என் மலர்
நீங்கள் தேடியது "Indian flag"
- இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
- அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.
இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
- சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.
இந்நிலையில் சிட்னியில் ரசிகர்களுடன் உரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியில் ஆட்டகிராப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஷாஹீன் ஷா அப்ரிடி இந்தியக் கொடியில் இந்திய ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டார். இதற்கு, ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.