என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ்"

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது.

    முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
    • ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்ற பிறகு சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும்.

    இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனெனில், வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இஷான் கிஷன் (214 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (213), ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (155), திலக் வர்மா (151) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை.

    வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங், பும்ராவும் சுழற்பந்தில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஹெட்மயர், கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு, போவெல் ஆகியோர் பேட்டிங்கிலும், குடாகேஷ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்தியாவை போலவே வெஸ்ட்இண்டீஸ் அணியும் லீக் சுற்றில் தோல்வியை தழுவாமல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    இன்று மாலை 3 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • வரும் 1-ந் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
    • இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

    10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

    வரும் 1-ம் தேதி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தற்போது 2 புள்ளிகளை பெற்றுள்ளன.

    போட்டி ரத்தானால், தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால் ரன் ரேட்டில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை பெற்றுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இருப்பினும் கொல்கத்தாவில் போட்டி நடைபெறும் நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேப்டன் மார்க்ரம் 82 ரன்கள் குவித்தார்.
    • டி காக் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    டி20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதி ஓவரில் ஹோல்டர் 49 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷெப்பர்ட் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- டி காக் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் டி காக் 27 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர் அடங்கும்.

    இதனை தொடர்ந்து மார்க்ரம் உடன் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 27 பந்தில் அரை சதம் விளாசினார். கடைசி வரை விளையாடிய ரிக்கல்டன் 45 ரன்னிலும் மார்க்ரம் 82 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷெப்பர்ட் 52 ரன்கள் விளாசினார்.
    • ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    டி20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங்- ஹோப் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதனால் 2 ஓவரில் 29 ரன்கள் குவித்தது.

    இவர்களின் அதிரடி ஆட்டத்தை ரபாடா நிறுத்தினார். அதன்படி ஹோப் 6 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 2 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து இங்கிடி ஓவரில் கிங் 21 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரில் ரோஸ்டன் சேஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த ரதர்போர்ட் 12, ரோவ்மன் பவல் 9, மேத்யூ ஃபோர்டு 11 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதி ஓவரில் ஹோல்டர் 49 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷெப்பர்ட் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
    • இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

    அகமதாபாத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    எந்த அணி 2-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு சாதகமான நிலை ஏற்படும். இதனால் அந்த அணி வெற்றிக்காக இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

    குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 1 புள்ளிகளுடன் இருந்தன.

    இலங்கை ஒரு தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறவில்லை. இந்தநிலையில், நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இலங்கை அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. 

    டி௨௦ உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

    • 5.35 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியுள்ளது.
    • மைனஸ் 3.80 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா 3 ஆம் இடத்தில உள்ளது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் குவித்தது. ஹெட்மையர் 85 ரன்களும், ரோவ்மேன் பொவெல் 59 ரன்களும் விளாசினார்.

    பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்களில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 5.35 நெட் ரன் ரேட்டுடன் குரூப் 1 புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியுள்ளது. 3.80 நெட் ரன் ரேட்டுடன் தென் ஆப்பிரிக்கா அணி 2 ஆம் இடத்தில உள்ளது. மைனஸ் 3.80 நெட் ரன் ரேட்டுடன் இந்தியா 3 ஆம் இடத்தில உள்ளது.

    நாளை மறுநாள் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். ஒருவேளை அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் ஆகும்.

    ஆகவே இந்திய அணியின் அரையிறுதி முடிவை தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி தான் முடிவு செய்யும் என்பதால் இந்திய ரசிகர்கள் அந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

    • ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
    • ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    நடப்பு உலகக் கோப்பையில் கணிப்புக்கு மாறாக ஜிம்பாப்வே அணி திடீரென விசுவரூபம் எடுத்தது. லீக் சுற்றில் ஓமன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்தது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.

    இதில் இலங்கைக்கு எதிராக 179 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அட்டகாசப்படுத்திய ஜிம்பாப்வே தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.

    வெஸ்ட் இண்டீசும் அப்படி தான். ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை போட்டுத்தாக்கியது. 


    • அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.
    • பந்து வீச்சில் ஹோல்டர், போர்டே, குடகேஷ் மோட்டி பார்மில் இருக்கிறார்கள்.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு உலகக் கோப்பையில் கணிப்புக்கு மாறாக ஜிம்பாப்வே அணி திடீரென விசுவரூபம் எடுத்தது. லீக் சுற்றில் ஓமன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்தது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.

    இதில் இலங்கைக்கு எதிராக 179 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அட்டகாசப்படுத்திய ஜிம்பாப்வே தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.

    வெஸ்ட் இண்டீசும் அப்படி தான். ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை போட்டுத்தாக்கியது. பேட்டிங்கில் கேப்டன் ஷாய் ஹோப் (2 அரைசதம் உள்பட 155 ரன்), ரூதர்போர்டு, ஹெட்மயர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் ஹோல்டர், போர்டே, குடகேஷ் மோட்டி பார்மில் இருக்கிறார்கள். என்றாலும் ஜிம்பாப்வே இப்போது அபாயகரமான அணியாக தெரிவதால், முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடும் என்று நம்பலாம்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் - இத்தாலி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இத்தாலி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹோப் 75 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இத்தாலி அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரங்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. டீக் போட்டியில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வசதியுள்ளது.

    • ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதையடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டீ, ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    133 எனும் எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வெஸ்ட் இண்டஸ் அணியின் துவக்க வீரர் பிரான்டன் கிங் 22 ரன்களுக்கு (4 பவுண்டரிகள்) ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 61 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), ஷிம்ரன் ஹெட்மையர் 32 பந்துகளில் 46 ரன்கள் (4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) விளாசினர்.

    இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை குவித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேபாளம் சார்பில் நந்தன் யாதவ் மட்டும் 1 விக்கெட் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் ெவற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    • தீபிந்திர சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் நேபாளம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதையடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி ஆரம்பத்திலேயே விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் குஷல் (1), ஆசிஃப் (11) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் பௌடெல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய தீபிந்திர சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 47 பந்துகளில் 58 ரன்கள் (3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) அடித்து அசத்தினார். இவரைத் தொடர்ந்து ஆடியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியில் களமிறங்கிய குல்சன் (11) மற்றும் சோம்பல் கமி 15 பந்துகளில் 26 ரன்கள் (4 பவுண்டரிகள்) அடித்தார். இதனால் நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும், அகீல் ஹொசைன், மேத்யூ ஃபோர்டீ, ஷமர் ஜோசப் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    ×