என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 தொடர்"

    • காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

    இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அதன்படி காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடித்தால் சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக உள்ளது.

    • முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.4 ஓவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38, ஷெப்பர்ட் 36 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அதிரடியாக விளையாடி 15.4 ஓவரில் 141 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. 

    • இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் இன்று ஒரு விக்கெட் எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.

    100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுகிறார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார்.

    சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

    • முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 19 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கில்- சூர்யகுமார் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன
    • இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.

    அந்த வகையில் 2012 - டிரா 1-1, 2016 - இந்தியா வெற்றி 3-1, 2018 - டிரா 1-1, 2020-ல் இந்தியா வெற்றி 2-1 என வரலாறு உள்ளது. இந்த வரலாறு தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

    • முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 139 ரன்னில் சுருண்டது.

    ராவல்பிண்டி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி லாகூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

    • 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவாக காணப்படுகிறது.
    • இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    உலக சாம்பியனான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் இறங்குகிறது. ஒரு நாள் தொடருடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட அணியாகும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவாக காணப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் 27 ஆட்டங்களில் ஆடி 24-ல் வெற்றி பெற்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (20 ஓவர்) தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடியது.

    தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆசிய கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதம், 19 சிக்சர் உள்பட 314 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். சுப்மன் கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சூர்யகுமாரின் ஆட்டத்திறன் பாதிப்பு தான் கவலை அளிக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 7 இன்னிங்சில் 72 ரன் மட்டுமே எடுத்த சூர்யகுமார் யாதவ் கடைசி 14 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் ரன்வேட்டை நடத்த தொடங்கி விட்டால் அணி இன்னும் வலுவடையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். 3-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா இடையே போட்டி நிலவுகிறது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை உருவாக்கும் திட்டத்திற்கு, அச்சாரமாக இந்த தொடர் அமையும். அதனால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வரிந்து கட்டுவார்கள்.

    ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளூர் சூழலில் ஆடுவது சாதகமாகும். ஒரு நாள் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். பின்னங்கால் காயத்தில் இருந்து குணமடைந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார். மற்றபடி கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 37 பந்தில் சதம் அடித்தவரான டிம் டேவிட், மிட்செல் ஓவன் அதிரடி காட்ட ஆயத்தமாக உள்ளனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சீன் அப்போட் மிரட்டக்கூடியவர்கள்.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மைதானத்தில் ஆண்கள் 20 ஓவர் மற்றும் பிக்பாஷ் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் எடுக்கப்பட்டதில்லை. இங்கு இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே அல்லது ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேட் குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
    • ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள்கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி நாளை கான்பெராவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் முதல் டி20 போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    அங்கு பனிபொழிவு அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர்.

    இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • இரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.

    அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.45-க்கு தொடங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவின் உள்ளுர் நேரப்படி முதல் 3 போட்டிகள் மாலை 7.15 மணிக்கு தொடங்குகிறது. கடைசி 2 போட்டிகள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.ஆனால் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கே தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியாவில் நேரம் மாறுபட்டாலும் இந்தியாவில் அதே நேரத்தில் போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சீஃபெர்ட் 48 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் 4 பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷின் அதிரடியால் அந்த அணி 18 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்திருந்தார்.

    நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 3-வது டி20 போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
    • பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. சாஹிப்சாதா பர்ஹான் 53 பந்தில் 74 ரன்னும் (3பவுண்டரி, 5 சிக்சர்), சயிம் அயூப் 49 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான்13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    ×