என் மலர்
நீங்கள் தேடியது "NZvWI"
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து 231 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வில்லியம்சன் அதிகபட்சமாக 52 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்167 ரன்னில் சுருண்டது. ஷாய் ஹோப் 56 ரன்கள் அடித்தார்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி 5 விக்கெட் வீழ்த்தினார்.
64 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்தின் கான்வே 37 ரன்னிலும், வில்லியம்சன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த டாம் லாதம்-ரச்சின் ரவீந்திரா ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டாம் லாதம் 145 ரன்னிலும், ரவீந்திரா 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்தது. அந்த அணி இதுவரை 481 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஓஜய் ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஹாமில்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டி முடிவில் நியூசிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரோஸ்டன் சேஸ் 38 ரன் அடித்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 30.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 64 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது. மேட் ஹென்றி ஆட்ட நாயகனாகவும், கைல் ஜேமிசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
நேப்பியர்:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டி20 தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. அடுத்து, நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 34 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 34 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அவர் 69 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 33.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் குவித்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. டேவான் கான்வே 90 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளதும்,
- நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 16-ந் தேதி நடக்கிறது.
- இந்த ஒருநாள் தொடருக்கான ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 வடிவ கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 3-1 (ஒரு ஆட்டம் மழையால் பாதிப்பு) என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிங் இந்த தொடரில் இடம் அளிக்கவில்லை.
அவருக்கு பதிலாக ஜான் ஜம்பல் இடம் பிடித்துள்ளார். தொடக்க வீரரான இவர் 6 ஆண்டுக்கு பிறகு அணியில் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:-
ஷாய் ஹோப் (கேபடன்), அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ஜான் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஜோஹன் லெய்ன், காரி பியர், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.
- முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ஷெப்பர்ட் 36 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 15.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
- வெஸ்ட் இண்டீஸ் 12.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் அடித்திருந்தது.
- வெஸ்ட் இண்டீஸ் அடுத்த 6.3 ஓவர்களில் 78 ரன்களை அடித்து அசத்தியது
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.
முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இன்று 3 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கான்வே 56 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
12.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்து அடித்திருந்தது. அப்போது 9 விக்கெட்டுக்கு கைகோர்த்த ரோமாரியோ ஷெஃபெர்ட் - ஷாமர் ஸ்பிரிங்கர் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை நாளா பக்கமும் பறக்கவிட்டு ரன்களை சேர்த்தது.
இந்த ஜோடி அடுத்த 6.3 ஓவர்களில் 78 ரன்களை சேர்த்தது. கடைசி 7 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாமர் ஸ்பிரிங்கர் தனது விக்கெட்டை பறிகொடுக்க இறுதி ஓவரில் ரோமாரியோ ஷெஃபெர்ட்டும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் 168 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் 9 ரன்கள் விதிசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ரோமாரியோ ஷெஃபெர்ட் 49 ரன்னும் ஷாமர் ஸ்பிரிங்கர் 39 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது.
- அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
- கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மென் பாவெல் 16 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய மார்க் சாப்மேன் 28 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 208 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 94 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 7 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தும் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ரோவ்மென் பாவெல் 16 பந்துகளில் 45 ரன்னும் ரோமாரியோ ஷெஃபெர்ட் 16 பந்துகளில் 34 ரன்னும் அடித்து அவுட்டாக்கினர். மேத்யூ போர்டே 13 பந்துகளில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி தரப்பில், சோதி, சான்ட்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனாகியது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆக்லாந்து:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். ரோவ்மன் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.
நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஆனாலும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து போராடி 55 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது
டிரினிடாட்:
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்துவருகிறது.
வெஸ்ட் இண்டீசில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்தில் 68 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 40 ரன்னும், பின் ஆலன் 26 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்ட நாயகனாக ரூதர்போர்டு தேர்வு செய்யப்பட்டார்.






