என் மலர்
நீங்கள் தேடியது "Jake Fraser-McGurk"
- ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்-க்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முஸ்தஃபிசுர் சென்றுள்ளார்
டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், UAE தொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றதால் குழப்பம்
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் புறப்பட்டு சென்றதால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லா சான்று கோரி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வராததால், ஏற்கனவே உள்ள அட்டவணையின்படி அவர் UAE புறப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ. நிசாமுதின் தெரிவித்தார்.
- இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
மும்பை:
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆறு போட்டிகளில் விளையாடி, 9.17 என்ற மோசமான சராசரியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிடிக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரை வாங்கி உள்ளது.
- ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது. 23-ந் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும் டெல்லி அணி வீரருமான லுங்கி இங்கிடி விலகி உள்ளார். இவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை டெல்லி அணி வாங்கியுள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசினார்.

டெல்லி அணியில் இருந்து ஏற்கனவே ஹாரி ப்ரூக் சொந்த காரணங்களுக்காக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது