என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ravi shastri"

    • ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.
    • சுப்மன் களம் இறங்கினால், சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு.

    இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தியா நாளைமறுதினம் (10ஆம் தேதி) முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சஞ்சு சாம்சனின் தொடக்க இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சஞ்சு சாம்சனைத்தான் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் வலுவான சாதனை வைத்துள்ளார். அவரை தொடக்க வீரர் வரிசையில் இருந்து நீக்க சுப்மன் கில்லுக்கு கூட கடினமான ஒன்றாக இருக்கும். சுப்மன் கில் மற்றொரு வீரருக்குப் பதிலாக அணியில் களம் இறங்கலாம். ஆனால், சுப்மன் கில்லை தொடக்க வீரராக தனித்து விட வேண்டும். அவர் இந்திய அணிக்காக விளையாடிய வகையில், தொடர்நது விளையாடி அனுமதிக்க வேண்டும். அதிக ரன்கள், சதங்களுடன் தொடக்க வீரர் வரிசையில் நிலையான ஆட்டத்தை கொண்டுள்ளார்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    • அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார்.
    • நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் நாளில் காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் அதிவேகமாக யார்க்கராக வீசிய பந்தை ரிஷப் பண்ட் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து பேட்டில் லேசாக உரசியபடி நேராக அவரது வலது காலை பலமாக தாக்கியது. ஷூவை கழற்றி பார்த்த போது, பந்து தாக்கிய இடத்தில் ரத்தக்கசிவுடன் வீங்கி இருந்தது. வலியால் துடித்த ரிஷப் பண்ட் (37 ரன்) அத்துடன் 'ரிட்டயர்ட் ஹர்ட்' ஆகி வெளியேறினார்.

    'ஸ்கேன்' பரிசோதனையில் அவரது கால்பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய காயம் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஓய்வு அவசியம். இதையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து ரிஷப் பண்ட் விலகியுள்ளார்.

    அதே சமயம் மான்செஸ்டர் டெஸ்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு 2-வது நாளில் பேட்டிங் செய்த பண்ட் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவைப்பட்டால் 2-வது இன்னிங்சிலும் பேட் செய்வார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் விக்கெட் கீப்பிங் பணியை அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் கவனிக்கிறார்.

    இந்நிலையில் என்ன ஆனாலும் அணிக்காக விளையாடுவேன் என ரிஷப் பண்ட் கூறியதாவது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்க்கு முன் ரிஷப் பண்டிடம் உன் கைவிரல் எப்படி இருக்கிறது? உடைந்து விட்டதுதானே என்றேன். அதற்கு விரல்கள் உடைந்தாலும், நான் விளையாடுவேன் என்றார்.

    அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுகிறார். நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்.

    என ரவி சாஸ்திரி கூறினார்.

    • விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம்.
    • அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.

    இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்ட் கைவிரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இருந்தார். ஆனாலும் வலியை தாங்கிக் கொண்டு இரண்டு இன்னிங்ஸ்சிலும் பேட்டிங் செய்திருந்தார்.

    அதனால் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 23-ஆம் தேதி தொடங்க இருக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் ரிஷப் பண்டை முழுநேர பேட்ஸ்மேனாக டெஸ்ட் அணியில் சேர்க்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து பேசிய அவர் கூறுகையில்:-

    ரிஷப் பண்டை நான் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மனாக மைதானத்தில் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடும் பட்சத்தில் களத்தில் நின்று பீல்டிங்கும் செய்ய வேண்டி இருக்கும்.

    அப்படி அவர் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அவருடைய காயம் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். அவர் விக்கெட் கீப்பராக இருக்கும் பட்சத்தில் கிளவுஸ் அவரது விரல்களை பாதுகாக்கும். ஆனால் கிளவுஸ் இன்றி அவர் மைதானத்தில் பீல்டிங் செய்யும் பட்சத்தில் அது அவருடைய காயத்தை மேலும் மோசப்படுத்தும்.

    எனவே அடுத்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு பூரண குணமடையவில்லை எனில் அவருக்கு ஓய்வு வழங்கலாம். அவருக்கு பதிலாக முழு உடற்தகுதியுடன் இருக்கும் விக்கெட் கீப்பரை விளையாட வைக்கலாம்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    • வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
    • இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளனர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.

    போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.

    லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

    என ரவி சாஸ்திரி கூறினார்.

    • ரோகித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
    • சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன் குவிக்க தவறியுள்ளார் என விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு அறிவித்துள்ளார். இதனால் அடுத்த டெஸ்ட் அணி கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பும்ரா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் பும்ராவின் பணிச் சுமையை (Work Load) கருத்தில் கொண்டு சுப்மன் கில்லிடம் கேப்டன் பதவி ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    ஆனால் சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் "சுப்மன் கில் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என பேசுவார்கள். வெளிநாட்டு மண்ணில் ரன்கள் அடிக்கவில்லை என்பது அடிக்கடி வரும் என்பது உங்களுக்கு தெரியும். சில நேரம் அவ்வாறு சொல்பவர்களிடம், நீங்கள் வெளிநாட்டு மண்ணில் எவ்வளவு ரன்கள் அடித்தீர்கள், எவ்வாறு விளையாடினீர்கள் என்று பாருங்கள் என்று சொல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் மூலம் அவர்களுக்கு கேப்டனாக அனுபவம் உள்ளது.
    • அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இத்தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால், அவர்களின் இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன.

    இந்நிலையில் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது சுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அவர் தற்போது 25, 26 வயது தான் ஆகிறது. அதனால் அவருக்கு தேவையான நேரம் உள்ளது. மேலும் அவருடன் ரிஷப் பண்டும் உள்ளார்.

    அவர்களுக்கு கேப்டன்களாக அனுபவம் உள்ளது. இப்போது அவர்கள் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருப்பது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சுப்மனின் சிறிய அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிகிறது. மேலும் அவர் மிகவும் அமைதியானவர். அவருக்கு எல்லா குணங்களும் உள்ளன.

    ஆனால் அனைவரும் அவர் வெளிநாடுகளில் ரன்களைச் சேர்க்கவில்லை என்று கூறுவது எனக்கு தெரியும். மேலும் ஒவ்வொரு முறையும் இந்த விமர்சனம் எழுந்து வருகிறது.

    சில நேரங்களில் நான் அவர்களிடம், நீங்கள் வெளிநாட்டில் எவ்வளவு ரன்கள் குவித்தீரிகள் என்ற கேள்வியை கேட்பேன். அதனால் வெளிநாடு, வெளிநாடு என்று கூறாமல் அவரை விளையாட அனுமதிக்க வேண்டும். மேலும், இந்த சுற்றுப்பயணங்களில் ஒன்றில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    • ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது.
    • நானாக இருந்திருந்தால், ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார் என ரவி சாஸ்திரி கூறினார்.

    இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பீர்கள் என ரோகித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போட்டிகளில் டாஸ் சுண்டப்படும்போது, ரோகித் சர்மாவை நான் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். டாஸ் சுண்டப்படும்போது, பேசுவதற்கு அதிக நேரம் இருக்காது. இருப்பினும், ஒருபோட்டியின்போது ரோகித் சர்மாவிடம் நான் பேசினேன்.

    நான் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், நீங்கள் பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என அவரிடம் கூறினேன்.

    தொடர் இந்தியாவின் கையை விட்டு நழுவவில்லை. அதனால், நீங்கள் கடைசி போட்டியில் விளையாடியிருப்பீர்கள். அந்த சூழலில் போட்டியில் நீங்கள் விளையாடியிருக்க வேண்டும். சிட்னியின் சவாலான ஆடுகளத்தில் டாப் ஆர்டரில் நீங்கள் 35-40 ரன்கள் எடுத்திருந்தால் அந்த தொடர் சமனில் கூட முடிந்திருக்கலாம்.

    ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. நானாக இருந்திருந்தால், ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார். அது என்னுடைய ஸ்டைல். அதனை ரோகித் சர்மாவுக்கு தெரியப்படுத்தினேன். இந்த விஷயம் நீண்ட நாள்களாக எனக்குள் இருந்தது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனை ரோகித் சர்மாவிடம் கூறிவிட்டேன்

    என ரவி சாஸ்திரி கூறினார். 

    • இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன்.
    • அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும்.

    2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான (World Test Championship cycle) இந்தியாவின் முதல் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஜூன் 20ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 0-3 எனத் தொடரை இழந்திருந்தது. ஆஸ்திரேலியா மண்ணில் 1-3 என தோல்வியடைந்திருந்தது. இதற்குப்பின் இந்திய அணியின் தேர்வு எவ்வாறாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், தற்போதைய அணியில் இருப்பவர்களை தவிர வெளியில் இருந்து எடுப்பவர்களில் என்னுடைய தேர்வில் முதல் நபராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்து்ளளார்.

    இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    இளம் வீரரான சாய் சுதர்சனை அனைத்து வடிவிலான கிரிக்கெட்டுக்கான வீரராக பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர் போல் தெரிகிறார். என் கண்கள் நிச்சயமாக அவர் மீது இருக்கும். இங்கிலாந்தில் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இங்கிலாந்து சூழ்நிலையை நன்றாக தெரிந்தவர். அவருடைய டெக்னிக், அவர் விளையாடும் விதம், தற்போதைய அணிக்கு வெளியில் இருந்து வீரர்கள் தேவை என்று விரும்புபோதும் என்னுடைய முதன்மையான தேர்வு சாய் சுதர்சனாகத்தான் இருக்கும்.

    ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால் அதற்கு போட்டி நிலவும். ஒயிட்பால் கிரிக்கெட்டில் உறுதியாக இடம் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட் என வரும்போது மற்ற வீரர்கள் யார்? யார்? இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    • அயர்லாந்து தொடரின்போது ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டது
    • தற்போது நியூசிலாந்து தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி. அவர் பதவிக்காலம் முடிந்த பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையை எதிர்கொண்டது. இதில் இநதிய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.

    தற்போது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. லஷ்மண் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் அடிக்கடி ஓய்வு எடுப்பது சரியாக இருக்காது என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    நான் ஓய்வு (Brealks)என்று நம்பவில்லை. ஏனென்றால் நான் எனது அணியை புரிந்து கொள்ள விரும்புகிறேன். அதன்பின் அணியை எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவேன். இந்த ஓய்வுகள் (Breaks)... நேர்மையாக இருக்க உங்களுக்கு இவ்வளவு ஓய்வுகள் தேவையா?. ஐ.பி.எல். தொடரின்போது 2 அல்லது மூன்று மாதங்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஓய்வு எடுக்க போதுமானது. ஆனால் மற்ற நேரங்களில், ஒரு பயிற்சியாளர் பயிற்சியாளராகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவில் அதிவேகமாக பந்து வீசும் வீரராக உள்ளார்
    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடி முத்திரை பதித்தார்

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் உள்ளார். உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததும் பேட்டிங் அணுகுமுறை, அதிவேக பந்து வீச்சாளர் ஆகியோர் இல்லாததே தோல்விக்கு காரணம என சொல்லப்படுகிறது.

    இதனால் உம்ரான் மாலிக் மீது அனைவருடைய கவனமும் உள்ளது. நியூசிலாந்து ஆடுகளங்கள் ஏற்கனவே வேகப்பந்து வீச்சு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசினால் அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, அவர் எப்படி பந்து வீச்சை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் உம்ரான் மாலிக் அற்புதமான திறமைசாலி என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

    உம்ரான் மாலிக் குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ''உம்ரான் மாலிக் இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளர்களில் ஒருவர். உலகக் கோப்பையில் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கலங்கடித்தார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கு உதாரணம் ஹாரிஷ் ராஃப், நசீம் ஷா, அன்ரிச் நோர்ஜே. ஆகவே, உண்மையாக வேகத்திற்கு மாற்று இல்லை.

    குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் கூட எதிரணியை சமாளிக்க முடியும். ஆகவே, உம்ரான் மாலிக்கிற்கு இது சிறந்த வாய்ப்பு. இந்த வெளிப்பாட்டில் இருந்து அவர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்'' என்றார்.

    • டி20 கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டி இரண்டரை மடங்கு பெரியது ஆகும்.
    • என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும்.

    மும்பை:

    நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடர் 1 - 0 என வெற்றி பெற்ற சூழலில், ஒருநாள் தொடரில் 1 - 0 என தோல்வியடைந்தது.

    இந்த ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் இருந்தார். அவர் முதல் ஒருநாள் போட்டியில் 4, அதன்பின்னர் 34*, 6 என சொற்ப ரன்களையே அடித்தார். அந்த 34 ரன்களும் ௨-வது போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின்னர் தான் அடித்தார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படியா சொதப்புவார் எனும் அளவிற்கு ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

    இந்நிலையில் சூர்யகுமாரின் பிரச்சினை குறித்து ரவி சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் முதலில் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டை விட இது இரண்டரை மடங்கு பெரியது ஆகும். அவர் நிறைய பந்துகளை எதிர்கொள்ளவேண்டியது இருக்கும். அந்த அளவிற்கு அவர் பொறுமை காக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ரன்களை வழக்கத்தை விட 30 - 40 பந்துகளுக்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்துவிடுகிறார். இதனை சரிசெய்ய சற்று அவருக்கு நேரத்தை கொடுக்க வேண்டும்.

    இதே போல என்னதான் சிறந்த ஃபார்மில் இருந்தாலும், அந்த களத்திற்கான மரியாதையை கொடுக்க வேண்டும். இது ஒரு சிறந்த ஃபார்மெட். யாரின் மரியாதைக்காகவும் காத்துக்கொண்டிருக்காது. எனவே களத்திற்கு மரியாதை கொடுத்து பொறுமை காக்க வேண்டும். சூர்யகுமாரும் புரிந்துக்கொண்டு வருவார் என நம்புகிறேன்.

    வங்கதேசத்துடனான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் விளையாடவில்லை. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு அவர் 50 ஓவர் வடிவத்திற்கு ஏற்றார் போல மாறி வர வேண்டும். அவர் 5ம் இடத்தில் களமிறங்கும் போது ஸ்கோர் நன்றாக இருக்கும். அப்போது வேண்டுமானால் அதிரடி காட்டிக்கொள்ளலாம் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

    • கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு.
    • எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான்.

    பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை டிசம்பர் நான்காம் தேதி (டிசம்பர் 4) டாக்கா நகரில் நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், முகமது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

    அதே வேளையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் அதற்கு தயாராகும் வகையில் இந்த சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி20 உலக கோப்பையின் போது ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி இந்த தொடரிலும் அவரது சிறப்பான பார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதேபோல டி20 உலக கோப்பை தொடரில் சொதப்பிய ரோகித் சர்மா இழந்த தனது பார்மை மீட்டெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அளித்த பதிலில் கூறியதாவது:-

    எந்த ஒரு வீரரும் தங்களது பார்மை இழப்பது என்பது நடக்கக் கூடிய ஒன்றுதான். பார்மை இழக்காத வீரர் என்று கிரிக்கெட்டில் யாருமே கிடையாது. அனைவருக்குமே இது நடந்துள்ளது. கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி போன்றவர்கள் கூட பார்மை இழந்து தவித்த காலம் எல்லாம் உண்டு. ஒரு வீரரால் எப்பொழுதுமே அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய இயலாது, அது மனித இயல்பு தான்.

    அவர்களும் ஒரு கட்டத்தில் பார்மில் சறுக்களை சந்தித்து இருந்தார்கள். அதேபோலத்தான் விராட் கோலி மற்றும் ரோஹித்துக்கு பார்மில் சறுக்கல் ஏற்பட்டது. ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பெரிய வீரர்களுக்கு இழந்த பார்மை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளியும், ஒரு முழுவதுமான தொடருமே போதுமானது.

    என்று ரவி சாஸ்திரி கூறினார்.

    ×