என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிவிங்ஸ்டன்"

    • முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்க உள்ளது.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் லிவிங்ஸ்டன். இவரது மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன். இவர் தந்தையுடன் சேர்ந்து பாடல்களை பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.

    ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

    இது ஒரு ஹாரர் திரில்லர் படம் என்று கூறப்படும் நிலையில், இதில் கதாநாயகியாக ஜோவிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், அயலி புகழ் மதன், ஆதர்ஷ் மற்றும் லிவிங்ஸ்டன் நடிக்கிறார்கள். மேலும் இவர்களுடன் சேர்ந்து விஜே விஜய், கிருத்திகாவும் நடிக்கிறார்கள்.

    விக்னேஷ் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு சங்கீத் மணிகோபால் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே செட்யூலாக நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

    • விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான லிவிங்ஸ்டன் மகளிடம் விஜய் ரசிகர் ஒருவர் தெனாவட்டாக பேசி வாங்கி கட்டியுள்ளார்.

    ஜோவிடா லிவிங்ஸ்டன் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா லிவிங்ஸ்டன் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

    அந்த பதிவின் கமெண்ட்ஸ் செக்ஷனில் விஜய் ரசிகர் ஒருவர், "உங்க அப்பா இன்னும் உயிரோடு இருக்கிறாரா?" என்று கேள்வி கேட்டார்.

    இந்த கேள்வியால் கடுப்பான ஜோவிடா, "ஓ... ஹாய் TVK. நீங்களும் உங்கள் குடும்பமும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக அல்லவா நான் நினைத்தேன்" என்று பதிலடி கொடுத்தார்.

    ஜோவிடாவின் இந்த பதிலடி இணையத்தில் வைரலாக பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

     

    • நடிகர் லிவிங்ஸ்டன் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார்.

    இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த நடிகர் லிவிங்ஸ்டன் 1988- ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், சுந்தர புருசன், என் புருசன் குழந்தை மாதிரி போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தார்.


    அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் சரியான பட வாய்ப்பு இல்லாததால் சின்ன திரையில் களமிறங்கினார். நடிகர் லிவிங்ஸ்டனுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் ஜோவிகா சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் சின்னத்திரை சீரியல் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


    லிவிங்ஸ்டன் குடும்பம்

    இந்நிலையில் நடிகர் லிவிங்ஸ்டன் நேர்காணல் ஒன்றில் தான் மதம் மாறியது தொடர்பாக பேசியுள்ளார். அதில், "கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. இதனால் நான் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் நான் சேர்ந்துவிட்டேன்" என்று கூறினார்.

    இதற்கு நெட்டிசன்கள் பலர் எப்படி ஒரு மதம் போர் அடித்துவிடும்? நீங்கள் உண்மையாக மதத்தை நேசிப்பவர் இல்லை என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய அணி 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆகி தோல்வி அடைந்தது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிகளில் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 4-வது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    மழைக்காரணமாக போட்டி 39 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி ப்ரூக் (58 பந்தில் 87 ரன்), டக்கெட் (62 பந்தில் 63 ரன்), லிவிங்ஸ்டன் (27 பந்தில் 62 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்கள் குவித்தது.

    பின்னர் 313 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து 186 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 50 ஆவது ஓவரை வீசிய மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரில் பேட்டிங் செய்த லிவிங்ஸ்டன் 6,0,6,6,6,4 என 28 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய பவுலர் என்ற மோசமான சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார்.

    இதற்க்கு முன்னதாக ஒரே ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து சைமன் டேவிஸ், கிரேக் மெக்டெர்மாட், சேவியர் டோஹெர்டி, ஆடம் ஜாம்பா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இந்த மோசமான சாதனையை கைவசம் வைத்திருந்தனர்.

    • முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
    • 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    ஆன்டிகுவா:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்தது.

    கேப்டன் ஷாய் ஹோப் 17-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 117 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) (8 பவுண்டரி, 4 சிக்சர்), ரூதர்போர்டு 54 ரன்னும் எடுத்தனர். டர்னர், ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து 9 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது.

    பின்னர் ஆடிய இங்கிலாந்து 15 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 329 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. அந்த அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி முதல் சதத்தை அடித்தார். அவர் 85 பந்தில் 124 ரன்னும் (5 பவுண்டரி, 9 சிக்சர்), பில் சால்ட் 59 ரன்னும் (8 பவுண்டரி), ஜேக்கப் பெதல் 55 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மேத்யூ போர்டேக்கு 3 விக்கெட் கிடைத்தது.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    தற்போது 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 6-ந் தேதி பிரிட்ஜ் டவுனில் நடக்கிறது.

    ×