என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 series"

    • விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.
    • 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் கடைசி தொடர் என்பதால் அவர்கள் தவறுகளை திருத்தி கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளனர்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று அரங்கேறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஜாலத்தால் (8 சிக்சருடன் 84 ரன்) 238 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் 44 ரன்கள் விளாசி வலுவூட்டினார். ஆனால் 2½ ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பிய இஷான் கிஷன் (8 ரன்) ஏமாற்றம் அளித்தார்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்தை 190 ரன்னில் மடக்கினர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (2 விக்கெட்) கட்டுக்கோப்புடன் பந்து வீசி கவனத்தை ஈர்த்தனர். ஆனால் பீல்டிங் தான் சற்று சொதப்பலாக இருந்தது. இரண்டு எளிதான கேட்ச் மற்றும் ஒரு ரன்-அவுட் வாய்ப்பை வீணடித்தனர். எனவே பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். மற்றபடி இதே உத்வேகத்துடன் 2-வது ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். விரலில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான்.

    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் கிளென் பிலிப்ஸ் (78 ரன்), சாப்மேன் (39 ரன்) ஆகியோர் பேட்டிங்கிலும், ஜேக்கப் டப்பி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர். 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் கடைசி தொடர் என்பதால் அவர்கள் தவறுகளை திருத்தி கொண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளனர். இதனால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் அல்லது ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி.

    நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜாமிசன் அல்லது மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவருக்கு முன்பு 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கானும் 2023-ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக கரீம் ஜனட் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. டார்விஷ் ரசூல் 68 ரன்னும், செதிகுல்லா அடல் 53 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் அரை சதமடித்து அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 17 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.
    • 2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை.

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி மொத்தம் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அவற்றில் இந்த தொடரும் ஒன்று. உலகக் கோப்பை போட்டிக்கான கனகச்சிதமான அணியை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் பக்கபலமாக இருக்கும் என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. இதில் ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. அவர் கடைசியாக களம் கண்ட 18 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் வலிமையடையும். 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய அவர் அண்மையில் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 148 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இந்த தொடரிலும் அவரது அதிரடி ஜாலத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பும்ரா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா இடையே போட்டி நிலவுகிறது.

    கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இப்போது ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இருவரையும் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன், உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவின் வருகை அணியை சரியான கலவையில் வைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும்.

    2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான எங்களது தயாரிப்பு, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற உடனே தொடங்கி விட்டது. அதில் இருந்து சில புதிய விஷயங்களை முயற்சித்து பார்த்துள்ளோம். அவை அணிக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. கடைசியாக விளையாடிய 5-6 தொடர்களில் ஒரே மாதிரியான அணி கலவையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதாவது அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ததில்லை. எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை தொடருவோம்' என்றார்.

    தென்ஆப்பிரிக்க அணி எய்டன் மார்க்ரம் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டிவால்ட் பிரேவிஸ், குயின்டான் டி காக், கார்பின் பாஷ், ரீஜா ஹென்ரிக்ஸ் என 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய அதிரடி பட்டாளங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். கேஷவ் மகராஜ், மபகா, இங்கிடி, மார்கோ யான்சென் ஆகியோர் பந்து வீச்சு தாக்குதலுக்கு ஆயத்தமாக உள்ளனர்.

    2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையில் உள்ளனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சிறந்த வீரர். உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்கு என்று பிரத்யேக வியூகம் எதுவும் தீட்டவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே குதூகலப்படுத்தும் வடிவமாகும். நாங்களும் அந்த பாணியிலேயே விளையாட விரும்புகிறோம். வீரர்கள் அழுத்தமின்றி உற்சாகமாக விளையாடி தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டி நடக்கும் கட்டாக்கில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இரு தோல்வியும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்தவையாகும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், இங்கிடி, அன்ரிச் நோர்டியா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். அபிஷேக் 19 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கில்- சூர்யகுமார் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன
    • இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    • சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதுவரை டி20 தொடரை இந்திய அணி இழந்தது இல்லை.

    அந்த வகையில் 2012 - டிரா 1-1, 2016 - இந்தியா வெற்றி 3-1, 2018 - டிரா 1-1, 2020-ல் இந்தியா வெற்றி 2-1 என வரலாறு உள்ளது. இந்த வரலாறு தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

    • முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது.
    • இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 139 ரன்னில் சுருண்டது.

    ராவல்பிண்டி:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18.1 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி லாகூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

    • 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவாக காணப்படுகிறது.
    • இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    உலக சாம்பியனான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களம் இறங்குகிறது. ஒரு நாள் தொடருடன் ஒப்பிடும் போது இது முற்றிலும் மாறுபட்ட அணியாகும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் வலுவாக காணப்படுகிறது. 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் 27 ஆட்டங்களில் ஆடி 24-ல் வெற்றி பெற்று ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. அண்மையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (20 ஓவர்) தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடியது.

    தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆசிய கிரிக்கெட்டில் 7 ஆட்டங்களில் ஆடி 3 அரைசதம், 19 சிக்சர் உள்பட 314 ரன்கள் குவித்து தொடர்நாயகனாக ஜொலித்தார். சுப்மன் கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் சூர்யகுமாரின் ஆட்டத்திறன் பாதிப்பு தான் கவலை அளிக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 7 இன்னிங்சில் 72 ரன் மட்டுமே எடுத்த சூர்யகுமார் யாதவ் கடைசி 14 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் ரன்வேட்டை நடத்த தொடங்கி விட்டால் அணி இன்னும் வலுவடையும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கிறார்கள். 3-வது வேகப்பந்து வீச்சாளர் இடத்துக்கு ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா இடையே போட்டி நிலவுகிறது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு வலுவான அணியை உருவாக்கும் திட்டத்திற்கு, அச்சாரமாக இந்த தொடர் அமையும். அதனால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வரிந்து கட்டுவார்கள்.

    ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளூர் சூழலில் ஆடுவது சாதகமாகும். ஒரு நாள் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். பின்னங்கால் காயத்தில் இருந்து குணமடைந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார். மற்றபடி கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 37 பந்தில் சதம் அடித்தவரான டிம் டேவிட், மிட்செல் ஓவன் அதிரடி காட்ட ஆயத்தமாக உள்ளனர். பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், சீன் அப்போட் மிரட்டக்கூடியவர்கள்.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் இந்தியாவும், 11-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    கான்பெர்ராவில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். லேசாக மழை பெய்வதற்கு கூட வாய்ப்புள்ளது என அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த மைதானத்தில் ஆண்கள் 20 ஓவர் மற்றும் பிக்பாஷ் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் எடுக்கப்பட்டதில்லை. இங்கு இதுவரை நடந்துள்ள ஐந்து சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 178 ரன்களே அதிகபட்ச ஸ்கோராகும். பவுண்டரி தூரம் அதிகம் என்பதால் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே அல்லது ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா.

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது சேவியர் பார்லெட், நாதன் எலிஸ், மேட் குனேமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
    • ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    கான்பெரா:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள்கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி நாளை கான்பெராவில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் முதல் டி20 போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    அங்கு பனிபொழிவு அதிகமாக உள்ளதால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருப்பினும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டனர்.

    இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • 3-வது டி20 போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
    • பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. சாஹிப்சாதா பர்ஹான் 53 பந்தில் 74 ரன்னும் (3பவுண்டரி, 5 சிக்சர்), சயிம் அயூப் 49 பந்தில் 66 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் பாகிஸ்தான்13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

    • ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார்.

    வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 25-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் மே 28-ம் தேதி முதல் நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனார்.

    இந்நிலையில் இந்த தொடரில் இருந்து வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. அதன்படி பஞ்சாப் கிங்சுக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார். மேலும் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதிலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் கலித் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×