என் மலர்
நீங்கள் தேடியது "ஐபிஎல் 2026"
- 19-வது ஐபிஎல் சீசன் 2026 மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, முழுமையான அட்டவணையை வெளியிடுவதில் பிசிசிஐ நிதானம் காட்டி வருகிறது.
19-வது ஐபிஎல் சீசன் 2026 மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக, முழுமையான அட்டவணையை வெளியிடுவதில் பிசிசிஐ நிதானம் காட்டி வருகிறது.
இந்நிலையில் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் குழுவில் ஜேம்ஸ் போஸ்டர் இணைந்துள்ளார்.
இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும், உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள போஸ்டர், பிஎஸ்எல், ஐஎல்டி20 மற்றும் தி ஹண்ட்ரட் போன்ற பல்வேறு வெளிநாட்டு டி20 தொடர்களிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.
2025 சீசனில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, அணியின் பீல்டிங் தரத்தை மேம்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
- 2024-ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.
- சுமார் 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.
2026-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் கட்டப் போட்டிகளுக்கான அட்டவணையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரும் மார்ச் 6 அல்லது 7-ஆம் தேதிகளில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, 2024-ஆம் ஆண்டைப் போலவே இந்த முறையும் ஐபிஎல் அட்டவணை இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளது.
அதன்படி தொடக்கப் போட்டியில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலான சுமார் 15 முதல் 20 நாட்களுக்கான போட்டிகள் முதற்கட்டமாக அறிவிக்கப்படும்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், இரண்டாம் கட்ட மற்றும் இறுதிப்போட்டிக்கான முழுமையான அட்டவணை இறுதி செய்யப்படும்.
பாதுகாப்புப் பணிகளுக்காகப் பெருமளவிலான காவல்துறையினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதால், அந்தந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளில் போட்டிகள் நடத்துவதைத் தவிர்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாகவே, முழு அட்டவணையை ஒரே நேரத்தில் வெளியிடாமல் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின்படி, மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், டிக்கெட் விற்பனை மற்றும் அணிகளின் பயிற்சி முகாம்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐபிஎல் தொடக்க விழா மற்றும் சீசனின் முதல் போட்டி ஆர்சிபி அணியின் ஹோம் மைதானத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆர்சிபி அணி தனது 7 உள்ளூர் (Home) போட்டிகளில் 5 போட்டிகளைச் சின்னசாமி மைதானத்தில் விளையாடும்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால், முழுமையான போட்டி அட்டவணையை வெளியிடுவதில் பிசிசிஐ சற்றுத் தாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடக்க விழா மற்றும் சீசனின் முதல் போட்டி ஆர்சிபி அணியின் ஹோம் மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த கர்நாடக அரசு, தற்போது இந்த மைதானத்தில் போட்டிகளை நடத்தப் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
அதன்படி தொடரின் முக்கியமான பிளே-ஆஃப் சுற்றின் ஒரு போட்டி மற்றும் இறுதிப்போட்டி இங்கு நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்சிபி அணி தனது 7 உள்ளூர் (Home) போட்டிகளில் 5 போட்டிகளைச் சின்னசாமி மைதானத்தில் விளையாடும். மீதமுள்ள 2 போட்டிகள் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது.
- இந்த கூட்டத்தில் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மார்ச் 26-ந்தேதி தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் 2 நாள் தாமதமாக மார்ச் 28-ந்தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்குகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மே 31-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய இடங்களில் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக சேப்பாக்கம் இருக்கிறது. இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தா மைதானம் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 2-வது மைதானமாக கவுகாத்தி உள்ளது. இதனால் அதற்கேற்ற வகையில் போட்டி அட்டவணையை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
- மார்ச் 26-ந்தேதி தொடர் தொடங்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.
- தற்போது 2 நாட்கள் கழித்து தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
ஐ.பி.எல். 2026 சீசன் மார்ச் 28-ந்தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மார்ச் 26-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 2 நாட்களுக்குப் பிறகு தொடங்கப்படுகிறது. மே 31-ந்தேதி இறுதிப் போட்டி நடைபெறும் எனத் தகவல் கசிந்துள்ளது.
பொதுவாக இந்த நேரத்தில் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கும். தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், எல்எஸ்ஜி அணிக்கு சொந்தமான மைதானங்களை கொண்ட தமிழ்நாடு, கொல்கத்தா, அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், அதன்பின் போட்டி அட்டவணையை முழுமையாக வெளியிடலாம் என பிசிசிஐ உள்ளது. அதேவேளையில் அணி உரிமையாளர்கள் பகுதி நேர அட்டவணையாவது வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக தெரிகிறது.
இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பிசிசிஐ காத்திருக்குமா? அல்லது பகுதி நேர போட்டி அட்டவணை வெளியிடப்படுமா? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுக்கும், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.
- ஜெய்ப்பூரில் 4 போட்டிகளில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் ஒத்துக்கொண்டு உள்ளது.
ஜெய்ப்பூர்:
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி மொத்தம் 84 ஆட்டங்களை கொண்டது.
இந்த போட்டி குறித்த அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 4 ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுக்கும், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசனில் உள்ளூர் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறாது என்று தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.
இந்த நிலையில்தான் ஜெய்ப்பூரில் 4 போட்டிகளில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் ஒத்துக்கொண்டு உள்ளது. ராஜஸ்தான் முதல் மந்திரி பஜன்லால் சர்மா-ராஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் ரஞ்ஜித் பர்தாகூர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அதே நேரத்தில் மற்ற 3 ஆட்டங்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் ராஜஸ்தான் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் கவுகாத்தி, ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உள்ளூர் ஆட்டம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அந்த அணி முதல் முறையாக ஐ.பி.எல்.கோப்பையை கைப்பற்றியது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியானார்கள். இதனால் அங்கு போட்டியை நடத்த மாநில அரசு தடை விதித்தது. பின்னர் அதை விலக்கிக் கொண்டது.
தற்போது ஐ.பி.எல். போட்டிக்கு மாநில அரசு அனுமதி கொடுத்து விட்டது. பெங்களூர் அணி அங்கு விளையாடுமா என்பது உறுதியாக தெரியவில்லை.
- ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26, 2026 அன்று தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
- இந்தியாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை. ரன் குவிப்பில் ஏற்பட்ட சரிவு மற்றும் காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26, 2026 அன்று தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, பிசிசிஐ முழுமையான போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான கில், தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது.
- சஞ்சுவுக்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேடிங் செய்திருந்தது.
- சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கியது.
இந்தியாவின் டி20 கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடருக்கான வீரர்கள் மினி ஏலமும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ.18 கோடிக்கு டிரேடிங் முறையில் வாங்கப்பட்டார்.
அதே சமயம் சஞ்சுவுக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே ஆல் ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவை ரூ.14 கோடிக்கும், சாம் கரணை ரூ.2.4 கோடிக்கும் டிரேடிங் செய்திருந்தது. இதனால் எதிர் வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்விகளும் அதிகரித்திருந்தன.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ராஜஸ்தான் அணிக்காக 84 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 அரைசதங்களுடன் 1,566 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேலும் கடந்தாண்டு சஞ்சு சாம்சன் காயம் காரணமாக முதல் சில போட்டிகளை தவறவிட்ட நிலையில், ரியான் பராக் பொறுப்பு கேப்டனாக சில போட்டிகளில் செயல்பட்ட நிலையில், தற்சமயம் அணியின் முழு நேர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் மீண்டும் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நேற்று (பிப்.12) ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்சிபி அணி வென்றதையடுத்து, ஜுன் மாதம் சின்னசாமி மைதானத்தில் வெற்றிவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீதிபதி டி'குன்ஹா அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று, பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முழு கொள்ளளவையும் பயன்படுத்தாமல், அதிகபட்சமாக 30,000 முதல் 35,000 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
மைதானத்தின் நுழைவு வாயில்களை அகலப்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த AI கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்துதல் போன்ற மேம்பாடுகளைச் செய்ய கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மைதானத்தில் விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வழக்கமான நடைமுறைப்படி நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான இதில், ஐபிஎல் தொடரின் முதல் போட்டியும், குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும்.
கடைசியாக 2016-ல் பெங்களூருவில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் ஆர்சிபி அணி தோல்வியை தழுவியது.
- சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார்.
- இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி. எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அவர் இரண்டு முறை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் கேப்டன் பதவிக்கு திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார். மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது.
தோனி பிறகு அணியின் கீப்பராக சஞ்சு செயல்படுவார் என சொல்லப்படுகிறது. எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இந்நிலையில் எம்எஸ் தோனி, வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடருக்காக பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது 11 பேர் பலியாகினர்.
- இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
பெங்களூர்:
நடப்பு ஐபிஎல் சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.
ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அரசுக்கு அளித்த அறிக்கையில் பெங்களூர் மைதானத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி தான் 11 பேர் பலியாக முக்கிய காரணம் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற தடை விதிக்கப்பட்டது.
இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த முறை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக நவி மும்பை அல்லது ராய்ப்பூர் மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் போட்டி நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது.
- அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 18 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் டி20 கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் கடந்த 2008-ம் ஆண்டு இந்த தொடங்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய லீக் தொடர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு முன்னணி வீரர்களும் இணைந்து விளையாடுவதால் இந்த சரவெடி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இதன் 18-வது சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனையடுத்து இந்த தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் பிளேஆப் சுற்றுகள் பஞ்சாப் நகரில் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025-ல் குவாலிஃபையர் 1 & எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் முல்லன்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






