என் மலர்
நீங்கள் தேடியது "சுப்மன்கில்"
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
- கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.
சென்னை:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
அவரால் உடனடியாக விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் கவுகாத்தியில் நடைபெறும் 2-வது டெஸ்டில் சுப்மன் கில் ஆடுவது சந்தேகமே. கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் பாதியில் வெளியேறிய அவர் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை.
இந்நிலையில் அவருக்கான இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது மிக ஆவலை எதிர்நோக்கி உள்ளது. அதன்படி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அணியின் பயிற்சியின் போது படிக்கல், சாய் சுதர்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார்.
- 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில், "பண்ட்டின் ரன் அவுட், ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது. ஜடேஜாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்காவிட்டாலும் அவர் சிறப்பாக ஆடினார்.
வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். இலக்கு பெரிய ஸ்கோர் இல்லையென்பதால், நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்திற்குள் வந்துவிடுவோம் என நினைத்தோம். 5 நாட்களும் போராடியதை எண்ணி பெருமை கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
- சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன்.
- அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பேட்ஸ்மேன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இரட்டை சதமும், 3-வது போட்டியில் சதமும் அடித்தார்.
அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ரன்களை குவித்து வரும் சுப்மன்கில்லை பலர் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்தார்.
சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன். அவர் அனைத்து வடிவ வீரராக உருவாக முடியும் என்று அடிக்கடி கூறி வருகிறேன்.
விராட் கோலி பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். அது போன்ற அதிக திறமை சுப்மன் கில்லிடம் இருக்கிறது. விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார்.
அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் சதத்தை அடித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் ஆறு சதங்களை அடித்து உள்ளார். சுப்மன் கில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
- எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.
பெங்களூரு:
பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.
நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.
இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- மிகவும் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும்.
- குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
மும்பை:
இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக ரன் குவித்த வீரராக சுப்மன்கில் இருக்கிறார்.
குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 16 ஆட்டத்தில் விளையாடி 851 ரன் குவித்துள்ளார். 3 சதமும், 4 அரை சதமும் அடித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான சதமும், மும்பைக்கு எதிரான 2-வது தகுதி சுற்றில் அடித்த செஞ்சுரியும் மிகவும் முக்கியத்துவம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் சுப்மன் கில் ஆட்டம் தன்னை மிகவும் கவர்ந்ததாக கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சுப்மன்கில்லின் ஆட்டம் இந்த சீசனில் மறக்க முடியாத ஒன்றாகும். குறிப்பாக அவரது இரண்டு சதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சதம் மும்பை இந்தியன்சுக்கு நம்பிக்கையை கொடுத்தது. மற்றொன்று மும்பைக்கு தோல்வியை கொடுத்தது. இதுதான் கிரிக்கெட் விளையாட்டின் இயல்பு.
சுப்மன்கில்லின் குணம், அமைதி, ரன் குவிக்க வேண்டும் என்ற ஆர்வம், விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் எடுக்க ஓடுவது போன்ற கள செயல்பாடு என்னை கவர்ந்தது.
மிகவும் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் குவிக்க சரியான தருணத்தில் அபாரமாக ஆட வேண்டும். அதை சுப்மன்கில் மும்பை இந்தியன்சுக்கு எதிராக 12-வது ஓவர் முதல் செய்திருக்கிறார். அது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும்.
குஜராத் அணி வலிமை யானது. சுப்மன்கில், ஹார்திக் பாண்டயா, மில்லர் விக்கெட்டுகள் சென்னை சூப்பர் கிங்சுக்கு முக்கியமானது. அதேபோல சென்னை அணியும் பலமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. 8-வது பேட்ஸ்மேனாக டோனி களம் இறங்குகிறார்.
இந்த இறுதிப்போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும்.
இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.






