search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lungi Ngidi"

    • இங்கிடிக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரை வாங்கி உள்ளது.
    • ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது. 23-ந் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரும் டெல்லி அணி வீரருமான லுங்கி இங்கிடி விலகி உள்ளார். இவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கை டெல்லி அணி வாங்கியுள்ளது. இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். 

    இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசினார்.

    டெல்லி அணியில் இருந்து ஏற்கனவே ஹாரி ப்ரூக் சொந்த காரணங்களுக்காக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

    தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட் மிகப்பெரிய பிரச்சனை என ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #DaleSteyn
    இங்கிலாந்தில் அடுத்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட்டுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.



    எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.

    35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.



    ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.

    டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை. #ENGvIND
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தரங்கா 9 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் ரன்ஏதும் எடுக்காமலும், குசால் பெரேரா 12 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    அதன்பின் டிக்வெல்லா உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த டிக்வெல்லா 69 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் மீண்டும் இலங்கை விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தது. ஷெஹன் ஜெயசூர்யா 18 ரன்னிலும், திசாரா பேரேரா 19 ரன்னிலும், அகிலா தனஞ்ஜெயா 9 ரன்னிலும், சுரங்கா லக்மல் 7 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    கேப்டன் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி 79 ரன்கள் சேர்க்க இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் நிகிடி, பெலுக்வாயோ தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #SRHvCSK
    ஐபிஎல் 2018 தொடரின் ‘குவாலிபையர் 1’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் பில்லிங்ஸ் நீக்கப்பட்டு, ஷேன் வாட்சன் சேர்க்கப்பட்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.



    தவான், கோஸ்வாமி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சாஹல் வீசிய பந்தில் தவான் க்ளீன் போல்டானார். அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார். இந்த ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்.



    ஆட்டத்தின் 4-வது ஓவரில் கோஸ்வாமி 12 ரன்கள் எடுத்த நிலையில் லுங்கி நிகிடி பந்தில் வெளியேறினார். அடுத்த ஓவரில் 15 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை சர்துல் தாகூர் வீசினார்.



    கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்கும்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4.2 ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. சாகிப் அல் ஹசன் 12 ரன்னிலும், மணிஷ் பாண்டே 8 ரன்னிலும், யூசுப் பதான் 24 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 15 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.



    18-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் இரண்டு சிக்சர் விளாசினார். இதனால் 17 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிராத்வைட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச சன்சைரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்தது. பிராத்வைட் 29 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 140 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.சர்துல் தாகூரின் கடைசி 2 ஓவரில் 37 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
    நான் ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி. இவர் நான்கு ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    லுங்கி நிகிடியை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் எடுத்தது. ஐந்து போட்டியில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தான், ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார்.



    இதுகுறித்து நிகிடி கூறுகையில் ‘‘முதலில் ஐபிஎல் ஏலத்தில் நான் ஏலம் எடுக்கப்படுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் மற்றும் கேப்டன் டோனி ஏலம் எடுத்தது சிறப்பானது.

    அனுபவம் என் கண்முன்னே கிடைத்துக் கொண்டு இருக்கிறது. இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே விளையாடியதே கிடையாது. இந்த இடம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது காண்பதற்கானது. ஆகவே, எனக்கு சிறந்ததாக இருக்கிறது’’ என்றார்.
    புனேயில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். #IPL2018 #CSKvKXIP
    ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.

    இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.



    அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvCSK
    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.



    அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    ×