என் மலர்
நீங்கள் தேடியது "BBL"
- பெர்த்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
பெர்த்:
பிக்பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் பிலிப், ஹென்ரிக்ஸ் ஆகியோர் 24 ரன்கள் எடுத்தனர்.
பெர்த் ஸ்கார்சர்ஸ் சார்பில் டேவிட் பைன், ஜேய் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டும், பியர்ட்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 17.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுடன், 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 44 ரன்னும், பின் ஆலன் 33 ரன்னும், ஜோஷ் இங்லிஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை பெர்த் ஸ்கார்சர்ஸ் பெற்றது.
ஆட்ட நாயகன் விருது டேவிட் பைனுக்கும், தொடர் நாயகப் விருது சாம் ஹார்பருக்கும் அளிக்கப்பட்டது.
- சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போதும் வெற்றி.
- ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன.
ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற 15வது பிபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி. இதன் மூலம் பிபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி இன்று இறுதிப்போட்டியில் ஒன்பதாவது முறையாகவும், சிக்ஸர்ஸ் அணிக்கு எதிராக ஆறாவது முறையும் களமிறங்கியது. இதற்கு முன்பு சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 2015, 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வென்றிருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் தோற்கடித்து, அதன் ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளது. ஸ்கார்ச்சர்ஸ் அணி, பிபிஎல் இறுதிப் போட்டியில் சிஸ்சர்ஸ் அணியிடம் இரண்டு முறை, அதாவது 2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தோற்றுள்ளது.
2011, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்களான சிஸ்சர்ஸ் அணி, பிபிஎல்-லின் இரண்டாவது மிக வெற்றிகரமான அணியாகும். இந்த ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சிக்ஸர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் சேர்ந்து, இதுவரை நடந்த 15 பிபிஎல் தொடர்களில் ஒன்பதை வென்றுள்ளன.
பிரிஸ்பேன் ஹீட் அணி 2012 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியனாக முடிசூட்டப்பட்டுள்ளது. அதே சமயம், சிட்னி தண்டர், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு பட்டத்தை வென்றுள்ளன.
பிக் பாஷ் லீக்
பிக் பாஷ் லீக், இந்தியாவின் ஐபிஎல் தொடர்போல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடராகும். இது டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெறும். இந்த கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவால் 2011இல் தொடங்கப்பட்டது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
- பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது
- சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.
பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன.
பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள போட்டிகளில் பாபர் அசாம் பங்கேற்க மாட்டார் என சிட்னி சிக்சர்ஸ்அணி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளதால் இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
- பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
பெர்த்:
பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களமிறங்கியது. பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் 15 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் மாலி பேர்ட்மேன் 3 விக்கெட்டும், டேவிட் பைன், கூப்பர் கன்னோலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது பின் ஆலனுக்கு அளிக்கப்பட்டது.
- பெர்த்தில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகள் மோதின.
- டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
பெர்த்:
பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெர்த்தில் இன்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் சிட்னி சிக்சர்ஸ், பெர்த் ஸ்காட்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் ஸ்காட்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. பின் ஆலன் 49 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, சிட்னி சிக்சர்ஸ் அணி 148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான பாபர் அசாம் 2 பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
தகுதிச்சுற்று போட்டியில் பாபர் அசாம் விரைவில் வெளியேறியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே சமூக வலைதளங்களில் அவரை சாடி வருகின்றனர். இதனால் பாபர் அசாம் திடீரென டிரெண்டாகி உள்ளார்.
- முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பிக்பாஷ் டி20 தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
நாதன் மெக்ஸ்வினி அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார். நேசர் அதிரடியாக விளையாடி 35 ரன் எடுத்தார்.
சிட்னி அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், சாம் கர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவ் ஸ்மித்
54 ரன் எடுத்தார். ஹென்ட்ரிக்ஸ் 24 ரன்னில் வெளியேறினானர்.
சாம் கர்ரன் அதிரடியாக ஆடி 53 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி குவாலிபயருக்கு தகுதிபெற்றது.
- முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.
- அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.
சிட்னி:
பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 65 பந்தில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையை சமன் செய்தார்.
அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 17.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், பிக்பாஷ் லீக் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் ஸ்டீவன் ஸ்மித். ஸ்மித் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.
டேவிட் வார்னர் 3 சதங்கள் அடித்து தனது சாதனையை சமன் செய்தவருக்கு மாலையில் ஸ்மித் சதமடித்து அந்த சாதனையை மீண்டும் தன்வசமாக்கினார்.
பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது.
- இறுதியில் மெல்போர்ன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் இன்று மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹசன் கான் 46 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் 4-வது பேட்டராக களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முகமது ரிஸ்வான் ரன்களை குவிக்க தடுமாறினார். 18 ஓவரில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 154 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ரிஸ்வானை வெளியேறுமாறு அணியின் கேப்டன் கை சைகை காட்டி அழைத்தார். இதனையடுத்து ரிஸ்வான் வெளியேறினார்.
இறுதியில் மெல்ர்போன் அணி 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. குறிப்பாக அவர் வெளியேறியதையடுத்து கடைசி 2 ஓவரில் அந்த 16 ரன்கள் எடுத்தது. இது தொடர்பான நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தும் செயல் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 257 ரன்கள் குவித்தது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது.
பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் பின் ஆலன் 79 ரன்னும், கூப்பட் கனோலில் 77 ரன்னும் அடித்தனர்.
பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் அவுட்டானார்.
அடுத்து இணைந்த ஜாக் வைல்டர்முத்-மேட் ரென்ஷா ஜோடி அதிரடியாக ஆடியது.
பெர்த் அணியின் பந்துவீச்சை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 212 ரன் சேர்த்த நிலையில் ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.
இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதன்மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது.
- 2024-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார்.
சென்னை:
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தார். 2025 ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இடம்பிடித்த அவர் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே. அணியில் இருந்து விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் கடந்த செப்டம்பரில் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதற்கு காரணமே உலகெங்கிலும் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் விளையாடி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரில் அவர் இணைந்தார். சிட்னி தண்டர் அணிக்காக கையெழுத்திட்டுள்ள அவர், பிபிஎல் தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரரானார். அவர் பிபிஎல் தொடரில் இணைந்ததை வீடியோ மூலம் வெளியிட்டார்.
இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசனில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார்.
இந்த சீசனுக்கான அவரது அணியான சிட்னி தண்டர், சென்னையில் பயிற்சியின்போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.
- ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது.
- இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார்.
ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட உள்ளார். அவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இணையவுள்ளார்.
பிபிஎல் (2011-12) சீசனில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார். அவர் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
- 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.
லாகூர்:
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.
பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.
இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.






