என் மலர்
நீங்கள் தேடியது "zimbabwe"
- 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 184 ரன் மட்டுமே எடுத்தது.
- இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.
தொடர்ந்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்தும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
- ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நடப்பு உலகக் கோப்பையில் கணிப்புக்கு மாறாக ஜிம்பாப்வே அணி திடீரென விசுவரூபம் எடுத்தது. லீக் சுற்றில் ஓமன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்தது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.
இதில் இலங்கைக்கு எதிராக 179 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அட்டகாசப்படுத்திய ஜிம்பாப்வே தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீசும் அப்படி தான். ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை போட்டுத்தாக்கியது.
- அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.
- பந்து வீச்சில் ஹோல்டர், போர்டே, குடகேஷ் மோட்டி பார்மில் இருக்கிறார்கள்.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ஜிம்பாப்வே- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு உலகக் கோப்பையில் கணிப்புக்கு மாறாக ஜிம்பாப்வே அணி திடீரென விசுவரூபம் எடுத்தது. லீக் சுற்றில் ஓமன், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளை தோற்கடித்தது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்தானது.
இதில் இலங்கைக்கு எதிராக 179 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து அட்டகாசப்படுத்திய ஜிம்பாப்வே தோல்வியே சந்திக்காமல் சூப்பர்8 சுற்றுக்கு வந்துள்ளது.
வெஸ்ட் இண்டீசும் அப்படி தான். ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, நேபாளம், இத்தாலி ஆகிய அணிகளை போட்டுத்தாக்கியது. பேட்டிங்கில் கேப்டன் ஷாய் ஹோப் (2 அரைசதம் உள்பட 155 ரன்), ரூதர்போர்டு, ஹெட்மயர் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் ஹோல்டர், போர்டே, குடகேஷ் மோட்டி பார்மில் இருக்கிறார்கள். என்றாலும் ஜிம்பாப்வே இப்போது அபாயகரமான அணியாக தெரிவதால், முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடும் என்று நம்பலாம்.
- இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
- அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.
ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்தார்.
- இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
- அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.
ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மிகவும் மகிழ்ச்சியாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக, மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. தம்பிகள் சேர்ந்து சாதித்ததை பார்க்கும் ஒரு அண்ணனை போல உணர்கிறேன்.
நீண்ட காலமாக நாங்கள் உருவாக்கி வந்த ஒற்றுமையை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது. வெளியில் இருந்து பார்ப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது, அதற்கு மேல், ஒரு வெற்றி. இது நம்பமுடியாதது.
நாங்கள் வந்த விதம், பந்து வீசிய விதம், நாங்கள் தொடங்கிய விதம், ஒவ்வொரு கேட்சை எடுத்த விதம், சில பவுண்டரி தடுத்தது. இது நம்பமுடியாதது. அதாவது, சிறுவர்களைக் குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. அவர்கள் இன்று வெற்றி பெறத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டோம் என்பதற்காக நிதானத்தை இழக்காமல், ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்தி முன்னேறுவோம். தனக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு கவலைப்படத்தக்கது அல்ல. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என கூறினார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருமுறை நேருக்கு நேர் சந்தித்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் மிகப்பெரிய அணியான ஆஸ்திரேலியா வீழ்த்திய ஜிம்பாப்வே அணிக்கு பல கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக வீரர் அஸ்வின் கூறியதாவது:- பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, ஆனால் டோனி முன்யோங்காவின் பீல்டிங் அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது. அவர் குறைந்தது 12-15 ரன்களையாவது சேமித்துள்ளார். மேலும் டீப் மிட் விக்கெட்டில் ஒரு அற்புதமான கேட்ச் மூலம் ஒப்பந்தத்தை நிறைவு செய்கிறார். இந்த டி20 உலகக் கோப்பையில் ஆடுகளங்கள் மிகவும் சமநிலையில் இருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.
இர்பான் பதான்
சிக்கந்தர் ராசா தலைமையில் இந்த ஜிம்பாப்வே டி20 அணி சிறப்பாக உருவாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது ஒருபோதும் எளிதானது அல்ல, ஆனால் ஜிம்பாப்வே இப்போது 120 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை சாதித்துள்ளது.
- ஆஸ்திரேலியா தரப்பில் மேட் ரென்ஷா 65 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்தத் தொடரின் 19வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கொலம்போவில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை குவித்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ப்ரியன் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 64 ரன்களை (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்து அசத்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் இங்கிலிஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் இங்கிலிஸ் 8 ரன்னிலும் அடுத்து வந்த கேமரூன் கிரீன், டிம் டேவிட் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 17 ரன்னில் வெளியேறினர்.
இதனையடுத்து மேக்ஸ்வெல்- மேட் ரென்ஷா ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் 6, பென் த்வார்ஷுயிஸ் 6 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய மேட் ரென்ஷா அரை சதம் எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து போராடிய அவர் 65 ரன்னில் வெளியேறினார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி விவரம் வருமாறு:
சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்டன் நகரவா, பிரெண்டன் டெய்லர்.
- கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.
ஹராரே:
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, அந்த அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நகரவா நியமிக்கப்பட்டார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டார்.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார். ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
அவருக்கு குசால் மெண்டிஸ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இறுதியில், இலங்கை அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 98 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி தான் ஆடிய 3 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். இல்லையேல் தனது ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் . இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு ஜிம்பாப்வே அணி நுழைந்துவிடும்.
- டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார்.
ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை விளையாடி வருகிறது. இதில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
மாறாக, இலங்கை அணி வெற்றி பெற்றால் நாளை பாகிஸ்தானுடனான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது.






