search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IND vs NZ"

    • இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை நடக்கிறது.
    • ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஞ்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2- வது ஆட்டத்தில் 8 விக்கெட்டிலும், இந்தூரில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 90 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (27-ந்தேதி) நடக்கிறது.

    ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் கடந்த நவம்பர் நியூசிலாந்து பயணத்தின் போது 20 ஓவர் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    20 ஓவர் போட்டியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் ஜொலிக்கிறார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது கடினம். சுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்து உள்ளது. பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

    ஒருநாள் தொடரில் இடம்பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் தொடரில் ஆடிய ஒரு சில வீரர்கள் மட்டுமே 20 ஓவர் அணியில் இடம் பெற்று உள்ளனர்.

    நியூசிலாந்து 20 ஓவர் அணிக்கு சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு 20 ஓவர் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 23-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை 22 போட்டியில் இந்தியா 12, நியூசிலாந்து 9-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது.

    நாளைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்தியா 3 போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
    • ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ராய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் அனல் பறக்கும் பந்து வீச்சால் 34.3 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது.

    பிலிப்ஸ் அதிகபட்சமாக 36 ரன்னும், சாண்ட்னெர் 27 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி 18 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

    கேப்டன் ரோகித் சர்மா 50 பந்தில் 51 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன் கில் 40 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    கடந்த 5 ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். உள்நாட்டில் சாதிக்கும் அளவுக்கு அவர்களின் பந்து வீச்சு திறன் இருக்கிறது.

    நான் என்னுடைய ஆட்டத்தை சிறிது மாற்ற விரும்புகிறேன். அதிக அளவில் ரன்கள் குவித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அது தான் முக்கியம் நான் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்று எனக்கு தெரியும்.

    ஆனால் அதுகுறித்து நான் அதிகமாக கவலைப்படுவதில்லை. நான் பேட்டிங் செய்யும் விதம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அனைத்து போட்டிகளிலும் ஒரே மாதிரியான பேட்டிங் திறனையே வெளிப்படுத்துகிறேன். பெரிய அளவில் ரன்களை விரைவில் குவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒரு நாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்ற ரோகித் சர்மா கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. 

    • முதல் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை.
    • தொடக்கத்தில் இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பின்னர் ரன்களை வாரி கொடுத்து விட்டனர்.

    ராய்ப்பூர்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.

    350 ரன் இலக்கை நெருங்கி வந்த நியூசிலாந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது.

    இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக உள்ளது. முதல் ஆட்டத்தில் சுப்மன்கில் இரட்டை சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார்.

    விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய அணி பந்து வீச்சில் முகமது சிராஜ் நல்ல நிலையில் உள்ளார். முகமது சமி, குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.

    முதல் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினாலும் பின்னர் ரன்களை வாரி கொடுத்து விட்டனர்.

    இதனால் பந்து வீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். நாளைய போட்டியில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டாம்லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலென், கான்வே, மிட்செல், பிலிப்ஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் பெர்குசன், சாண்ட்னர், டிக்னர் ஆகியோர் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர் பிரேஸ் வெல், முதல் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை நொறுங்கி 57 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கி வந்தது.

    மேலும் பிரேஸ்வெல் பந்துவீச்சலும் சமீபகாலமாக அசத்தி வருகிறார். தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து உள்ளது. இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.

    • இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஆகியோர் இடம் பெறவில்லை.

    வெலிங்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களில் ரோகித் சர்மா, விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    20 ஓவர் போட்டிக்கு ஹர்த்திக் பாண்ட்யாவும், ஒரு நாள் போட்டி தொடருக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந் தேதியும், 3-வது போட்டி 22-ந் தேதியும் நடக்கிறது.

    3 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 25-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தநிலையில் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேப்டனாக கேன் வில்லியம்சன் நீடிக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், தொடக்க வீரர் மார்டின் குப்தில் ஆகியோர் இடம் பெறவில்லை.

    குப்தில் சமீப காலமாக ரன் குவிக்க திணறி வருகிறார். போல்ட் கடந்த ஆகஸ்டு மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

    3-வது ஒருநாள் போட்டியில் மட்டும் ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீசம் இடம்பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணத்துக்காக அப்போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஹென்றி நிக்கோலஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    20 ஓவர் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே, டேரிஸ் மிட்செல், கிளைன் பிலிப்ஸ், ஜிம்மி நீசம், மிச்செல் சான்ட்னெர், பெர்குசன், சோதி, டிம் சவுதி, டிக்னெர், ஆடம் மில்னே.

    ஒருநாள் போட்டி: வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், டாம் லாதம், டேவன் கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், டேரிஸ் மிட்செல், ஜிம்மி நீசம், பிலிப்ஸ், சான்ட்னெர், டிம் சவுதி, மேட் ஹென்றி, ஆடம் மில்னே, பெர்குசன்.

    ×