என் மலர்
நீங்கள் தேடியது "PCB"
- அசார் அலி ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
- அசார் அலி தலைமையில் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி. இவர் பாகிஸ்தானின் தேர்வுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தேர்வுகுழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். அத்துடன் இளைஞர் மேம்பாட்டுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 12 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். அவர் ராஜினாமா செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் ஏழுதியுள்ளார். அவரது ராஜினாமாவை பிசிபி ஏற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அசார் அலிக்கும் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ஷாஹீன்ஸ் (பாகிஸ்தான் A அணி) மற்றும் அண்டர்-19 கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அஹ்மத்-க்கு திடீரென வழங்கப்பட்டது. இதனால் அசார் அலி ஏமாற்றம் அடைந்தார். இதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசார் அலி பாகிஸ்தான் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு ODI கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பாகிஸ்தான் 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றது குறிப்பிடத்தக்கது.
- 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
- மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதை தொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்பட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச லீக் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது விமானம் வீழ்வது போல் சைகை காட்டினார்.
- பிசிசிஐ புகார் அளிக்க ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஹரிஸ் ராப்-க்கு எதிராக ஐசிசி-யில் புகார் அளித்தது. புகார் விசாரணையில் ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஹரிஸ் ராஃப்க்கான அபராத தொகையை மொஹ்சின் நக்வி செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஃப்-க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சைகை காண்பித்த சஹிப்சதா பர்ஹானை எச்சரித்த ஐசிசி, அபராதம் ஏதும் விதிக்கவில்லை.
போட்டி பரிசளிப்பு விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- முகமது ரிஸ்வான் ஒயிட்பால் அணி கேப்டனாக இருந்து வருகிறார்.
- ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார்.
பாகிஸ்தான் ஒயிட்பால் கிரிக்கெட் அணி கேப்டனாக ரிஸ்வான் இருந்து வருகிறார். பாகிஸ்தான் ஜிம்பாப்வே சென்று டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சல்மான் ஆகா கேப்டன்ஷிப் செய்யும் விதம் புதிய பயிற்சியாளர் மைக் ஹசன் மற்றும் தேர்வுக்குழு அதிகாரிகளை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதனால் சல்மான் ஆகா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 3 வடிவிலான கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.
முகமது ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான அணி நியூசிலாந்து சென்று ஒருநாள் தொடரை 3-0 எனத் தோற்றிருந்தது. அவரது கேப்டன்ஷிப் விமர்சனத்திற்கு உள்ளானது. அத்துடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது.
ஷான் மசூத் டெஸ்ட் அணி கேப்டனாக உள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் 12 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணிக்கெதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை 0-2 என இழந்திருந்தது. இதனால் இருவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.
இந்த நிலையில்தான் சல்மான் ஆகாவின் கேப்டன்ஷிப், அவரின் தெளிவு, தந்திரோபாய திறமை ஆகியவை தேர்வாளர்களை ஈர்த்துள்ளது.
- லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
- அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை துபாய்க்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அவசர ஆலோசனைக்கு பின் இந்த முடிவை அறிவித்துள்ளது. முன்னதாக ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெறவிருந்த பிஎஸ்எல் எக்ஸின் கடைசி எட்டு போட்டிகள் இப்போது துபாயில் நடைபெறும் என்று பிசிபி உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த 6 நாட்களில் PSL மீண்டும் தொடங்கும், மேலும் அனைத்து அணிகளும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் துபாய்க்கு அனுப்பப்படும்.
- இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
- பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருவதால் பாதுகாப்பு குறித்து கவலை.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் அவைகளை இடைமறித்து தாக்கி அழித்தது. அதேவேளையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வருகிற 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டிரோன் தாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு யோசிக்க தொடங்கியது.
ஏனென்றால் டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், வான் டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
மேலும், பாகிஸ்தான் அரசின் ஆலோசனையை கிரிக்கெட் போர்டு பன்பற்றும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் சிஇஓ சல்மான் நசீர், வெளிநாட்டு வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என உறுதி அளித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தால் வெளிநாட்டு வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக கார்பின் போஷ் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
- கார்பின் போஷ்கை ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசனானது இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போதுவரை 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த தென் அப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் லிசாத் வில்லியம்ஸ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அவர் தொடரில் இருந்து விலகியதன் காரணமாக அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கார்பின் போஷ்க்கை அவரது அடிப்படை ஏலத்தொகையான ரூ.75 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாட இருந்த நிலையில் ஐபிஎல் ஒப்பந்தம் காரணமாக அவர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகினார்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கார்பின் போஷ்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் கார்பின் போஷ்கின் இந்த முடிவின் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அவர் பங்கேற்பதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த பிஎஸ்எல் தொடரில் அவர் தேர்வு செய்யப்படமாட்டார் என்பதையும் பிசிபி தெளிவுபடுத்தியுள்ளது. இதனையடுத்து தன்னுடைய முடிவின் காரணமாக கார்பின் போஷ் மன்னிப்பு கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
- அது தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.
இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு "விதிமுறைகள்" தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புகாருக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. "பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்," என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
- போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது.
- விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது. அன்றைய தினத்தில் நவராத்ரி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி அட்டவணையை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் அக்டோபர் 12-ந்தேதி மோதும் போட்டியை அக்டோபர் 10-ந்தேதி மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணை மாற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானை தொடர்பு கொண்டன. போட்டிகள் மாற்றத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல மேலும் சில மாற்றங்களும் இருக்கிறது. இதனால் விரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்ட போட்டி அட்டவணை வெளியாகும்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார்.
- பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் இடம் பெற்று இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு இப்பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். முன்னாள் கேப்டன்கள் இன்சமாம்-உல்-ஹக், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோரையும் கொண்ட இக்குழு அணியின் முன்னேற்றத்திற்காக ஆலோசனைகளை வழங்கும்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக முகமது ஹபீஸ் திடீரென்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் அளிப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் செயல் திறனை மதிப்பீடுவதற்காக நேற்று நடந்த கிரிக்கெட் வாரிய ஆலோசனை கூட்டத்தில் முகமது ஹபீசும் கலந்து கொண்டார். இதில் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், கேப்டன் பாபர் ஆசம், துணை கேப்டன் ஷதாப்கான் மற்றும் மிஸ்பா-உல்-ஹஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை போட்டியின்போது மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்தனர்
- இரண்டு பேர் காயம் குணமடைந்து பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ளனர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் பெரும்பாலான நாடுகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன.
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. கேப்டனாக பாபர் ஆசம் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா குணமடையாததால் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் இடம் பெற்றுள்ளார்.
பாபா ஆசம் (கேப்டன்), பகர் ஜமான், இமாம்-உல்-ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், முகமது நவாஸ், ஷதாப் கான், உஸ்மா மிர், ஷகீன்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், முகமது வாசிம், ஹசன் அலி.
- வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார்.
- கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது.
கராச்சி:
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றது.
இதனையடுத்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உறுதுணையாக கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது. இதில் சல்மான் பட் ஆலோசகராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏனெனில் கடந்த 2010-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சல்மான் பட் ஆதாரத்துடன் பிடிபட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்றார். அவரை தேர்வு குழுவின் ஆலோசகராக நியமிப்பது பாகிஸ்தான் அணியை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்லும்? என்று பல தரப்பினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்ததால் பாகிஸ்தான் தேர்வுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை தாண்டி பாகிஸ்தான் வாரியத்திற்குள்ளேயே அவருக்கு சில எதிர்ப்புகள் உருவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக மற்றொரு முன்னாள் வீரர் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.






