என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிட்செல் ஸ்டார்க்"

    • ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
    • இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார்.

    ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணையவுள்ளார்.

    பிபிஎல் (2011-12) சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார். அவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 65 சர்வதேச டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடியுள்ளார்.
    • டி20 போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

    இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளார்.

    2027 ஒருநாள் உலக கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதால் இம்முடிவை எடுத்துள்ளதாக என தெரிவித்துள்ளார்.

    65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.

    வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 70.3 ஓவரில் 225 ரன்னில் சுருண்டது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்னும், கேமரூன் கிரீன் 46 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 4 விக்கெட்டும், கெய்டன் ஷீல்ஸ், ஜஸ்டின் கிரிவ்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 52.1 ஓவரில் 143 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா தரப்பில் போலாண்ட் 3 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 3 ஆம் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 176 ரன்கள் வித்தியாசத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா வென்றது. 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தொடர் நாயகன் விருதையும் ஸ்டார்க் வென்றார்.

    தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற ஸ்டார்க் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக (15 பந்துகளில்) 5 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஸ்டார்க் படைத்தார். ஸ்டார்ட் வீசிய முதல் ஓவரில் 3 விக்கெட்டுகளையும் 3 ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    மேலும், மிட்செல் ஸ்டார்க் தனது 100வது டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா சார்பில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். க்ளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

    • லீட்ஸ், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இரு அணிகளும் அதிக ரன்கள் குவித்தன.
    • ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே ஹெட்டிங்லே (லீட்ஸ்), பர்மிங்காம் (எட்ஜ்பாஸ்டன்) ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்த இரண்டு மைதானங்களில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், ஆசிய கண்டத்தில் உள்ள ஆடுகளம் போன்று இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளுக்கான ஆடுகளங்கள் முற்றிலும் நெடுஞ்சாலை போன்று இருந்தது. இதில் சுப்மன் கில்லிற்கு பந்து வீசமாட்டேன் என ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் நான் சுப்மன் கில்லுக்கு பந்து வீச மாட்டேன். இது உறுதி. இந்தியா- இங்கிலாந்து போட்டியை அதிக அளவில் பார்க்கவில்லை. ஸ்கோர் போர்டு பார்த்தேன். லபுசேன், அலேக்ஸ் கேரி, ஸ்மித் போன்றோர் காலையில் எழுந்து (வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடியது), காஃபி மெஷின் அருகே அமர்ந்து போட்டியை பார்த்தனர். நான் ஸ்கோர் மட்டும் பார்த்தேன். இங்கிலாந்தில் இதுபோன்ற ஆடுகளத்தில் யார் பந்து வீச விரும்புவார்கள்?

    இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்தார்.

    சுப்மன் கில் இரண்டு போட்டிகளிலும் 585 ரன்கள் குவித்தார். இதில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதங்கள் அடங்கும்.

    • மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

    சிட்னி:

    இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

    போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

    பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் எச்சில் பயன்படுத்துவதில்லை. இது கட்டுக்கதை என நினைக்கிறேன்.
    • வியர்வைக்கும், எச்சிலுக்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்குத் தெரியவில்லை.

    கொரோனா தொற்று காலத்தில், பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்தது. இந்த தடையை நிரந்தரமாக்கியுள்ளது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    பந்து பளபளப்பாக இருக்கும் வரை நன்றாக ஸ்விங் ஆகும். இதன்மூலம் தொடக்க ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என வேகப்பந்து வீச்சாளர்கள் நினைக்கின்றனர்.

    இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் எச்சில் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருப்பதாக ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவ்வாறு சாதகமாக இருக்கும் என நினைக்கவில்லை என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் இது தொடர்பாக கூறியதாவது:-

    நான் எச்சில் பயன்படுத்துவதில்லை. இது கட்டுக்கதை என நினைக்கிறேன். சிலர் இது சாதகமாக இருக்கும் என சத்தியம் செய்கிறார்கள். வியர்வைக்கும், எச்சிலுக்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்குத் தெரியவில்லை. இது வேறுபாட்டை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை. இது ரெட் பாலில் (டெஸ்ட் போட்டி) வேறுபாட்டை ஏற்படுத்தலாம். ஒயிட்பாலில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை.

    இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது.
    • இந்த போட்டியில் ஸ்டார்க் ஒரே ஓவரில் 30 ரன்கள் கொடுத்தார்.

    ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். முதல் ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்த ஆர்சிபி, 2-வது ஓவர் முடிவில் 23 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரை சால்ட் விளாசினார். முதல் பந்தில் 6, அடுத்த பந்துகள் முறையே 4,4,4,6 என பறக்க விட்டார். கடைசி பந்து லெக் பய்ஸ் முறையில் 5 ரன்களும் நோபால் முறையில் 1 விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் ஸ்டார்க் 30 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

    இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது.
    • அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

    இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார்.

    விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.

    • டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    • பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

    இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

    2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். மேலும் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார். டார் மார்பிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான மிட்செல் ஸ்டார்க் அணியில் இணைய உள்ளார். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் ஸ்டார்கின் சுவிங் பவுலிங்கில் திணறி ஆட்டம் இழந்திருக்கிறார்கள்.

    இந்தியாவின் சமதளமான பிட்சில் அவரால் எளிதாக ரிவர்ஸ் சுவிங் போட்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்தியா இந்தப் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
    • 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    சிட்னி:

    இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 3-ந் தேதி வரையும், ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 22-ந் தேதி மொகாலியில் நடக்கிறது.

    இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ், 20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருந்த ஸ்டீவன் சுமித் ஆகியோர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் அணியில் இருந்து விலகி இருக்கின்றனர்.

    இதேபோல் ஒருநாள் அணியில் இடம் பெற்று இருந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் ஒதுங்கி இருக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை மிட்செல் மார்ஷ் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆஷ்டன் டர்னர், மார்னஸ் லபுஸ்சேன் ஆகியோர் கூடுதலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் கம்மின்ஸ், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இந்திய தொடருக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.
    • இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    இதுவரை ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், குஜராத் 1 முறையும் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் மினி ஏலப்பட்டியலில் ஸ்டார்க் பெயர் இடம்பெறும் பட்சத்தில் அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. இவரை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இவர் 9 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்.

    • நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும்.

    மொகாலி:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

    அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.

    ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்து உள்ளது. டேவிட் வார்னர், லபுஸ்சேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.

    இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு:-

    இந்தியா:- லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான்கிஷன் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா.

    ஆஸ்திரேலியா:- கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.

    ×