search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mustafizur Rahman"

    • முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.

    இந்த தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வரும் 5-ம் தேதி ஐதராபாத்தில் சந்திக்கிறது.

    இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தஃபிசுர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விசா மீதான பரிசீலனை முடிவுற்ற பின் அவர் வரும் 7-ம் தேதி அல்லது 8-ம் தேதிகளில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் 8-ம் தேதி இந்தியா திரும்புவதாக இருந்தால் அவர் அன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தையும் தவற விட வாய்ப்பு உள்ளது.

    நடப்பு ஐ.பி.எல் தொடரில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • நேற்றைய போட்டியில் காயமடைந்த வங்காளதேச வீரர், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னைக்கு கிளம்பியுள்ளார்.

    டாக்கா:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். உடனே அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

    இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது. அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள். அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். என பதிவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அவர் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
    • நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணி 40.2 ஓவரில் 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அதன்பின் அவரால் எழுந்து நிற்ககூட முடியாத நிலையில், அணியின் மருத்துவ குழுவினர் முஸ்தபிசுர் ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டுள்ள செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    • வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது.
    • டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    சி.எஸ்.கே வீரர் பத்திரனாவுக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் வரும் ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் அவர் பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியின்போது இலங்கை வீரர் பத்திரனாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 4 முதல் 5 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவித்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடிய பத்திரனா இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பத்திரனாவுக்கு பதிலாக, வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை விளையாட வைக்கலாம் என்று சென்னை அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இணைந்துள்ளார்

    மலிங்காவைப் போன்ற பவுலிங் ஆக்ஷனைக் கொண்ட மதுலன் போட்டி ஒன்றில் வீசிய யார்க்கர் பந்தைப் பார்த்து, அவரை நெட் பவுலராக சேர்க்க சி.எஸ்.கேவிடம் டோனி பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசத்தின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.
    • சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முஸ்தபிசுர் ரகுமானை 2 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

    சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடிக்கும், ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை அபாரமாக வீசய முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காள தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 249 ரன்கள் குவித்தது. பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் ஓவர் செல்ல செல்ல இலக்கை நோக்கி பயணம் செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான வீசினார். போட்டியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    முஷ்டாபிஜூர் ரஹ்மானின் அபார பந்து வீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காள தேசம், பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.



    கடைசி ஓவரை அபாரமாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மானை கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சு குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘போட்டியின் முடிவில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் காட்டியவர் போன்று காட்சியளித்தார். கடைசி ஓவரில் 8 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் கடினமானது. அனைத்து புகழும் முஷ்டாபிஜூர் ரஹ்மானையே சாரும்.

    போட்டியின் மத்தியில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தசைப்பிடிப்பால் சற்று அவதிப்பட்டார். அவர் 10 ஓவர் முழுவதும் வீச வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அவரால் 10 ஓவரை நிறைவு செய்ய முடியவில்லை. அவர் பந்து வீசியது மிகவும் கடினமானது’’ என்றார்.
    ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட காயத்தால் வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் வெஸ்ட் இண்டீஸ் தொடரை இழந்துள்ளார். #WIvBAN
    வங்காள தேச அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அப்போது வலது கால் பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இந்த காயத்திற்கான சிகிச்சையை முஷ்டாபிஜூர் ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாட இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான வங்காள தேச அணி அறிவிக்கப்பட்டது. இதில் முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவில்லை. ‘‘ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே இரண்டாவது டெஸ்டிற்கு முன் முஷ்டாபிஜூர் ரஹ்மான் குணமடைய முடியும். இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்’’ என்று அணியின் தலைமை தேர்வாளர் அபேடின் தெரிவித்துள்ளார்.



    வெஸ்ட் இண்டீஸ்- வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூலை 4-ந்தேதி ஆண்டிகுவாவிலும், 2-வது டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி ஜமைக்காவிலும் தொடங்குகிறது.

    மூன்று டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ள வலது கை வேகப்பந்து வீச்சாளர் அபு ஜாயத் முதன்முறையாக டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் விலகியுள்ளார். #AFGvBAN
    ஆப்கானிஸ்தான் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் டேராடூனில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டங்கள் ஜூன் 3, 5 மற்றும் 7-ந்தேதிகளில் நடக்கிறது.

    இதற்கான வங்காள தேச அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஜூர் ரஹ்மான் இடம்பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரின்போது இடது கால் பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.



    இந்த காயம் குணமடைய இரண்டு அல்லது மூன்ற வாரங்கள் ஆகும் என டாக்டர்கள் வலியுறுத்தியதால், ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து முஸ்டாபிஜூர் ரஹ்மான் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக புதிய வீரர் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த தொடருக்காக இன்று வங்காள தேசத்தில் இருந்து அந்த அணி டேராடூன் புறப்படுகிறது.

    ×