டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஜிம்பாப்வே

257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 184 ரன் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது ஜிம்பாப்வே
Published on

சென்னை:

டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

தொடர்ந்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்தும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com