என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருக்கும்- சுப்மன்கில்
- நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
- எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.
பெங்களூரு:
பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.
நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.
இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.