என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    IPL 2025: கிளாசான் அதிரடி சதம் - கொல்கத்தாவுக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
    X

    IPL 2025: கிளாசான் அதிரடி சதம் - கொல்கத்தாவுக்கு 279 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

    • அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது.

    Next Story
    ×