என் மலர்
நீங்கள் தேடியது "sunrisers Hyderabad"
- ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது.
- ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஐதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. லாராவின் பதவி காலம் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரியை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நிர்வாகம் நியமித்துள்ளது.
முன்னதாக ஆர்சிபி அணி புதிய பயிற்சியாளரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியின் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பட்லர் 95 ரன்களும் சாம்சன் 66 ரன்கள் குவித்தனர். இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அப்துல் சமத் அதிரடியாக விளையாடியும் கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா அவுட்டாக்கினார். ஆனால் அதை நோ-பாலாக வீசிய காரணத்தால் கடைசியில் ஃப்ரீ ஹிட்டில் சிக்சர் அடித்த அவர் 7 பந்தில் 17 ரன்களை குவித்தார்.
இதன் மூலம் ஐதராபாத் அணி முதல் முறையாக 200+ இலக்க ரன்னை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது. ஜெய்பூர் மைதானத்தில் அதிக பட்ச சேசிங் இதுவாகும்.
- கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
- 28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐ.பி.எல். 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.
28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
- அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.
16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.
இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.
அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.
எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.
‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.

மறுமுனையில் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடினார். அவர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஒரு சிக்சரும், டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சரும் அடித்து கலக்கினார். 3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (8 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.
அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய மார்ட்டின் கப்தில் (36 ரன்கள், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே (30 ரன்கள், 36 பந்து, 3 பவுண்டரி) கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
இதனை அடுத்து விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது. 14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் (28 ரன்கள், 27 பந்து, 2 பவுண்டரி) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். சற்று நேரத்தில் விஜய் சங்கரும் (25 ரன்கள், 11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் அக்ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் முகமது நபி (20 ரன்), தீபக் ஹூடா (4 ரன்), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதனை அடுத்து ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலின் முன்ரோ (14 ரன்), அக்ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். ஆனால் மறுமுனையில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் (49 ரன்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளி யேறியது. #IPL2019 #DCvSRH
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராகவும் கொண்டுள்ள டெல்லி அணி பெயர் மாற்றம் செய்ததுடன், இந்த சீசனில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் எழுச்சி பெற்றுள்ளது. அத்துடன் 2012-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி கண்டு இருக்கிறது.
டெல்லி அணியில் ஷிகர் தவான் (486 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (442 ரன்கள்), ரிஷாப் பான்ட் (401 ரன்கள்), பிரித்வி ஷா உள்ளிட்டோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். 25 விக்கெட்டுகள் வீழ்த்திய ரபடா (தென்ஆப்பிரிக்கா) உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதற்கு ஆயத்தமாக நாடு திரும்பி விட்டாலும், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்ஷர் பட்டேல் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அணியில் இருக்கிறார்கள்.
2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது. 4-வது இடத்துக்கான போட்டியில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஒரே புள்ளியுடன் சமநிலை வகித்த போதிலும் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் ஐதராபாத் அணி 4-வது இடம் பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது.
ஐதராபாத் அணியின் பேட்டிங் தூணாக விளங்கிய டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), பேர்ஸ்டோ (இங்கிலாந்து) ஆகியோர் உலக கோப்பை போட்டிக்கான தங்கள் நாட்டு அணிக்கு தயாராக சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டதால் அந்த அணியின் பேட்டிங் பலவீனம் அடைந்துள்ளது. மனிஷ் பாண்டே (314 ரன்கள்) பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு வருகிறார். கேப்டன் கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில், விஜய் சங்கர் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் கலீல் அகமது, ரஷித் கான், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நல்ல ரிதத்தில் உள்ளனர்.
ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் ஐதராபாத், டெல்லி அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் அணி 9 முறையும், டெல்லி அணி 5 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் 2 முறை சந்தித்தன. இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், 2-வது ஆட்டத்தில் டெல்லி அணியும் வெற்றி பெற்றன. டெல்லி அணியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்பு ஐதராபாத் அணி தாக்குப்பிடிக்குமா? என்பது சற்று சந்தேகம் தான்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. 10-ந் தேதி நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதல் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த சென்னை அணியுடன் மோதும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ரூதர்போர்டு, கீமோ பால், அக்ஷர் பட்டேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா, டிரென்ட் பவுல்ட்.
ஐதராபாத் சன் ரைசர்ஸ்: விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யூசுப் பதான், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது, பாசில் தம்பி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IPL2019 #DelhiCapitals #SunrisersHyderabad
இந்த நிலையில் ஐதராபாத்துக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் 2 முறை பந்தை வீச முயன்று வீசாமல் நிறுத்தினார். களத்தில் இருந்த விர்த்திமான் சகாவை அவர் ‘மன்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சித்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக அவரிடம் நடுவர் பேசினார். அஸ்வினை நடுவர் எச்சரித்தாரா? என்பது தெரியவில்லை. #MankadRunOut #IPL2019 #SRHvKXIP
ஜெய்ப்பூர்:
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன், ஆஷ்டன் டர்னர் இடம் பிடித்தனர். ஐதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோ தாயகம் திரும்பி விட்டதால் விக்கெட் கீப்பர் இடத்திற்கு விருத்திமான் சஹா சேர்க்கப்பட்டார்.‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில் கேப்டன் வில்லியம்சன் 13 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபாலின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.
இதன் பின்னர் டேவிட் வார்னரும், மனிஷ் பாண்டேவும் இணைந்து சரிவை தடுத்தனர். ஆனால் வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக ஆடினார். 10 ஓவர்களுக்கு மேல் களத்தில் நின்ற போதிலும் அவர் பந்தை ஒரு முறை கூட எல்லைக்கோட்டிற்கு விரட்ட முடியாமல் தவித்தது ஆச்சரியம் அளித்தது. அதே சமயம் பாண்டே வேகம் காட்டினார். 11.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் ஆடிய விதம் அந்த அணி 180 ரன்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும், நிலைமை தலைகீழாக மாறியது.

டேவிட் வார்னர் 37 ரன்களில் (32 பந்து) கேட்ச் ஆனார். மனிஷ் பாண்டே 61 ரன்களில் (36 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினார். விஜய் சங்கர் (8 ரன்), தீபக் ஹூடா (0), விருத்திமான் சஹா (5 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்கவில்லை. எப்படியோ கடைசி ஓவரில் ரஷித்கான் (17 ரன், நாட்-அவுட்) பவுண்டரி, சிக்சர் அடித்து அணி 150 ரன்களை கடப்பதற்கு உதவினார்.
20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன், ஒஷானே தாமஸ், ஸ்ரேயாஸ் கோபால், உனட்கட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 48 ரன்களுடனும் (32 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டர்னர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தானுக்கு இது 5-வது வெற்றியாகும். ஏற்கனவே ஐதராபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. 11-வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 6-வது தோல்வியாகும். #IPL2019 #SRHvsRR
இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினர். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தவான் இந்த முறை 7 ரன்னிலும், பிரித்வி ஷா 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி 24 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார். அவர் 45 ரன்னில் வெளியேறினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரிஷப் பன்ட் 23 ரன்னில் அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஐதராபாத் அணி வெற்றிபெற 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.


18.5 ஓவர்களில் ஐதராபாத் அணி 116 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி 15 ரன்களுக்குள் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. டெல்லி அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மோரிஸ், கீமோ பால் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் கீமோ பால் ஆட்டநாயகன் விருது பெற்றார். 8-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சுவைத்த 5-வது வெற்றி இதுவாகும். அத்துடன் முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்திடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.
டேவிட் வார்னர் கடைசி வரை களத்தில் நின்று 62 பந்துகள் சந்தித்தார். இதில் 70 ரன்களே அடித்தார். இதன்மூலம் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜேபி டுமினி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 63 பந்தில் 59 ரன்களும், ஆரோன் பிஞ்ச் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 62 பந்தில் 68 ரன்களும் எடுத்து முதல் மற்றும் 2-வது இடத்தில் உள்ளனர்.