என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாரிஸ் ராஃப்"

    • ஆசிய கோப்பை தொடரின்போது இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.
    • இந்திய விமானங்களை சுட்டது போன்று ஹாரிஸ் ராஃப் சைகை காட்டியிருப்பார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் வீரர்கள் மிகவும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்கள். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்று சைகை காட்டினார். ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை தெரிவிக்கும் வகையில் அவ்வாறு சைகை காட்டினார் என இந்தியா குற்றம்சாட்டியது.

    போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது, உயிரிழந்தவர்களுக்கு வெற்றியை அர்ப்பணிப்பதாகவும், அவர்களுடன் நிற்பதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

    இருநாட்டின் கிரிக்கெட் சங்கங்களும் ஐசிசி-யில் புகார் அளித்தது. இதனடிப்படையில் ஐசிசி ஹாரிஸ் ராஃப்-க்கு 2 போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. சூர்யகுமார் யாதவுக்கு போட்டியின் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

    ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவது போன்று சைகை காட்டிய பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹானுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது விமானம் வீழ்வது போல் சைகை காட்டினார்.
    • பிசிசிஐ புகார் அளிக்க ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார்.

    இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஹரிஸ் ராப்-க்கு எதிராக ஐசிசி-யில் புகார் அளித்தது. புகார் விசாரணையில் ஹரிஸ் ராஃப்-க்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஹரிஸ் ராஃப்க்கான அபராத தொகையை மொஹ்சின் நக்வி செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஸ் ராஃப்-க்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சைகை காண்பித்த சஹிப்சதா பர்ஹானை எச்சரித்த ஐசிசி, அபராதம் ஏதும் விதிக்கவில்லை.

    போட்டி பரிசளிப்பு விழாவில் பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய சூர்யகுமார் யாதவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
    • ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ராஃப்பின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

    அந்த போட்டியின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 'தகாத வார்த்தைகளை' பயன்படுத்தியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் ராஃப், அபிஷேக் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது செய்கைக்காக அல்ல. சாஹிப்சாதா ஐசிசியிடம் இருந்து எச்சரிக்கை பெற்றுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் ஹாரிஸ் ராஃப் தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • அந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்தார்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதாவது 2022-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் ஹாரிஸ் ராஃப் பந்தில் நேராக விராட் கோலி அடித்த சிக்சர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என்று ஐ.சி.சி. பாராட்டியது. அதனை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது ஆட்டத்தில் 5 ஆவது ஓவரை ஹரிஸ் ராஃப் வீசினார். அந்த ஓவரில் கில் பவுண்டரி விளாசினார்.

    அப்போது முதல் ஹாரிஸ் ராஃப் அபிஷேக் சர்மாவை பார்த்து ஏதோ கூற, அதற்கு அபிஷேக் சர்மா பதிலடி கொடுத்தார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், நடுவர் ராஃபை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

    ×