என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2024"
- தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
- அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பும்ரா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா என பலரும் முக்கிய காரணமாக இருந்தனர். அந்த வகையில் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட்டின் மாஸ்டர் பிளான் இந்திய வெற்றி பெற முக்கிய பங்காக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதில் டேப் போடப்பட்டது. ஆட்டம் அதிரடியாக சென்ற நிலையில் இந்த சம்பவத்தால் ஆட்டம் மெதுவாகியது.
சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியதால் முதல் பந்திலேயே கிளாசன் அவுட் ஆனார். அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதட்டம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தனர். இதனால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
- உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த உலகக்கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.
காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காயத்திலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "2023 உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு எனது பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், எனது கடின உழைப்பிற்கான வெற்றி, எனக்கு டி20 உலக கோப்பையில் கிடைத்தது. உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
- 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
- 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.
வெற்றிக் கோப்பையுடன் இந்தியா திரும்பிய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக சென்றனர். பின்பு மும்பை மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து உலகக் கோப்பையில் இடம் பிடித்த வீரர்களுக்கு அவரது சொந்த மாநிலங்களில் வரவேற்பு மற்றும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன.
அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
'ஹர்டிக் பாண்டியா வதோதராவின் பெருமை' என்ற திறந்தவெளி பஸ்சில் ஹர்திக் பாண்ட்யா வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.
- இவரது பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம்.
டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற பும்ரா, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா திகழ்வதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
3 வடிவிலான கிரிக்கெட்டிலும் உலகின் சிறந்த பவுலராக பும்ரா இருக்கிறார். பும்ரா புதிய பந்தை பயன்படுத்தி அதி வேகமாக வீசுகிறார். இதுபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்தை தொடர்ந்து வீசுகிறார்.
இதைப் போன்று வெள்ளை நிற கிரிக்கெட் பந்தையும் அவர் அபாரமாக வீசி நெருக்கடி கொடுக்கின்றார். பும்ராவை நீங்கள் பந்துவீச்சு தொடக்கத்திலும் பயன்படுத்தலாம். இதே போன்று டெத் ஓவரிலும் பயன்படுத்தலாம். ஒரு ஓவருக்கு 12- 13 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இறுதி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் இருந்தால் அபாரமாக யாக்கர்கள் வீசுவார். இந்த பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினம். எனவே பும்ரா எந்த காலத்திலும் ஒப்பிட்டு பார்த்தால் அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் தான்.
பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முன்னேறி வருவதை நான் பார்த்து சந்தோஷப்படுகிறேன். பும்ராவுடன் இணைந்து பணியாற்றியதும், அவர் வீசும் போது கிரிக்கெட் வர்ணனையும் செய்வதையும் நான் மகிழ்ச்சியுடன் செய்கின்றேன்.
இதைப் போன்று ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்குகிறார். பும்ராவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.
இவ்வாறு பிரெட் லீ கூறினார்.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது.
- டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முகமது சிராஜூ இடம் பிடித்தார்.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று அசத்தியது. இதனையடுத்து அணியில் இடம் பிடித்த வீரர்கள், பயிற்சியாளர் என அனைவருக்கும் சேர்த்து ரூ. கோடியை பிசிசிஐ வழங்கியது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜூக்கு தெலுங்கானா முதலமைச்சர் அவரை பாராட்டி பரிசுகளை அறிவித்துள்ளார்.
அந்த வகையில் தெலுங்கான முதலமைச்சரான ரேவந்த் ரெட்டி இந்திய வீரரான சிராஜை நேரில் அழைத்துப் பாராட்டி, அவருக்கு மாநில அரசின் சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், அரசாங்க வேலையும் தரப்படும் உறுதி அளித்துள்ளார்.
- மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார்.
- இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது.
2024 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுக்காக இந்த உலகக் கோப்பையை தாம் சமர்ப்பிப்பதாக சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு. அவருக்கு என்னை பிடிக்கும். நான் காயமடைந்த போது NCA-ல் இருந்தேன். அங்கு 2-3 நாட்கள் பயிற்சியில் இருந்தேன். அப்போது ரோகித், நீங்கள் அதை எப்படி செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் திரும்பி வந்ததும், உங்கள் பந்துவீச்சில் நான் சொல்லியிருக்கும் மாற்றங்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று என்னிடம் கூறினார்.
இந்த உலகக் கோப்பை அற்புதமாக திட்டமிட்டு அணியை விரும்பி வழி நடத்திய ரோகித் சர்மாவுக்கானது. மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார். தொடர் நடைபெறும் போது அதை தன்னுடைய பேட்டிங்கில் செயல்படுத்திய அவர் அணியை முன்னின்று வழி நடத்தினர்.
இந்த உலகக் கோப்பை அவரைச் சேரும். இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. ஃபைனலில் விராட் பாய் 70 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே தன்னுடைய டி20 கேரியரை நினைத்து அவர் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன். அதே போல தான் ரோகித் பாய். கடந்த வருடங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாடிய ஜடேஜாவும் மகிழ்ச்சியடைவார்.
இந்த வெற்றிக்கு பின் திறந்தவெளி பேருந்தில் சென்று ரசிகர்களுடன் கொண்டாடியதை நான் மறக்கவே மாட்டேன். அது போன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. 2007-ல் வென்ற போது ரோகித் பாய் அந்த அனுபவத்தை சந்தித்திருப்பார். ஆனால் எனக்கு மும்பையில் நடந்தது நம்ப முடியாத நினைவாகும்.
என்று குல்தீப் கூறினார்.
- இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது.
- பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பின்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை பி.சி.சி.ஐ தரப்பில் வழங்கப்பட்டது. பிசிசிஐ வரலாற்றிலேயே இந்திய அணிக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச பரிசுத்தொகை இதுதான்.
இந்நிலையில் யார் யாருக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்ற விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2.5 கோடி. அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று மற்றவர்களுக்கு தலா 2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாகப் பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் வழங்கபட்டுள்ளது.
- லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது.
- சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் நேற்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு இந்திய அணியினர் மும்பைக்கு புறப்பட்டனர்.
மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடையணும். ஆனால் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கிடந்தனர்.
இதனையடுத்து திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கினர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தில் பயணம் செய்தனர்.
இந்திய அணி வீரர்களை காண லட்சக்கணக்காக ரசிகர்கள் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஆங்காங்கே தள்ளுமுள்ளு முற்பட்டது. அப்போது சிலர் காயம் அடைந்தனர். மேலும் சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதால் போலீசார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அலைகடலென ரசிகர்கள் குவிந்ததால் நரிமன் பாயிண்டில் ஆங்காங்கே காலணிகள் சிதறிக்கிடந்தன.
- சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.
- 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இதனையடுத்து புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் இன்று காலை இந்திய அணி டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.
மும்பை கடற்கரை பகுதிகளில் ஒன்றான நரிமன் பாயிண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வீரர்கள் ஊர்வலமாக சென்று வான்கடே ஸ்டேடியத்தை அடைய உள்ளனர்.
இந்நிலையில் மும்பை வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் மழையால் ஊர்வலத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து திறந்தவெளி பஸ்சில் இந்திய வீரர்கள் ஊர்வலத்தை தொடங்கி உள்ளனர். ரசிகர்கள் சூழ பஸ் ஸ்டேடியத்தை நோக்கி நகர தொடங்கியது. சுற்றி இருந்த ரசிகர்கள் முழக்கத்திற்கு மத்தியில் இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் ஊர்வலத்தை கொண்டாடி வருகின்றனர்.
2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது டி20 உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்ட நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு இந்த பேரணி நடப்பது வீரர்கள் மட்டுமன்றி ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் (ரசிகர்கள்) நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். வெற்றியை மும்பையில் ஊர்வலத்துடன் கொண்டாடுவோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்துள்ளனர்.
- ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டு வருகின்றனர்.
2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். காலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து இந்திய வீரர்கள் மும்பைக்கு புறப்படனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். வான்கடே மைதானத்தில் வாழ்த்து நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் கடுமையான கிண்டல், கேலி செய்த வேளையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக் என்று அவரது பெயரை கோஷமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது.
- காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்தடைந்தது. காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்றனர்.அதன் பிறகு இந்திய அணியினர் அங்கிருந்து மும்பைக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலத்தை தொடங்க உள்ள பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஊர்வலம் மற்றும் பாராட்டு விழாவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் ரசிகர்கள் மழையிலும் இந்திய வீரர்களுக்காக வழி நெடுகிழும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
- மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக செல்கின்றனர்.
- பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள வான்கடே மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட உள்ளனர். இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் அலை கடல் என திரண்டுள்ளனர்.
2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்