search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "IPL 2018"

  ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019
  இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.

  இதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 65 மில்லியன் டாலர்கள் மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளது. #IPL2018 #ChennaiSuperKings

  புதுடெல்லி:

  11-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி 2 ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

  இந்நிலையில், இந்த சீசனில் பங்கேற்ற 8 அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 
   
  ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு: 

  1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டாலர்கள்
  2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 62 மில்லியன் டாலர்கள்
  3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 54 மில்லியன் டாலர்கள்
  4. மும்பை இந்தியன்ஸ் - 53 மில்லியன். டாலர்கள்
  5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 49 மில்லியன் டாலர்கள்
  6. டெல்லி டேர்டெவில்ஸ் - 44 மில்லியன் டாலர்கள்
  7. ராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில்லியன் டாலர்கள்
  8. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டாலர்கள்
   


  அந்த தகவலின்படி ஐ.பி.எல். தொடரின் மொத்த பிராண்ட் மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இது கடந்த 11 ஆண்டுகளை விட 37% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #ChennaiSuperKings
  ஐபிஎல் தொடரில் நான் லோ-ஆர்டர் பேட்டிங் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது எனக்கு புதைமணல் போன்றது என டோனி தெரிவித்துள்ளார். #MSDhoni
  ஐபிஎல் 11-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரூபித்து காட்டியது.

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனான டோனி டார் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி அசத்தினார். அவர் 16 போட்டியில் 455 ரன்கள் குவித்தார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். 36 வயதாகும் எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லோ-ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்குவது எனக்கு புதைமணலில் ஓடுவது மாதிரி என தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து எம்எஸ் டோனி கூறுகையில் ‘‘நான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சில வருடத்திற்கு முன்பு பிட்னஸ் பேச்சு தொடங்கியது. இந்த ஐபிஎல் தொடருக்கு வரும்போது, நான் எனது அணியுடன் உட்கார்ந்து பிட்னஸ் குறித்து பேசினேன். அப்போது நான் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்குவேன். வயது காரணமாக நான் லோ-ஆர்டர் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்வது புதைமணலில் இறங்குவது போன்றதாகும் என்பதில் உறுதியாக இருந்தேன்.  போட்டியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அந்த முடிவில் உறுதியாகவும் இருந்தேன். ஆனால், நான் லோ-ஆர்டர் வரிசையில் இறங்கி விளையாடி கொண்டிருந்தபோது, எனக்கு நானே போதுமான நேரத்தை கொடுக்க முடியவில்லை.

  இப்படி இறங்கும்போது நான் புதைமணலில் ஓடுவது போன்றதும், அதிகப்படியான படபடப்பிற்கும், ரொம்ப ஆழமாகவும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் டாப் ஆர்டர் வரிசையில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டேன். நான் 3, 4 அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்க விரும்பினேன். அப்படி என்றால், ஏராளமான ஓவர்கள் கிடைக்கம்’’ என்றார்.
  ஐபிஎல் தொடரில் விளையாடிய சிறப்பான அனுபவம் இந்திய அணியின் டாப் பினிஷராக உதவும் என கேஎல் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #KLRahul
  ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அந்த அணி கொடுத்த பணத்திற்கு வஞ்சம் இல்லாமல் ரன் குவித்தார் கேஎல் ராகுல். 14 பந்தில் அரைசதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் என்ற சாதனைப் படைத்ததோடு, 14 லீக் ஆட்டத்தில் 659 ரன்கள் குவித்தார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.

  இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்துள்ள அவர், ஐபிஎல் தொடரின் அனுபவம் இந்திய அணியின் டாப் பினிஷராக உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘டி20 போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்பதை நான் எப்போதுமே நம்புகிறவன். குறிப்பாக டி20-யில் ஒவ்வொரு பந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு பந்திலும் போட்டியின் நிலை மாறும். அணிக்கு என்ன தேவையோ அதை கருதி, அதற்கேற்றபடி விளையாட வேண்டும். இந்தியாவிற்காக கடந்த இரண்டு மூன்று வருடங்கள் நான் விளையாடியபோதிலும், ஐபிஎல் 2018-ல் உள்ள அனுபவத்தை பயன்படுத்துவேன்.  மனது அமைதியான நிலையில் இருக்கும்போது சிறப்பான ஆட்டம் வெளிவரும். இதைத்தான் ஐபிஎல் தொடரில் நான் செய்தேன். அணிக்காக போட்டியை பினிஷ் செய்து கொடுக்க வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருந்தது. ஒரு வீரராக அணிக்கு போட்டியை பினிஷ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அந்த சூழ்நிலையை வீரர்கள் விரும்புவார்கள்.

  இந்த சூழ்நிலை உலகக் கோப்பை அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் கூட வரலாம். இதனால் இந்த ஐபிஎல் தொடர் மனதளவில் மேம்பட எனக்கு உதவியாக இருந்துள்ளது’’ என்றார்.
  இந்திய பிரீமியர் லீக் தொடரின் 2019 சீசனை மார்ச் மாதத்திலேயே தொடங்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. #IPL2018 #BCCI
  இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 தொடரான பிரீமியர் லீக்கை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற 11-வது சீசன் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றது.

  அடுத்த ஆண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.

  ஐசிசி விதிமுறைப்படி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அணிகள் தயாராகிவிட வேண்டும். மேலும், லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி ஐபிஎல் தொடருக்கும் அதன்பின் இந்திய அணி விளையாடும் தொடருக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் மே 15-ந்தேதிக்கு முன் ஐபிஎல் தொடரை பிசிசிஐ முடித்தாக வேண்டும்.  இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே தலைவர்கள் பிரசாரம் என தேர்தல் களைகட்டும். இதனால் போலீஸ் தரப்பில் இருந்து எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அறிவித்துவிடும். 2009 மற்றும் 2014 சீசனில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. 2009-ல் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ல் பாதி தொடர் ஐக்கியர அரபு எமிரேட்ஸிலும் நடைபெற்றது.

  இதனால் அடுத்த வருட சீசனை மார்ச் 29-ந்தேதியிலேயே தொடக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என திட்டவட்டமாக தெரியாத நிலை உள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தல் குறித்து தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகுதான் பிசிசிஐ 12-வது சீசனை பற்றி முழுவதுமாக திட்டமிட முடியும்.
  இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வெவ்வேறு அணியின் பயிற்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. #IPL2018 #VIVOIPL

  புதுடெல்லி:

  11-வது சீசன் ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 27-ம் தேதியுடன் நிறைவடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

  சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது, 4-வது இடம் பிடித்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்கு தலா ரூ. 8.75 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. 

  அதிக ரன், அதிக சிக்ஸர், அதிக விக்கெட், சிறந்த கேட்ச், சிறந்த அணி, வளர்ந்து வரும் சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி அதற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 

  கோப்பை வென்ற சென்னை அணிக்கு வழங்கப்பட்ட ரூ. 20 கோடி பரிசுத்தொகையில் 10 கோடி ரூபாய் அணி நிவாகத்துக்கும், 10 கோடி ரூபாய் வீரர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது. 

  ஐபிஎல் ஏலம் முடிந்த உடனே வீரர்கள் பெரும் பரிசுத்தொகை தெரியவந்துவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு அணிக்கும் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர், ஆலோசகர் என நியமித்துள்ளனர். அவர்களுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.   அதன்படி பயிற்சியாளர்கள் பெறும் தொகையை இங்கு பார்ப்போம். 

  டேனியல் வெட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர்) - ரூ. 4 கோடி
  ஆஷிஸ் நெஹ்ரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர்) - ரூ. 4 கோடி
  ரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 3.7 கோடி
  ஸ்டீபன் பிளெம்மிங் (சென்னை தலைமை பயிற்சியாளர்) - ரூ. 3.2 கோடி
  விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்) - ரூ. 3 கோடி
  ஷேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.7 கோடி
  ஜாக்கஸ் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.25 கோடி 
  மஹிலா ஜெயவர்தனே (மும்பை அணி தலைமை பயிற்சியாளர்) - ரூ. 2.25 கோடி
  விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்) - ரூ. 2 கோடி
  கேரி கிரிஸ்டன் (பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர்) - ரூ. 1.5 கோடி
  லசித் மலிங்கா (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர்) - ரூ. 1.5 கோடி
  ஆப்கானிஸ்தான் அதிபர் பாராட்டிய பிறகு, நான்தான் அந்நாட்டின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார். #RashidKhan
  ஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  அவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 10 பந்தில் 34 ரன்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

  ரஷித் கானின் ஆல்ரவுண்டர் திறமையை பார்த்து அசந்துபோன சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான் அதிபர், ‘‘ரஷித் கான் எங்கள் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்’’ என்று கூறியிருந்தார்.

  இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்துக்குப் பிறகு தற்போது நாள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்று தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்திய பிறகு நான்தான் எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்பது எனக்குத் தெரியும்.  நான் போட்டி முடிந்து பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள் சச்சின் தெண்டுகர் டுவிட்டை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினர். அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் அவருக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. இறுதில் அவருக்கு பதில் அளித்தேன்.

  ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த டுவிட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் தெண்டுல்கர் மிகமிக பிரபலமானவர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.
  ஐபிஎல் 2018 சாம்பியன் கோப்பையை கைப்பற்றியதுடன் 8 கோப்பைகளை கைப்பற்றி கேப்டன் சாம்பியனாக உள்ளார் எம்எஸ் டோனி. #MSDhoni
  இந்திய அணியின் ராசியான கேப்டன் என்று அழைக்கப்படுபவர் எம்எஸ் டோனி. இந்தியாவிற்கு இரண்டு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர். கேப்டன் பதவியில் பல்வேறு சாதனைகளை படைத்த எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் சாதனைகளை படைத்து வருகிறார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடங்கிய காலத்தில் இருந்தே அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரை மூன்று முறை வென்றுள்ளது. அத்துடன் இல்லாமல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை இரண்டு முறை வென்றுள்ளது. இதன்மூலம் 8 முறை சாம்பியன் பட்டம் வென்று வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறார்.  டோனி தலைமையில் இந்தியா 2007-ல் டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 மற்றும் 2018-ல் ஐபிஎல் கோப்பையையும், 2010, 2014-ல் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளது.2013-ம் ஆண்டு ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் இந்தியா வென்றுள்ளது.
  தடைகளை உடைத்தெறிந்து வெற்றி பெற்றோம், இந்த வெற்றியை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் பிராவோ தெரிவித்துள்ளார். #IPL2018
  ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

  இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றதை விட சிறந்தது ஏதுமில்லை என்று ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ கூறியுள்ளார். இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘சாம்பியன் பட்டம் வென்றது சிறப்பானது. இது ஒரு சிறப்பான சூழ்நிலை. நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து விளையாடியது கிடையாது.  ஒரு போட்டிக்குப் பின்னர் நாங்கள் சென்னையில் இருந்து புனேவிற்குச் சென்றோம். பெரும்பாலான வீரர்களுக்கு இது முதல்முறை. நாங்கள் போட்டியின்மீது கவனம் செலுத்தி, அதை செய்தோம். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை விட சிறந்தது ஏதும் இல்லை’’ என்றார்.
  ஐபிஎல் 2018 சீசன் எனக்கு மிகவும் சிறப்பானது என்று இறுதிப் போட்டியில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். #IPL2018
  ஐபிஎல் 2018 தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் செனனை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

  முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

  179 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவரிலேயே சேஸிங் செய்ய ஷேன் வாட்சன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 57 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சன், கடந்த சீசனை விட இந்த சீசன் எனக்கு ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் 2018 சீசன் எனக்கு சிறப்பான சீசன். முந்தைய 2017 சீசனோடு இந்த சீசனில் அதிக வாய்ப்பு கிடைத்தது நம்ப முடியாததாக இருந்தது.

  விஷயங்கள் அனைத்தும் என் வழியில் சரியாக அமைந்தது. ஆனாலும், இது மிகவும் பெரிய ஆட்டமான இறுதிப் போட்டியில் அமைந்தது மிகவும் சிறப்பானது. முதல் 10 பந்துகளை சந்தித்த பிறகு, பெரிய ஹிட் ஷாட் அடிப்பதற்கு முன் பந்திற்கு பந்து ரன்கள் அடிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.  புவனேஸ்வர் குமார் முதலில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இதனால் நாங்கள் முதல் சிக்ஸ் ஓவரில் மோசமான விளைவை சந்தித்து விடக்கூடாது (விக்கெட்டை மளமளவென இழப்பது) என்பதில் கவனமாக இருந்தோம். பந்து ஸ்விங் தன்மையை இழந்த பிறகு, பேட்டிங் செய்வதற்கு எளிதாக இருந்தது’’ என்றார்.

  கடந்த ஆண்டு ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருந்த ஷேன் வாட்சன், 8 போட்டியில் 71 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த முறை 15 போட்டியில் 2 சதம், 2 அரைசதத்துடன் 555 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 39.64 ஆகும்.
  ஐதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ரசிகர்களின் பலத்த வரவேற்புகளுக்கு இடையே இன்று சென்னை வந்தடைந்தனர். #IPL2018 #CSK
  சென்னை:

  ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.

  அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர். இதனை அடுத்து, பேருந்துகள் மூலம் வீரர்கள் தனியார் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். காவிரி பிரச்சனையில் சென்னையில் இந்த ஆண்டு ஒரே ஒரு ஐபிஎல் போட்டிகள் மட்டுமே நடந்தது குறிப்பிடத்தக்கது.
  சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ரோகித் சர்மா சாதனையுடன் ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு இணைந்துள்ளனர். #IPL2018
  மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமை பெற்றிருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒரு முறையும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று பேரையும் இடம்பிடித்துள்ளார்.

  இவர்தான் அதிக கோப்பையை வென்ற வீரராக இருந்தார். இவருடன் தற்போது அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர். இருவரும் நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தனர். அப்போது மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்ஸ் பட்டம் வென்றிருந்தது.  இந்த முறை இரண்டு பேரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்கள். 2018 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அம்பதி ராயுடும், ஹர்பஜன் சிங்கும் நான்கு முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா சாதனையுடன் இணைந்துள்ளனர்.

  2009-ம் ஆண்டு டெக்கார் சார்ஜர்ஸ் அணியும், 2013, 2015 மற்றும் 2017-ல் மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
  ×