ஓவரில் 302 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இருந்தது.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் தேவை. கைவசம் 9 விக் கெட்டுகள் உள்ள நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இரவு 7 மணி வரை ஆட்டம் ஒரே செஷனாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர்.
டாம் லதாம் 25 ரன்னிலும் அடுத்து களம் வந்த நிக்கோல்ஸ் 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நியூசிலாந்து 90 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தனர். இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
- 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது.
உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.
விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள்.
இந்தியா 102வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார்.
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
இந்நிலையில், 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் 3 ரன்களோடும் , குனமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்
ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.
- மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது.
- இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இ னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.
விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள். இந்தியா 102-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன்னாக இருந்தது. அடுத்து கோலியுடன் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி பொறுமையாக விளையாடியது. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது. வீராட் கோலி 88 ரன்னுடனும், கே.எஸ்.பரத் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
5-வது வீரராக களம் இறங்க வேண்டிய ஸ்ரே யாஸ் அய்யர் முதுகில் வலி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டார். அவரை கிரிக்கெட் வாரிய மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கவில்லை. இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.
- உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.
- டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார். அவர் 170 பந்தில் 114 ரன் எடுத்தார். இதில் 18 பவுண்டரி அடித்தார்.
20-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும். சதம் அடித்தது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது:-
இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது நான் 95 ரன்னில் இருந்தேன். இடைவேளையின் 40 நிமிடங்கள் எனக்கு 1 மணி 40 நிமிடம் போல் இருந்தது.
ஆனால் நான் உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங் செய்தேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரது அனுபவங்கள் எனக்கு நிறைய உதவியது. அந்த அனுபவம் சதம் அடிக்க உதவியது.
உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவர் என்னை போன்ற வீரர்களுக்கு, தனது அனுபவத்தை பற்றி சொல்லும் விதத்தில் மிகவும் மதிப்புமிக்கவர். அவரிடமிருந்து என்னால் முடிந்த வரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.
இது எனது 20-வது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஏற்ற- தாழ்வுகளை பார்க்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இது நம்ப முடியாத கடினமான ஆட்டம். இது போன்ற தருணங்களை நீங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
- புஜாரா 46 பந்துகளில் 22 ரன்களும், தொடர்ந்து விளையாடி வரும் கில் 119 பந்துகளில் 65 ரன்களும் எடுத்துள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்கள் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினார்கள்.
மிட்செட் ஸ்டார்க் வீசிய ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரியை அடித்தார். அதே போல் ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
நாதன் லயன் பந்துவீச்சில் சுப்மன் கில்லுக்கு எல்.பி.டபிள்யூ அவட் கேட்கப்பட்டது. ஆனால் அவுட் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா மறுபரிசீலனை செய்தது. இதில் அவுட் இல்லை என்று தெளிவானது.
ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் லபுசேனிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 94 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.
3ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் இந்தியா 37 ஓவருக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. இதில் புஜாரா 46 பந்துகளில் 22 ரன்களும், தொடர்ந்து விளையாடி வரும் கில் 119 பந்துகளில் 65 ரன்களும் எடுத்து இருவரும் களத்தில் உள்ளனர்.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது.
- ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன்கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3வது நாள் ஆட்டம் நடந்து வருகிறது. ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடர்ந்து விளையாடினார்கள். அவர்கள் ஆட்டத்தை நிதானமாக தொடங்கினார்கள்.
மிட்செட் ஸ்டார்க் வீசிய ஓவரில் சுப்மன் கில் 2 பவுண்டரியை அடித்தார். அதே போல் ஸ்டார்க் ஓவரில் ரோகித் சரமா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.
நாதன் லயன் பந்துவீச்சில் சுப்மன் கில்லுக்கு எல்.பி.டபிள்யூ அவட் கேட்கப்பட்டது. ஆனால் அவுட் கொடுக்க மறுக்கப்பட்டதால் நடுவர் முடிவை எதிர்த்து ஆஸ்திரேலியா மறுபரிசீலனை செய்தது. இதில் அவுட் இல்லை என்று தெளிவானது.
ரோகித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் லபுசேனிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 94 ரன்னாக இருந்தது. அடுத்து புஜாரா களம் வந்தார்.
- 2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது.
- அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், காமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர்.
இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. இதில், அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2ம் நாள் போட்டியின் முடிவில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், காமரூன் கிரீன் 114 ரன்களும் எடுத்தனர்.
மேலும், இந்திய அணி பந்து வீச்சில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்து அபாரமாக விளையாடினார்.
- ஆஸ்திரேலிய அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது.
- ஆட்டத்தில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார்.
அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், பார்டர்- கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட்டில், 2ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது. இதில், அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 150 ரன்களும், காமரூன் கிரீன் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
- கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர்.
- கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா சதம் அடித்தார். அவர் 104 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கேப்டன் ஸ்டீபன் சுமித் 38 ரன்னும், டிராவிஸ் ஹெட் 32 ரன்னும் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் தொடர்ந்து விளையாடினர்.
இருவரும் நிதானமாக விளையாடினர். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜடேஜா வீசினார். கேமரூன் கிரீன் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
உஸ்மான் கவாஜா- கேமரூர் கிரீன் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் உயர்ந்தது. அந்த அணி 109.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது. அப்போது கவாஜா 128 ரன்னுடனும், கேமரூன் கிரீன் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
- கடைசி டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
- 3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. 3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ளது. போட்டியை நேரில் காண மைதானத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் இணைந்து போட்டியை தொடங்கி வைத்தனர்.