என் மலர்
நீங்கள் தேடியது "பும்ரா"
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
- ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் செல்வராகன் கேள்வி.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 489 ரன்கள் எடுத்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னிலை வகித்து வருகிறது. மேலும் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணியே வெற்றி பெறும் சூழல் உள்ளது.
இதனால் பலரும் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிக்காதது ஏன் என பிசிசிஐக்கும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நான் எப்போதும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகன். ஜஸ்ப்ரித் பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? என குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
- டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது.
மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
- மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் இன்று ஒரு விக்கெட் எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.
100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுகிறார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார்.
டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.
- காயம் காரணமாக பும்ராவுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கப்படுகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பும்ராவின் முடிவை ஆதரித்துள்ளார்.
காயம் காரணமாக முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாட பும்ரா முடிவு செய்துள்ளார். ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார். தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுகிறார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. டி20 தொடரில் மட்டும் விளையாடுகிறார்.
பும்ராவின் பணிச்சுமை நிர்வகித்தல் தொடர்பாக முகமது சிராஜ் கூறியதாவது:-
வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் குறித்து பும்ரா கவலைப்படுவதில்லை. அவருக்கு முதுகுப் பகுதியில் மோசமான காயம் ஏற்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீசி, காயம் ஏற்பட்டிருந்தால் அதன்பிறகு அவரால் பந்து வீச முடியுமா அல்லது முடியாதா? என்பதை சொல்ல முடியாது. இது மோசமானது.
அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர். ஆசிய கோப்பை தற்போதுதான் முடிவடைந்துள்ளது. அடுத்த வரும் டி20 உலகக் கோப்பை வருகிறது. 2027-ல் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்திய ரசிகர்கள் புரிந்து கொள்வது அவசியம். அவர் இந்திய அணியின் முதுகெலும்பு. அணிக்கு விளையாட தயாராக இருக்கும்போதெல்லாம், நாட்டிற்கான சிறப்பாக செயல்பட விரும்புவார். அவர் காயம் அடைந்தால், எப்படி செயல்பட முடியும்?.
இது நுட்பமான சூழ்நிலை. அவருக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால், அதில் இருந்து அவரால் குணம் அடைய முடியும். ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஏனென்றால், ரன்-அப், பவுலிங் ஆக்ஷன் மிகவும் கடினமானது. அதனால், பும்ரா சரியான முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன்.
இவ்வாறு முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முதல் 4 போட்டிகள் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. கடைசி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.
- இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
- இதில் இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.
லாகூர்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று (14-ம் தேதி) நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.
நட்சத்திர வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களே கூறிவருகின்றனர். இதேபோல், இந்தப் போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான தன்வீர் அகமது இந்தப் போட்டி குறித்து கூறுகையில், இந்த ஆசிய கோப்பை போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சைம் அயூப் 6 சிக்சர்கள் அடிப்பாரென நினைக்கிறேன் என தெரிவித்தார்.
- வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் நட்சத்திர வேகபந்து வீச்சாளராக திகழ்ந்தவர்கள் வாசிம் அக்ரம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இவருக்கு இணையான ஸ்விங் பவுலர் இல்லை எனலாம். அதேவேளையில் யார்க்கர் பந்துகளும் வீசுவதில் வல்லவர். இம்ரான் கான், வாசிம் அக்கரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியபோது, தலைசிறந்த வேகப்பந்து அணியாக திகழ்ந்தது.
தற்போதைய காலத்தில் பும்ரா போன்ற வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். அந்த காலத்து கிரிக்கெட் வீரர்களுடன் தற்போதைய வீரர்களை ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். குறிப்பாக வாசிம் அக்ரம் உடன், பும்ராவை ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 1990-களையும், தற்போதைய காலக்கட்டத்தை ஒப்பீடு செய்வது குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-
1990 மற்றும் இன்றைய காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது. நான் இடது கை பழக்கம் உள்ளவனாக இருந்தபோது, பும்ரா வலது கை பழக்கம் உள்ளவர். சமூக ஊடகங்களில் மக்கள் வாதிடுவதை விரும்புகிறார்கள்.
இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். வாசிம் அக்ரம் 1985 ஆண்டு முதல் 2002ஆம் அண்டு வரை 17 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 2018ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
- பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.
சுப்மன்கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக துலிப் டிராபி போட்டியில் இருந்து அவர் விலகினார். இதனால் அவருக்கு உடல் தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது.
- பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரில் பும்ரா, சுப்மன் கில் விளையாட உள்ளனர். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திற்கு (Centre of Excellence) ரோகித் சர்மா, சுப்மன் கில், பும்ரா, ஷர்துல் தாகூர் வந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட காலம் விளையாடமல் இருந்து அல்லது காயத்தில் இருந்து மீண்டு வந்து, அணிக்கு திரும்பும்போது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். தற்போது பந்து வீச்சாளர்களுக்கான உடற்தகுதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக மூன்று போட்டிகளில் விளையாட உள்ளார்.
- வேலைப்பளு காரணமாக பும்ரா தொடர்ந்து விளையாடுவது கடினம்.
- இங்கிலாந்து தொடரில் கூட 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால்தான் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
பும்ராவின் வேலைப்பளு (WorkLoad) பெரிய அச்சத்தை ஏற்படுத்தியதால் ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றில்தான் விளையாட முடியும்.
இதனால் பும்ராவை ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்னதாகவே அறிவிப்பு.
- முதல் டெஸ்டில் விளையாடிய பும்ரா, அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் பங்கேற்றார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என டிரா செய்ய முடியும் என்ற நிலையில் கூட பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என உறுதியாக கூறப்பட்டது. முதல் போட்டியில் விளையாடினார். அதன்பின் 3ஆவது மற்றும் 4ஆவது போட்டியில் விளையாடினார்.
4ஆவது போட்டிக்கும் 5ஆவது போட்டிக்கும் இடையில் 3 நாட்கள் மட்டுமே இடைவெளி இருந்த நிலையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பும்ரா ஓய்வு குறித்து அஸ்வின் கூறுகையில் "இது கடந்த கால இந்திய அணியாக இருந்திருந்தால், பும்ராவை இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாட வற்புறுத்தியிருப்பார்கள். இப்போது கூட, அணி நிர்வாகம் இதைப் பார்த்திருக்கலாம். ஆனால் பும்ராவின் பார்வையில், இது ஒரு சரியான முடிவு" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தொடர் முழுவதும் விளையாட தகுதியாக இருந்தால் மட்டுமே இனிமேல் பும்ராவை டெஸ்ட் தொடரில் சேர்க்க இருப்பதாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இங்கிலாந்து இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.
- இந்தியா வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் சுப்டன் கில் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் டாஸ் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு கருண் நாயர், ஜுரேல், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்படடுள்ளனர்.
- விக்கெட்கள் வீழ்த்தியபோதிலும் இந்திய பவுலர்கள் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார்.
- ஜடேஜா 143 ரன்களும் சிராஜ் 140 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
விக்கெட்கள் வீழ்த்தியபோதிலும் இந்திய பவுலர்கள் 100 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார். ஜடேஜா 143 ரன்களும் சிராஜ் 140 ரன்களும் பும்ரா 112 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 107 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
குறிப்பாக தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு போட்டியில் 100 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்து பும்ரா மோசமான சாதனை படைத்துள்ளார்.






