என் மலர்
விளையாட்டு

இந்தூரில் தங்கியுள்ள சுப்மன்கில் அறையில் ரூ.3 லட்சத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்?
- குடிநீரைக் குடித்தவர்களுக்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
- சுமார் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது.
இந்தப்போட்டியை விட மாசடைந்த குடிநீர் பிரச்சனை பேசுபொருளாகியுள்ளது. இந்தூரில் உள்ள பகீரதபுரத்தில் நர்மதா ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும். குடிநீரைக் குடித்தவர்களுக்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சுமார் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விளையாட இந்தூருக்கு வந்து இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தனது ஓட்டல் அறையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குடிநீரை தூய்மை செய்யும் எந்திரத்தை எடுத்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யும் குடிநீரை பல ஆண்டுகளாக குடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






