என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsAUS"

    • முதல் போட்டியும் கடைசி போட்டியும் மழையால் கைவிடப்பட்டது.
    • மூன்று போட்டிகளில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றிருந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் எளிதாக கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை மேக்ஸ்வெல் பிடிக்க தவறினார். இதனால் அபிஷேக் சர்மா 5 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார்.

    3ஆவது ஓவரில் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரி விளாசினார். 4ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாவதில் இருந்து தப்பினார். எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்ச் மிஸ் செய்தார். இதனால் 11 ரன்னில் மீண்டும் ஒரு வாய்பு கிடைத்தது.

    இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

    நீண்ட நேரமாக மழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.
    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.

    இதில் முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

    மிட்செல் மார்ஷ் தலை மையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக அறிமுகம் ஆனார்.
    • மழையால் ஆட்டம் 26 ஓவராக குறைக்கப்பட்டு, ஆஸ்திரேலியா 131 இலக்கை எளிதாக எட்டியது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. அடிக்கடி மழை குறுக்கீடு செய்ததால் இந்தியா இடைவெளி விட்டுவிட்டு 26 ஓவர்களே விளையாடின. இதில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது. ஒரு கட்டத்தில் 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 26 ஓவராக குறைக்கப்பட்டது. 9.2 ஓவரில் 84 ரன்கள் அடித்தது.

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேயாலியாவுக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 21.1 ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி சுப்பன் கில்லுக்கு கேப்டனாக முதல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த 2ஆவது இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி கேப்டனாக விளையாடிய முதல் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார்.

    என்றாலும் பின்னர் விராட் கோலி கேப்டன் காலத்தில் இந்தியா அபாரமான சாதனைகளை படைத்துள்ளது. அதேபோல் சுப்மன் கில் தலைமையின் கீழ் இந்தியா சாதனைகளை படைக்கும் என நம்பிக்கை வைப்போம்.

    • இந்தியாவின் தொடக்க ஜோடி 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
    • ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா ராவல் 75 ரன்களும் விளாசினர்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.

    ஸ்மிரிதி மந்தனா ஆட்டமிழந்ததும், பிரதிகா ராவல் 96 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுதது வந்த ஹர்லீன் தியோல் 42 பந்தில் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னில் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 பந்தில் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்தில் 32 ரன்களும் சேர்க்க இந்தியா 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்டு 5 விக்கெட் சாய்த்தார். ஷோபி மொலினக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார்.
    • ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    • 28 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    • பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.
    • இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ரேனுகா சிங் 9 ஓவரில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரதிகா ராவல் 10 ரன்னில் வெளியேறினார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார்.
    • இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் இடையே கடும் போட்டி.

    வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் கீப்பர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

    • முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

    முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது
    • நிதானமாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 186 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடியை டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் விளாசினார். லபுசங்கே 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று பிற்பகல் வரை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

    ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், 2-1 என தொடரை வென்றது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
    • முகமது சமி ஓவரில் ஸ்மித் இந்த ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 0 ரன்னிலும் டேவிட் வார்னர் 43 ரன்னிலும் லாபுசேன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ட்திராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்மித் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. முகமது சமி ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. அவர் தொடர்ந்து அவுட் ஸ்விங் வீசிய நிலையில் அந்த பந்தை இன் ஸ்விங் செய்தார். அதனை ஸ்மித் பேட்டில் வாங்காமல் விட்டுவிட்டார். அப்போது தான் அவர் அந்த ரியாக்ஷன் கொடுத்தார். ஓ.... இன் ஸ்விங் என கை சைகையில் காட்டினார்.

    இவரது ரியாக்ஷன் அடிக்கடி வைரலாகி வருவதுண்டு அதுபோல இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

    • ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
    • இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார். டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். லாபுசேன் 26 ரன்னுடன் ஆடினார். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது.

    உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை ஆஸ்திரேலியா குவித்துள்ளது.

    ×