search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery issue"

    • போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.
    • உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தரை கண்டித்து இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். இதில் காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், சாமி கரிகாலன், துரை ரமேசு, தமிழ் தேசிய பேரியக்கம் வைகறை, பழ. ராசேந்திரன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மண்டல செயலாளர் வீர. பிரபாகரன், விவசாயிகள் சங்கம் ஜெய்சங்கர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு அவரது உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    அப்போது மணியரசன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரியில் நமக்கான உரிமையை பாதுகாக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தன்னிச்சை தொடரும்.

    அதற்கான ஆரம்ப போராட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
    • திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை காங்கிரஸ் அரசு தீவிரப்படுத்தும் என்ற கர்நாடக மாநில கவர்னரின் குடியரசு தின உரை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சியும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கும் தமிழக விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமல்லாது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

    காவிரியின் குறுக்கே கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டிருந்தாலும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின்பே புதிய அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    போதிய நீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசினாலும், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் உரிய நீரை பெற்றுத்தர முடியாத திமுக அரசினாலும் டெல்டா பகுதி விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    எனவே, தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கில் கட்டப்படும் மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    • காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.
    • ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 92-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி காட்சி மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் சுப்பிரமணியன் பங்கேற்றுள்ளார்.

    காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது.

    கடந்த டிசம்பர் 19-ந்தேதி நடந்த கூட்டத்தில், காவிரியில் வினாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. மேலும் ஜனவரி மாதம் முதல் நாளிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது நடைபெறும் கூட்டத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.
    • கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 91-வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

    காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

    4 நீர்த்தேக்கங்களில் 52.84 சதவீதமாக மொத்த வரத்து குறைந்துள்ளது. இதனால் தங்களால் தண்ணீர் திறந்துவிட முடியாது என்ற கருத்தை கர்நாடகா அரசு முன்வைத்தது.

    கர்நாடகா 14 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்திருந்தது.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக்குழு, டிசம்பர் இறுதி வரை தமிழகத்திற்கு 3128 கனஅடி வீதமும், ஜனவரி மாதம் 1030 கனஅடி வீதமும் நீர் திறக்க கர்நாடகாவிற்கு பரிந்துரை செய்துள்ளது.

    • காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.
    • காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை மறுதினம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

    இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.

    இந்நிலையில், நாளை மறுதினம் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் 23-ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

    நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.
    • தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் த.மா.கா. மூத்த தலைவர் தெட்சிணாமூர்த்தி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது வீட்டுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி சென்று குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.

    காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வேதனைக்குரியது.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.-பா.ஜனதா உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம்.

    தீபாவளிக்கு பிறகு மண்டல கூட்டங்கள் நடத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சியை வலுப்படுத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ தஞ்சை மாவட்ட தலைவர் ரங்கராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் தினகரன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் காமராஜ், மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், வட்டார தலைவர்கள் காந்தி நாராயணன், சாமிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ஜி.கே.வாசன் எம்.பி, ஜாம்புவானோடை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்தவர்களை அரிவாளால் விரட்டிய முதியவர் வைரகண்ணுவை நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    • கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.
    • கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல்.

    தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது.

    நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2600 கன அடி நீர் திறக்குமாறு பரிந்துரைத்தது.

    இந்நிலையில், கர்நாடகாவில் நீர்வரத்து பூஜ்ஜியமாக உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளதாக அம்மாநில கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," தமிழகத்திற்கு தற்போத கர்நாடகா தண்ணீர் திறக்கும் நிலையில் இல்லை. கர்நாடகா அணைகளில் மொத்தமாக 551 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது குடிநீருக்கு மட்டுமே போதுமானது" என்று கூறியுள்ளார்.

    தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன.
    • கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விட மறுத்து வருகிறது. குறிப்பிட்ட அளவுக்கும் குறைவாகவே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது.

    இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது. இருப்பினும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

    இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வீணாகி விட்டன. ஆனாலும் மீண்டும் விவசாயிகள் நெற்பயிரிட்டு உள்ளனர்.

    இந்நிலையில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 2600 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து விமானடிக்கு 2600 கன அடி நீர் திறக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.
    • தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை.

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    89வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.

    காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது.

    மேலும், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு.
    • தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

    காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவிரியில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

    • காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது.
    • கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என கர்நாடகா வாதம்.

    தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.

    கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்டோபர் 16-ம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிட ஒழுங்காற்றுக் குழு அதிகாரிகள் கர்நாடக அரசை கேட்டுக் கொண்டனர்.

    இந்த நிலையில், கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ் சிங், "நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 3 ஆயிரம் கனஅடி நீர் திறப்பது குறித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமே இதுபோன்ற நீர் பற்றாக்குறை காலங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை வழங்க தீர்வாக அமையும்," என்று தெரிவித்து உள்ளார்.

    • டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் கூடியது.
    • கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதி நீர் பங்கீடு குறித்து நீண்டகாலமாக சிக்கல் நீடித்து வருகிறது.

    கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா, வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 26வது கூட்டம் இன்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது

    இந்த கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    ×