என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா தொடர்"
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
மும்பை:
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. போப் லிட்ச்பீல்ட் 49 ரன்னும், எல்லீஸ் பெரி 37 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சாது 4 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பாட்டீல், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஸ்மிருதி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்களை எடுத்து வென்றதுடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஷபாலி வர்மா 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- மும்பையில் இன்று நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது.
மும்பை:
அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது.
அடுத்ததாக 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் மும்பையில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஆஸ்திரேலியா டெஸ்டில் தடுமாற்றம் கண்டாலும் குறுகிய வடிவிலான போட்டிகளில் அசுர பலமிக்கது. 50 ஓவர் உலகக் கோப்பையை 7 முறை கைப்பற்றி வாகை சூடியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ள இந்தியா அதில் 40-ல் தோல்வியை சந்தித்துள்ளது. 10-ல் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. அதுவும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 ஆட்டங்களில் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்த முறை முட்டுக்கட்டைபோடும் உத்வேகத்துடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, ஆல்-ரவுண்டர்கள் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா தாக்குர், சுழற்பந்து வீச்சாளர்கள் சினே ராணா, ஸ்ரேயங்கா பட்டீல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்திய பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜூம்தர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'ஆஸ்திரேலியா சிறந்த ஒரு அணி. நீண்ட காலமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனால் தான் அவர்கள் 50 ஓவர் போட்டியிலும் சரி, 20 ஓவர் போட்டியிலும் சரி நிறைய உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறார்கள். அதே சமயம் நாங்கள் எங்களது பலத்துக்கு தக்கபடி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மேலும் உலகின் மிகச்சிறந்த ஒரு அணிக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் நாங்கள் முன்னேற்றம் காண்பதை எதிர்நோக்கி உள்ளோம். அதை செய்தாலே எனக்கு மகிழ்ச்சி தான்' என்றார்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் அலிசா ஹீலி, கிம் கார்த், லிட்ச்பீல்டு, தாலியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, அனபெல் சுதர்லாண்ட், ஆஷ்லி கார்ட்னெர், மேகன் ஸ்கட் என்று தரமான வீராங்கனைகளுக்கு பஞ்சமில்லை. டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வேட்கையுடன் வரிந்து கட்டுவார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
- களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.
பெங்களூரு:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.
ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 53 ரன்னும் ( 5 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 21 பந்தில் 31 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 16 பந்தில் 24 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். பென் துவர் ஷிஸ், பெகரன்டார்ப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Bishno\?/ ?#Bishnoi's bowling was ridiculous yesterday ?????#INDvAUS #RaviBishnoi pic.twitter.com/3d8yXQW4RP
— Mohd Nazim ?? (@ImNaz33) December 4, 2023
பென் மெக்டர்மட் 36 பந்தில் 54 ரன்னும் ( 5 சிக்சர்) டிரெவிஸ் ஹெட் 18 பந்தில் 28 ரன்னும் ( 5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் மேத்யூ வேட் 15 பந்தில் 22 ரன்னும் ( 4 பவுண்டரி ) எடுத்தனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், அர்ஸ்தீப் சிங், பிஷ்னோய் தலா 2 , அக் ஷர் படேல் 1 விக்கெட டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. ஏற்கனவே முதல், 2-வது மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;-
இந்த 20 ஓவர் தொடர் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.
எங்கள் வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறினோம். அவர்களும் அதனை தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தீபக் சாஹர் அவசர மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் அவர் இடத்தில் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார்.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஹெட் 28, பிலிப் 4, ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17, மேத்யூ ஷார்ட் 16, பென் துவர்ஷுயிஸ் 0 ரன்னில் வெளியேறினர்.
ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார். கடைசி வரை போராடிய மேத்யூ வேட் 22 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் 53 ரன்னில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டி பவர்பிளேயிலேயே விக்கெட்டை இழந்தார் ஜெய்வால். அவர் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6 என வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி திணறியது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் மற்றும் ஜிதேஷ் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி காட்டிய ஜித்தேஷ் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசி 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இந்திய அணியில் மாற்றங்கள் இல்லை
- இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியா பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. தீபக் சாஹருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்.
- சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும்.
- அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும்.
பெங்களூரு:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
சின்னசாமி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். அத்துடன் பவுண்டரி தூரமும் குறைவாகும். எனவே இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரில் பகலில் மேக மூட்டம் 90 சதவிதம் இருக்கும். மழை பெய்ய 40% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இரவில் மழைக்கான வாய்ப்பு 25% ஆக குறைவாகவும் மேக மூட்டம் 100% இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
- 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது.
- தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும்.
பெங்களூரு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும்.
அதேவேளையில் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய இந்திய அணி தீவிரமாக முயற்சிக்கும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் 2 வீரர்களுக்கு முதல் 4 டி20-யில் வாய்ப்பு வழங்காததால் நாளைய போட்டியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, ஆகியோர் மட்டும் இந்த தொடரில் விளையாடாமல் உள்ளனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒரு போட்டியிலாவது விளையாடி உள்ளனர். எனவே இருவரும் அடுத்த போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 4-வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இந்த போட்டியில் நாங்கள் டாசில் மட்டுமே தோல்வியை சந்தித்தோம். அதை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சரிவை சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொருவருமே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அனைவரிடமும் பேசினேன். அந்த வகையில் நமது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக அக்சர் பட்டேல் கடினமான இந்த சூழ்நிலையிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் கூறியதாவது:-
இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் இலக்கினை நோக்கி முன்னேற முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம். இந்த தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்தது.
ராய்ப்பூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் அதிரடியாக ஆடிய இந்தியா 20 ஓவரில் 174 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 154 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று பெற்ற வெற்றி இந்திய அணியின் 136 டி20 வெற்றி ஆகும். 213 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இந்திய அணி அதில் 136 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் அணி 226 டி20 போட்டிகளில் ஆடி 135 வெற்றிகளைப் பெற்றிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
மேலும், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் நடந்த 14 டி20 தொடர்களில் இந்தியா தொடர் வெற்றி பெற்றுள்ளது என்ற சாதனையையும் படைத்துள்ளது.
- இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்ய முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஹெட் - ஜோஷ் பிலிப் களமிறங்கினர். 3 ஓவரில் 40 ரன்கள் குவித்த இந்த ஜோடியை பிஸ்னோய் பிரித்தார். பிலிப் 8 ரன்களில் போல்ட் ஆனார். இவர் அவர் ஆன அடுத்த ஓவரிலேயே அதிரடியாக விளையாடிய ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஆரோன் ஹார்டி 8 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து டிம் டேவிட்- பென் மெக்டெர்மாட் ஜோடி நிதானமாக விளையாடினர். 22 பந்துகள் சந்தித்த பென் மெக்டெர்மாட் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 20 பந்தில் 19 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதி வரை போராடிய வேட் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஆரோன் ஹார்டி பிரித்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 8, சூர்யகுமார் யாதவ் 1 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனையடுத்து ருதுராஜ் - ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 32 ரன்களுக்கு வெளியேறினார்.
இந்நிலையில் ரிங்கு சிங்குடன் -ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஜிதேஷ் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த அக்சர் படேல் 0 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்