என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பும்ரா பந்துவீச்சில் அந்த பாகிஸ்தான் வீரர் 6 சிக்சர் விளாசுவார்: தன்வீர் அகமது
    X

    பும்ரா பந்துவீச்சில் அந்த பாகிஸ்தான் வீரர் 6 சிக்சர் விளாசுவார்: தன்வீர் அகமது

    • இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
    • இதில் இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.

    லாகூர்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

    கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் இன்று (14-ம் தேதி) நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.

    நட்சத்திர வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்தப் போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களே கூறிவருகின்றனர். இதேபோல், இந்தப் போட்டி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான தன்வீர் அகமது இந்தப் போட்டி குறித்து கூறுகையில், இந்த ஆசிய கோப்பை போட்டியில் பும்ரா பந்துவீச்சில் சைம் அயூப் 6 சிக்சர்கள் அடிப்பாரென நினைக்கிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×