என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    7 நாட்கள் ஓய்வெடுத்தும் 2-வது டெஸ்டில் பும்ரா இல்லாதது விசித்திரமானது- ரவி சாஸ்திரி விமர்சனம்
    X

    7 நாட்கள் ஓய்வெடுத்தும் 2-வது டெஸ்டில் பும்ரா இல்லாதது விசித்திரமானது- ரவி சாஸ்திரி விமர்சனம்

    • வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
    • இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளனர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.

    போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.

    லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

    என ரவி சாஸ்திரி கூறினார்.

    Next Story
    ×