என் மலர்
நீங்கள் தேடியது "Republic Day"
- கடந்த குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
- கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
2024ம் ஆண்டில் நாட்டின் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் உள்ள ராஜ பாதையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். கடந்த முறை சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம். அதன்படி கடந்த குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்நிலையில், வரும் 2024ம் ஆண்டின் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மத்திய அரசு, ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது.
- பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
புதுடெல்லி :
ஆண்டுதோறும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடப்பது வழக்கம். இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
மாநிலங்களின் கலாசார பாரம்பரியத்தை விளக்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறுகின்றன. அணிவகுப்பு நடக்கும் ராஜபாதையின் பெயர், 'கடமைப்பாதை' என்று மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ஆயுதப்படைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளித்து வருகிறது. சமீபத்தில், பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே இடம் பெற்ற சில குழுக்கள் பங்கேற்றுள்ளன. ஆண்கள் இடம்பெற்ற குழுவுக்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு கடமைப்பாதையில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில், முற்றிலும் பெண் குழுக்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பெண் குழுக்களை மட்டும் பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது.
அணிவகுத்து செல்லும் குழுக்களிலும், பாண்டு வாத்திய குழுக்களிலும், அலங்கார ஊர்திகளிலும் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இதர கலாசார நிகழ்ச்சிகளிலும் பெண்களே இடம் பெறுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக முப்படைகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு ராணுவ அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
- சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.
முதல்வர் செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரை நிகழ்த்தினார். மாரிச்சாமி, கல்லூரியின் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் பிச்சிப்பூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) சிறப்பு அணிவகுப்பு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்களும், பேராசிரியர்களும் குடியரசு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல்திறன் அடிப்படையில் 4-ம் ஆண்டு மாணவர் அபினாசுக்கு ''கேடட் அண்டர் ஆபீசர்'' என்ற ''ரேங்'' வழங்கப்பட்டது.
4-ம் ஆண்டு எந்திரவியல் துறை மாணவர் அருணுக்கு கம்பெனி குவாட்டர் மாஸ்டர் சார்ஜென்ட் என்ற ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர் ராஜ்குமார், 2-ம் ஆண்டு மாணவர் கார்த்திக் ஆகியோருக்கு சார்ஜென்ட் ரேங்கும், 3-ம் ஆண்டு மாணவர்களான பாலமுரளி, மனோஜ், சங்கவி ஆகியோருக்கு ''கார்பொரல்'' ரேங்கும் வழங்கப்பட்டது.
கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் 4-ம் ஆண்டு மாணவர் சிவ சுப்பிரமணியன் டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரி நிர்வாகம், கல்லூரி தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் மாதவன், உடற்கல்வி துறை இயக்குநர் சுந்தமூர்்த்தி மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- ராணுவத்தின் 26 பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் அணி வகுப்பும், இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
- சூரிய குடும்பம், புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்க ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்தியாவின் குடியரசு தின விழா கடந்த 26-ந்தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் போது டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் பங்கேற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வை காண குவிந்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ராணுவத்தின் 26 பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின் அணி வகுப்பும், இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
வழக்கமான சிறப்பு நிகழ்வுகளுடன், ட்ரோன்கள் மூலமான 'வான் மின்னொளி' நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முற்றிலும் இந்தியாவில் தயாரான 3,500 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், விடுதலையின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் வகையில், புதிய மெட்டுக்கள் இசைக்கப்படுகிறது. சூரிய குடும்பம், புல்லட் ரெயில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்க ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.
- மதுரை நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
- 2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
மதுரை
மதுரை தெற்குவாசல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். தெற்குவாசல் நாடார் சங்கத்தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாடார் பள்ளிகள் செயலா ளர் குணசேகரன் வர வேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் அன்பரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவுரவ தலைவர்கள் ராஜன், முனிராஜன், பொருளாளர் என்.எல்.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதேபோல் நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப் பட்டது. தலைமை யாசிரியர் நாகநாதன் தொடக்கவுரை யாற்றினார்.
நாடார் வித்யாபிவிருத்தி சங்க அறப்பணிக்குழு தலைவர் உத்தண்டன் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச் செயலாளர் அருஞ்சுனைராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திபாய் சுவாமி அடியார் நன்றி கூறினார்.
2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
- வாடிப்பட்டி யூனியனில் குடியரசு தின கிராமசபை கூட்டம் நடந்தது.
- வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லா டம்பட்டி, கச்சைகட்டி, ராமயன்பட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராமசபைக்கூட்டங்கள் நடந்தன. கச்சைகட்டியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆலயமணி தலைமை தாங்கினார். சிறப்புஅழைப்பாளர்களாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., தாசில்தார் வீரபத்திரன், யூனியன் கமிஷனர் கதிரவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விராலிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் காளியம்மாள் தலைமையில் துணைத்தலைவர் மணிகண்டன், பற்றாளர் சரோஜா, ஊராட்சி செயலாளர் செந்தாமரை முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செம்மினிப்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் தெய்வதர்மர் தலைமையில் துணைத்தலைவர் பஞ்சு, பற்றாளர் லட்சுமி, ஊராட்சி செயலாளர்சரஸ்வதி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
குட்லாடம்பட்டியில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிமீனா தலைமையில் துணைத்தலைவர் கதிரவன், பற்றாளர் மலர்மன்னன், ஊராட்சிசெயலாளர் தனலட்சுமி முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ராமயன்பட்டியில் ஊராட்சிமன்றதலைவர் குருமூர்த்தி தலைமையில் துணைத்தலைவர் ராஜலட்சுமி, பற்றாளர் கவிதா, ஊராட்சிசெயலாளர் மகாராஜன் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பூச்சம்பட்டியில் தலைவர் சாந்தி தலைமையில் துணைத் தலைவர் லதா, பற்றாளர் சங்கர், ஊரட்சிசெயலாளர் செல்வம்முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள், ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம நி ர்வாக அலுவலர்கள், வட்டசட்டபணிகள் குழு வக்கீல்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
- மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடிபகுதிகளில் 74-வது குடியரசு தின விழா நடந்தது.
மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன், எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சக்திவேல் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றினார்.துணைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அண்ணா துரை, மலைச்சாமி மற்றும் ஆணையாளர், அலுவலர்கள் கொடி வணக்கம் செலுத்தினர்.
திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதன் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு ஆட்சி குழுத் தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
விழாவில் மாணவ, மாணவிகள், ஆட்சிக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் ஜஹாங்கீர் நன்றி கூறினார்.
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைவர் நஜூமுதீன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோபிநாத், துணைத் தலைவர் இப்ராஹிம் மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
- காரைக்குடியில் குடியரசு தின கொண்டாட்டப்பட்டது.
- லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நடந்தது. துணைவேந்தர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளியின் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேசுவரி தலைமை தாங்கினார். தலைமை ஒருஙகிணைப்பாளர் சிவகாமி முத்துகருப்பன் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் வைரவசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி யேற்றினார். தாளாளர் சத்தியன் வாழ்த்து தெரிவித்தார்.
புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் குமார் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார்.
சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் அருண்குமார் முன்னிலை வகித்தார்.லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
காரைக்குடி முத்துப்பட்டினம் சரசுவதி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியை மீனா கொடியேற்றி பேசினார்.
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பொறியாளர் கோவிந்த ராஜ், துணை பொறியாளர் சீமா, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, கவுன் சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகா தார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையத்தில் குடியரசு தினவிழா நடந்தது.
- பள்ளி செயலர் பாலசுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா நடந்தது. மேனேஜிங் டிரஸ்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம் ராமசுப்பிரமணியராஜா முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி விவே கானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடந்த நாடகப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய மாணவர் படை மற்றும் சாரணர் இயக்க மாணவ தொண்டர்கள் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர்கள் ஏற்றுக்கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா,
என்.கே.ராம்வெங்கட் ராஜா, ராஜவேல்.சிவ குமார், செல்வ அழகு, சங்கிலி விக்ரம், கருத்தாளர் சிவகுமார், பழனியப்பன், ராமசாமி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜபாளையம் முடங்கியார்ரோட்டில் பொன்விழா மைதானம் அருகில் உள்ள பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் வந்து சென்ற புனித தலமான சுதந்திர தின நினைவு வளைவு கொடிக்கம்பத்தில் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றபட்டது.
ராஜுக்கள் கல்லூரி தேசிய மாணவர்படை மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் ராஜபாளையம் தீயணைப்புநிலைய அதிகாரி சீனிவாசன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் கோயில் நண்பர்கள் நற்பணி மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் செய்திருந்தார்.
வைமா கல்விக் குழுமப் பள்ளிகளில் ஒன்றான வைமா வித்யால யாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். முதல்வர் கற்பகலட்சுமி தேசியக் கொடி ஏற்றினார். 3-ம் வகுப்பு மாணவர் ருசித் வசீகரன், 2-ம் வகுப்பு மாணவர் அகிலேஷ் குடியரசு தினம் பற்றி பேசினர். 2-ம் வகுப்பு மாணவர் எழிலின்பன் தேச பக்தி பாடல் பாடினார்.
5-ம் வகுப்பு மாணவி அமிர்தா குடியரசு தின கவிதை வாசித்தார். பிரி.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. மாணவர்கள் தேசத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து வந்தனர். மாணவிகள் நடனம் ஆடினர். விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன்.மேனேஜிங் டிரஸ்டி அருணா திருப்பதி செல்வன் வழிகாட்டுதலின்படி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவில் உள்ள ராமலிங்கவிலாஸ் ஜெயராம் தொடக்க பள்ளியில் 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை வாசுகி வரவேற்றார்.
பள்ளி செயலர் பால சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 31-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அவருக்கு பள்ளி செயலர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
- விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
- மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு
நாமக்கல்:
தமிழக தொழிலாளர் துறை கமிஷனர் அதுல் ஆனந்த், கோவை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன், ஈரோடு தொழிலாளர் இணை கமிஷனர் சசிகலா ஆகியோர் உத்தரவின் பேரில், நாமக்கல் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் தேசிய மற்றும் விடுமுறை தினமான ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
17 நிறுவனங்களிலும், 51 ஹோட்டல்கள் மற்றும்
பேக்கரிகளை ஆய்வு செய்ததில் 37 நிறுவனங்களிலும், 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 6 மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களிலும் விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 60 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க அனுமதி பெறாமலும் இருந்தது தெரியவந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்க ளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தாக, தொழிலாளர் உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.