என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் போட்டியின் போது காயம்: பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகும் முஷ்தபிசூர் ரஹ்மான்
- ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார்.
வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 25-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் மே 28-ம் தேதி முதல் நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனார்.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. அதன்படி பஞ்சாப் கிங்சுக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார். மேலும் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதிலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் கலித் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






