என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "para olympic"
- இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் உள்ளது.
- பாரா ஒலிம்பிக் தடகளத்தில் இன்று மதியம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதிப் போட்டி நடக்கிறது.
பாரீஸ்:
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் (12 விளையாட்டு) கலந்து கொண்டனர். 8-வது நாளான நேற்று வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் உள்ளது.
9-வது நாளான இன்று இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரா ஒலிம்பிக் தடகளத்தில் இன்று மதியம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்54 பிரிவு இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் இந்திய வீரர் திபேஷ்குமார் பங்கேற்கிறார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதல் எப்46 பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் பாவனாபென் அஜபாஜி சவுத்ரி களம் காணுகிறார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் எப்64 பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரவீண்குமார் பங்கேற்கிறார்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்57 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோம் ராணா, ஹோகாடோ செமா களம் காணுகிறார்கள்.
ஆண்களுக்கான 400 மீட்டர் (எப்47 பிரிவு) ஓட்டத்தில் திலீப் காவித், பெண்களுக்கான 200 மீட்டர் (எப்12) ஓட்டத்தில் சிம்ரன் சர்மா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பெண்களுக்கான வலுதூக்குதல் 67 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் கஸ்தூரி ராஜாமணி பங்கேற்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இப்போட்டி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது.
கேனோயிங் போட்டியில் இந்திய வீரர் யாஷ்குமார், இந்திய வீராங்கனைகள் பிராச்சி யாதவ், பூஜா ஒஜா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இன்று ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வலுதூக்குதல் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 15 பதக்கங்களை வென்றுள்ளது.
- இதில் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், புருனே சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற யோகேஷ், சுமித் அண்டில், ஷீதல் தேவி மற்றும் ராகேஷ்ஜ் குமார் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கனவே பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5 பதக்கங்களை வென்றுள்ளது.
- இதில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் ஆகியவை அடங்கும்.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவில் மணீஷ் நர்வால் வெள்ளி வென்றார். தடகளத்தில் பிரீத்தி பால் ஒரு வெண்கலம் வென்றார். நேற்று ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
இதையடுத்து, பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார். தங்கம் வென்ற அவனி லெகராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அவனி லெகரா இந்த உரையாடலில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது.
- கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
- வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் பாராஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீ. ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
இந்திய வீராங்கனை ப்ரித்தி பால் 100 மீ. டி35 ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும், 10 மீ. ஏர் பிஸ்டல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் வெள்ளிப் பதக்கமும் வென்றிருப்பது பெருமைக்குரியது.
கடின உழைப்பு, விடா முயற்சி, தொடர் பயிற்சி ஆகியவற்றால் வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். வீரர், வீராங்கனைகளின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பெற்றோர்களையும், பயிற்சியாளர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
- பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
17 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவை பிரான்ஸ் சிறப்பாக நடத்தியது.
இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய வில் வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.
தகுதிச் சுற்றில் அற்புதமாக விளையாடிய ஷீத்தல் 703 புள்ளிகளை பெற்றார். எனினும், 704 புள்ளிகளை பெற்ற துருக்கி வீராங்கனை சாதனை படைத்தார். ஒருபுள்ளியில் உலக சாதனையை தவறவிட்ட போதிலும், வில் வித்தையில் 700 புள்ளிகளை கடந்த முதல் இந்திய பாராலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையை ஷீத்தல் பெற்றுள்ளார்.
- சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
- பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.
பாரீஸ்:
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் இந்த பாரா ஒலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்தி சென்றார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா மிகவும் மோசமாக நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பதில் சொல்லும் விதமாக பாரா ஒலிம்பிக்கில் தொடக்க விழாவை சிறப்பாக பிரான்ஸ் நடத்தியது.
இதில் 167 நாடுகளை சேர்ந்த 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பாரா ஒலிம்பிக் வரலாற்றிலே அதிகபட்சமாக 84 வீரர் வீராங்கனைகளை இந்தியா இம்முறை அனுப்பி இருக்கிறது.
பாரிசில் முக்கிய பகுதியான லா கான்கோர்டு என்ற இடத்தில் இந்த தொடக்க விழா நடந்தது. இதில் 140 நடன கலைஞர்கள் பங்கேற்று கண்கவரும் நடனத்தில் ஈடுபட்டனர். இந்த தொடக்க விழாவில் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்கரான் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் கலைஞர் கிறிஸ்டின் குழுவினர் நடத்திய இசை கச்சேரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதன் பிறகு போர் விமானங்கள் மூலம் வண்ண புகைகள் வெளியேற்றி வானத்தில் வட்டமிட்டு படி சென்றது.
இந்தத் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு கடந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற சுமித் ஆண்டில்க்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் என்ற பாக்கியஸ்ரீ ஜாதவ்க்கும் கிடைத்தது. சுமித் ஆன்ட்டில் கடந்த பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார்.
இதை போன்று பாக்கியஸ்ரீ ஜாதவ் குண்டு எறிதலில் ஆசிய பாரா போட்டிகளில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய குழுவினர் வெள்ளை நிற ஆடை மற்றும் தேசியக் கொடியை ஏந்தி சென்றனர். கடந்த முறை இந்தியா ஐந்து தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 24-ம் இடத்தை பிடித்தது. இம்முறை அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருப்பதால் மேலும் அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்துள்ளது .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்