என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியான் பராக்"

    • மொயீன் அலி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்களை பராக் பார்க்கவிட்டார்.
    • ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.

    18-வது ஐ.பி.எல். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

    இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். மேலும் அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் பராக் சிக்சர் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளை சிக்சருக்கு விளாசி பார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு எக்ஸ் பக்கத்தில் ரியான் பராக் பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பராக் அந்த பதிவில், "ஐபிஎல் தொடரில் ஒருநாள் என்னால் ஒரே ஓவரில் 4 சிக்சர் அடிக்க முடியும் என்று என்னுடைய உள்மனது சொல்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

    2023 ஆம் ஆண்டு பராக்கின் இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். ஆனால் தற்போது இப்போது ஒரே ஓவரில் 5 சிக்சரும் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்சரும் அடித்து தன்னை கிண்டலடித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

    • ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் அதிகபட்சமாக 95 ரன் எடுத்தார்.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 54 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    கொல்கத்தாவில் நேற்று நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 95 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். அந்த ஓவரின் 2வது பந்தில் இருந்து ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ரியான் பராக் தொடர்ந்து 5 சிக்சர்களை அடித்து அமர்க்களம் செய்தார். இதன்மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றிலும் இடம் பிடித்துள்ளார். அதாவது, ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரியான் பராக் இணைந்துள்ளார்.

    ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ராகுல் தெவாட்டியா, ரவீந்திர ஜடேஜா, ரிங்கு சிங் ஆகியோரும் அடங்குவர்.

    • பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.
    • நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம் என தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    முதலில் மும்பை அணிக்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மும்பை வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எங்களுடைய பேட்டிங்கை பொறுத்த வரை இன்றைய நாள் எங்களுக்கான நாள் கிடையாது. 190 -200 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக சேஸ் செய்யக்கூடிய இலக்கு தான்.

    நாங்கள் சில விஷயங்களை கொஞ்சம் மாற்றி செய்திருக்க வேண்டும். நாங்கள் தொடக்கத்தில் நன்றாக விளையாடினாலும், நடுவரிசையில் சொதப்பி விடுகின்றோம். நானும் துருவ்வும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

    ஆனால் பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் பல விஷயங்களில் தவறு செய்து விட்டோம். எனவே தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அணியின் வளர்ச்சிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடிவு எடுத்து இருக்கின்றோம். இந்த சீசனில் பல போட்டிகளில் அருகே வந்து தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

    என்று ரியான் பராக் கூறினார்.

    • எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது.
    • 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது என்றார்.

    ஜெய்ப்பூர்:

    ஐபிஎல் தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ரியான் பராக் கூறியதாவது:

    எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது. 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது.

    இந்த தோல்விக்கான பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே வீசினர்.

    பவுலிங்கிலும் கடைசி ஓவர் மட்டும்தான் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சந்தீப் சர்மாவை நம்பினோம். ஆனால், அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. 165-170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி விடுவோம் என நினைத்தோம்.

    கடைசி ஓவர் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை என்பதால் அது நடக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் சில தவறான பந்துகளை வீசினால் அது ஒட்டுமொத்த போட்டியையுமே பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம் என தெரிவித்தார்.

    • குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
    • இப்போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இப்போட்டியில் அட்டமிழந்த ரியான் பராக் நடுவரிடம் கோவப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் பொது 7வது ஓவரை குல்வந்த் கெஜ்ரோலியா வீசினார்.

    அப்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிய பந்தைத் பராக் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு கீப்பரில் கைகளுக்கு சென்றதாக கூறி நடுவர் அவுட் கொடுத்தார்.

    உடனடியாக பராக் மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டின் பக்கத்தில் வரும்போது பேட் தரையில் உரசியது தெரியவந்தது. ஆனால் பேட் தரையில் உரசுவதற்கு முன்பே பந்து பேட்டில் பட்டதாக கூறி மூன்றாம் நடுவரும் அவுட் கொடுத்தார்.

    இதனால் கோபமடைந்த பராக் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    • ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
    • ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார்

    ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக கேப்டன் ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

    ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டியில் இருந்து சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
    • ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.

    ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.

    அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

    2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

    நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.

    அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.

    • 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

    ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.

    • பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.
    • இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனியை பயிற்சி ஆட்டத்தின்போது இமிடேட் செய்துள்ளார். அதை இந்திய கிரிக்கெட் உலகம் ரசித்துப் பாராட்டி வருகிறது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், "ரியான் பராக் எம்எஸ் டோனியை நேசிக்கிறார்!" என்று தலைப்பிட்டுள்ளது.

    21 வயதான பராக் கையுறைகளை அணிந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று பயிற்சியாளரிடம் இருந்து குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார். பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து டோனி செய்வது போல் பராக் தோள்களை அசைக்கிறார். இதனை அனைவரும் ரசிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
    • இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம்.

    ஜெய்ப்பூர்:

    நடப்பு ஐபிஎல் சீசனின் 26-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ அணி.

    இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எங்கள் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ரவி பிஷ்னோய் அருமையாக பந்து வீசினார். அவரது பந்தை மூன்று, நான்கு சிக்ஸர் விளாச நாங்கள் கமிட் ஆகவில்லை. இந்த ஆடுகளம் சவாலானதாக இருந்தது. அவர்களது பந்து வீச்சும் ஸ்மார்ட்டாக இருந்தது. அதே நேரத்தில் நாங்கள் அடித்து ஆட தவறினோம்.

    இறுதி நேரத்தில் களத்திற்கு வந்து சிக்ஸர் விளாச வேண்டும் என்பதுதான் ரியான் பராக்கிற்கு நாங்கள் வகுத்துள்ள திட்டம். துரதிர்ஷ்டவசமாக அவர் நல்ல ஃபார்மில் இல்லை. வலைப்பயிற்சியில் அவர் சிறப்பாக பேட் செய்கிறார். அவரது சிக்கலை அடையாளம் கண்டு, அதற்கு தீர்வு காண முயற்சிப்போம். எங்கள் வீரர்களை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.

    என சங்ககாரா கூறினார்.

    • சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக பராக் விளையாடினார்.
    • 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார்.

    உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நவம்பர் 19-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக ரியான் பராக் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக விளையாடினார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்டாக் அலி டிராபியில் நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் (182.79) பராக் அதிக ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் இன்னிங்சில் ரியான் பராக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • 2-வது இன்னிங்சில் அவர் 155 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இந்தியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பையில் ஜனவரி 5ஆம் தேதி துவங்கிய 5-வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சட்டீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சட்டீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் போராடி 327 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக அமன்தீப் காரே சதமடித்து 116 ரன்களும் சாசங் சிங் 82 ரன்களும் எடுத்தனர். அசாம் தரப்பில் ஆகாஷ் செங்குப்த்தா மற்றும் முக்தர் ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் அணி சட்டீஸ்கர் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் பெற்றது.

    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் பின் தங்கிய நிலைமையில் ஃபாலோ ஆன் பெற்று பேட்டிங் செய்த அசாம் அணிக்கு ரிசவ் தாஸ் 17, ராகுல் ஹசகிரா 39, கடிகோன்கர் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த நிலைமையில் 4-வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதிரடியாக விளையாடிய அவர் 56 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்பாக கடந்த 2016 ரஞ்சிக்கோப்பையில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் 48 பந்துகளில் சதம் விளாசி முதல் இடத்தில் உள்ளார். அதே வேகத்தில் அட்டகாசமாக விளையாடிய ரியான் பராக் 11 பவுண்டரி 12 சிக்சருடன் 155 (87) ரன்களை 178.16 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசாம் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்து அவுட்டானார்.

    அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க அசாம் அணி 254 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மீண்டும் சுருட்டிய சட்டீஸ்கர் சார்பில் ஜிவேஷ் புட்டே, வாசுதேவ் பாரேத் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இறுதியில் 87 ரன்களை துரத்திய சட்டீஸ்கர் அணிக்கு ஏக்நாத் கேர்கர் 31*, ரிசப் திவாரி 48* ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த வகையில் கேப்டனாக விளையாடிய ரியான் பராக் தன்னுடைய ஐபிஎல் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து மாநில அணியை குறைந்தபட்சம் தனி ஒருவனாக இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

    ×