என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா
    X

    டி20 உலகக் கோப்பை: அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. சூப்பர் 8 சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.

    இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 18.5 ஓவர்களில் 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற அஸ்வின் (32) சாதனையை பும்ரா (33) முறியடித்துள்ளார்.

    இந்தியாவில் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள்:-

    பும்ரா (33 விக்கெட்டுகள்)

    அஸ்வின் (32 விக்கெட்டுகள்)

    அர்ஷ்தீப் சிங் (32 விக்கெட்டுகள்)

    பாண்ட்யா (29 விக்கெட்டுகள்)

    Next Story
    ×