என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 cricket match"

    • இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.
    • இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.

    இதில் முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

    நாளைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் உள்ளனர்.

    கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

    மிட்செல் மார்ஷ் தலை மையிலான ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், இங்லிஸ், ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.
    • மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.

    ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

    இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    • மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.
    • மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து.

    இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணிக்கு வெலிங்டனில் தொடங்க இருந்தது.

    ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

    இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், வெலிங்டனில் சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது.

    • சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் நாளை (25.01.2025) நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு பயண ஏற்பாட்டை தெற்கு ரெயில்வேயின் சென்னை பிரிவு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

    தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, போட்டியின் அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புறநகர் ரெயில்களில் இலவச பயணத்தை வழங்குகிறது.

    இலவச பயண வசதியின் முக்கிய விவரங்கள்:

    இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் போட்டி டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பார்வையாளர்கள்.

    சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.

    ஜனவரி 25, 2025 (நாளை) அன்று முதல் மற்றும் திரும்பும் பயணங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

    பயணிகள்/பார்வையாளர்கள் தங்கள் பயணத்தின் போது தங்கள் அசல் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

    டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
    • போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 2-வது டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 100 சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    இப்போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான ஆன்-லைன் டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை கண்டக்டரிடம் காண்பித்து மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் (ஏ.சி. பஸ் நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்னரும் பஸ்களில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் இந்த போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக கடற்கரையிலிருந்து இன்று இரவு 10.40, 11 மணிக்கு வேளச்சேரிக்கும், மறுமார்க்கமாக வேளச்சேரியிலிருந்து இரவு 10.20, 10.40 மணிக்கு கடற்கரைக்கும் சிறப்பு பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்கள் மின்சார ரெயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம். பயணத்தின்போது கிரிக்கெட் போட்டிக்கான அசல் டிக்கெட்டை கையில் வைத்திருப்பது அவசியம். டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையின்போது அதனை காண்பிக்க வேண்டும்.

    ×