என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free train travel"

    • சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.
    • கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.

    சென்னை சேப்பாக்கத்தில் நாளை (25.01.2025) நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச புறநகர் ரெயில் பயணத்தை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளதாவது:-

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையேயான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியைக் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு பயண ஏற்பாட்டை தெற்கு ரெயில்வேயின் சென்னை பிரிவு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

    தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்கும், பார்வையாளர்களுக்கு ஒட்டுமொத்த அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், தெற்கு ரயில்வே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, போட்டியின் அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் புறநகர் ரெயில்களில் இலவச பயணத்தை வழங்குகிறது.

    இலவச பயண வசதியின் முக்கிய விவரங்கள்:

    இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்கான செல்லுபடியாகும் போட்டி டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பார்வையாளர்கள்.

    சென்னை கோட்டம் முழுவதும் இரண்டாம் வகுப்பு புறநகர் ரெயில்களுக்கு மட்டுமே இலவச பயணம் பொருந்தும்.

    ஜனவரி 25, 2025 (நாளை) அன்று முதல் மற்றும் திரும்பும் பயணங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.

    பயணிகள்/பார்வையாளர்கள் தங்கள் பயணத்தின் போது தங்கள் அசல் கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

    டிக்கெட் சரிபார்ப்பு ஊழியர்களின் கோரிக்கையின் பேரில் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.சி.க்களுக்கு ரெயிலில் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சென்னைக்கு செல்ல ரெயிலில் 2 அடுக்கு ஏசி பெட்டியில் (படுக்கை வசதி) பயணம் செய்யவும் அவர்கள் திரும்பி செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதற்கு ஏற்ப தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கும் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly

    ×