search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DDvCSK"

    டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvCSK
    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ப்ரித்வி ஷா 17 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், பந்த் இருவரையும் ஒரே ஓவரில் லுங்கி நிகிடி வீழ்த்தினார். அதன்பின் வந்த கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்னிலும், அபிஷோக் ஷர்மா 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க டெல்லி அணியின் ஸ்கோர் அப்படியே படுத்தது.



    அதன்பின் வந்த விஜய் சங்கர், எச்.பட்டேல் தாக்குப்பிடித்து ஓரளவிற்கு ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ். விஜய் சங்கர் 28 பந்தில் 36 ரன்களும், ஹர்ஷல் பட்டேல் 16 பந்தில் 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #DDvCSK
    ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் சுண்ட, எம்எஸ் டோனி ‘ஹெட்’ என அழைத்தார். எம்எஸ் டோனி அழைத்தபடி ‘ஹெட்’ விழ, டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேவிட் வில்லே நீக்கப்பட்டு, லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷேன் வாட்சன், 2. அம்பதி ராயுடு, 3. சுரேஷ் ரெய்னா, 4. சாம் பில்லிங்ஸ், 5. டோனி, 6. வெயின் பிராவோ, 7. ஜடேஜா, 8. ஹர்பஜன் சிங், 9. தீபக் சாஹர், 10. சர்துல் தாகூர். 11. லுங்கி நிகிடி
    ×