என் மலர்
நீங்கள் தேடியது "Bumrah"
- பும்ரா கடந்த 2 வருடம் இந்திய அணிக்கு பங்காற்றிய விதத்தை எல்லோரும் பார்த்திருப்போம்.
- அவருக்குப் பதிலாக முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளது மிகப்பெரியது.
இந்திய அணியின் நட்சத்திர வேகபந்து வீச்சாளரான பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என அந்நாட்டு முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கடந்த மாதம் சிட்னியில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பந்து வீசும்போது, பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை.
அவருக்கு ஓய்வு தேவை என மருத்துவக்குழு அறிவுறுத்தியதால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை வருகிற 20-ந்தேதி சந்திக்கிறது. இந்த போட்டியில் பும்ரா இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என வங்கதேச அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ருல் கெய்ஸ் கூறியதாவது:-
தலைசிறந்த பந்து வீச்சு அட்டாக் மற்றும் பேட்டிங் வரிசையில் இந்தியா பலமான அணி. ஆனால், பும்ரா இந்திய அணியில் இல்லை. கடந்த இரண்டு வருடமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அவர் இல்லாததை வங்கதேசம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்.
முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளது மிகப்பெரியது. தற்போது அவர் உடற்தகுதி விசயம் சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் அவருடைய ரிதத்தை பிடித்து விட்டால், வங்கதேச அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
சாகிப் அல் ஹசன் சிறந்த வீரர் என்பதால் நான் அவரை தவற விடுகிறேன். எந்த போட்டியிலும் அவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவிலானது. இந்த தருணத்தில் வங்கதேசம் திணறி வருகிறார். சாகிப் இல்லாததால் வங்கதேசம் திணறிக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாததால் வங்கதேசம் கூடுதல் ஒரு ஸ்பின்னருடன் களம் இறங்கலாம். இது வங்கதேச அணிக்கு பிரச்சனை.
லிட்டோன் தாஸ் ஃபார்ம் அணிக்கு மிப்பெரிய கவலையாக இருந்தது. ஆனால் வங்கதேச ப்ரீமியர் லீக்கின் கடைசி சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். எனினும், சவுமியா சர்கார், தன்ஜித் தமிம் சிறப்பாக விளையாடினர். பேட்டிங் துறையில் அணி சிறந்த வடிவத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு இம்ருல் இம்ருல் கெய்ஸ் தெரிவித்துள்ளார்.
- தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது
- இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இந்திய அணி துபாய் புறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரோகித் சர்மா தொடர்பான ஒரு பெரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, தற்போதைய இந்திய கேப்டன் ரோகித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று PTI அறிக்கை வெளியாகி உள்ளது.
மேலும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் பும்ரா, இந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா இல்லாதபோது பும்ரா இதற்கு முன்பு மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
- கடந்த இரண்டு ஆண்டுகளில் பும்ரா விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உலகில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், அந்த மாதிரியான செயல்திறனை பெற்றுள்ளனர் என நான் நினைக்கவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியின்போது காயம் அடைந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று இறுதிகட்டமாக திருத்தி அறிவிக்கப்பட்ட அணியில் பும்ரா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் பும்ரா போன்ற மிகப்பெரிய வீரர் காயம் அடைவது எந்தவொரு அணிக்கும் அது பிரச்சனைதான் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கபில்தேவ் கூறுகையில் "கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய கிரிக்கெட்டின் தரம் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வேறு எந்த வேகப்பந்து வீச்சாளர்களும், அந்த மாதிரியான செயல்திறனை பெற்றுள்ளனர் என நான் நினைக்கவில்லை.
பும்ரா, அஸ்வின், கும்ப்ளே, ஜாகீர்கான் போன்ற மிகப்பெரிய வீரர்கள் போட்டியில் வெற்றியை தேடுக்கொடுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அதேபோன்ற வீரர்களுக்கு காயம் ஏற்படும்போது, எந்தவொரு அணிக்கும் அது பிரச்சனையாகத்தான் இருக்கும். பும்ரா விரைவில் அணிக்கு திரும்புவார் என நம்புகிறேன். ஏனென்றால் ஒரு பெரிய வீரர் பெரிய வீரர்தான்" என்றார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க வேண்டும்.
- பும்ரா இடம்பெறுவது குறித்து பிசிசிஐ நாளை முக்கிய முடிவு எடுக்க இருப்பதாக தகவல்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுப்பு தெரிவித்ததால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை கடந்த மாதம் இந்தியா அறிவித்தது. இதில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பந்து வீசும்போது பும்ராவிற்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் பந்து வீசாமல் வெளியேறினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பந்து வீச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை.
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா இடம் பிடித்திருந்தார். ஆனால் ஐந்து வாரங்களுக்கு பந்து வீசாமல் ஓய்வு எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரால் பந்து வீச முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
அதேவேளையில் பிப்ரவரி 11-ந்தேதி (நாளை) வரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்க அணியில் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடக்கூடிய அணியை அறிவிக்க வேண்டும். அதன்பின் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் தொடருக்கான தொழில்நுட்ப குழுவிடம் அனுமதி பெறவேண்டும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மத்தியில் பும்ரா பந்து வீச தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் பாதியை சமாளித்துக் கொள்ளலாம் என நினைத்தால் பும்ரா இடம்பெற வாய்ப்புள்ளது. இல்லை என்றால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படலாம்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமியில் பும்ராவின் காயம் குறித்து மருத்துவக்குழு ஆராய்ந்து வருகிறது.
வருகிற 12-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பும்ரா பெஙகளூரு சென்றுள்ளார். இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடரில் பங்கேற்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
என்றபோதிலும், நாளை பிசிசிஐ இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிடும்போதுதான் பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது குறித்து தெரியவரும்.
ஒருவேளை பும்ரா இடம்பெறவில்லை என்றால், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
- சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன.
- சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது.
8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 23-ந்தேதி துபாயில் நடக்கிறது. இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் ஆகிப் ஜாவேத் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபியில் முதல் 8 சிறந்த அணிகள் விளையாடுகின்றன. இதில் எந்த அணியையும் நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எந்த அணியிலும் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் இருந்தால், அது அந்த அணிக்கு பலமாக இருக்கும். ஆனால் நாங்கள் அவரைச் சுற்றி எல்லாவற்றையும் திட்டமிடமாட்டோம். பும்ராவின் உடற்தகுதி குறித்து அவர்கள் (இந்தியா) கவலைப்பட வேண்டும். பும்ரா பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
சமீப காலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவுகோலாக மாறி விட்டது. எனவே ஒருநாள் போட்டிகளில் 325 அல்லது 350 ரன்கள் கூட சாத்தியமாகும்.
குறிப்பாக பீல்டிங் கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதால் அதிக ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட உள்ளது.
- கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
சர்வதேச அரங்கில் கடந்த ஆண்டு சிறப்பான பவுலிங் மற்றும் பேட்டிங்கை வெளிப்படுத்தியதற்காக இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட உள்ளது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் மும்பையில் நாளை நடைபெற உள்ள பிசிசிஐ விருதுகளில் பும்ராவுக்கு மதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருது வழங்கப்படும்.
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான தொடர் மற்றும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்டமைக்கும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதேபோல், 2024-ன் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, பும்ராவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார். இதனால் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது நியூசிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோவன் ஸ்கௌடன் உதவியுடன் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் பும்ரா 100% உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பும்ராவின் மருத்துவ அறிக்கைககள் மருத்துவர் ரோவன் ஸ்கௌடனிடம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை பொறுத்து சிகிச்சைக்காக பும்ராவை நியூசிலாந்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பும்ரா உடற்தகுதி பெறாவிட்டால் ஹர்ஷித் ராணா அல்லது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவர் என்று சொல்லப்படுகிறது.
- ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.
- பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குறைந்தது முதல் 2 போட்டிகளில் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
- ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது பும்ரா பாதியிலேயே வெளியேறினார்.
5-வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் விளையாடி கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் பும்ரா பாதியிலேயே வெளியேறினார். 2-வது நாளின் முதல் செஷனின் கடைசி 5 ஓவர்களில், பும்ரா 3 ஓவர்களை வீசினார். இதனைத் தொடர்ந்து, உணவு இடைவேளைக்கு பிறகு வந்த பும்ராவால், 120 மற்றும் 130 வேகத்தில்தான் பந்துவீச முடிந்தது. அப்போது, பும்ரா சோர்வுடனும் காணப்பட்டார். இதனால், உடனே களத்தை விட்டு வெளியேறிய பும்ரா, மருத்துவ ஊழியருடன் இணைந்து, மருத்துவனைக்கு சென்றார்.
Where's Jasprit Bumrah off to ?#AUSvIND pic.twitter.com/P0yD1Q8pnV
— 7Cricket (@7Cricket) January 4, 2025
இந்நிலையில் அவரது காயம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 3-ம் நாளில் பும்ரா நிச்சயமாக பேட்டிங் செய்வார். ஆனால் காலையில் அவர் எப்படி உணருகிறார் என்பதைச் சரிபார்த்த பிறகு அவரது பந்துவீச்சு குறித்து முடிவு எடுக்கப்படும் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
- தற்போது நடைபெறும் ஒரு போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன்.
- எப்போது ஓய்வுப்பெற வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்த தொடரில் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அத்துடன் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா கிட்டத்தட்ட இழந்துள்ளது.
இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரின் பாதியிலேயே நீக்கப்பட்ட கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக ஆகியுள்ளார். இதையடுத்து ஆஸ்திரேலியா தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்திகளுக்கு ரோகித் சர்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மதிய உணவு இடைவேளையின் போது பேட்டி அளித்த ரோகித் சர்மா,
சிட்னி போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. ஓய்வு தேவைப்பட்டதால் விலகினேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது. ஃபார்மில் இல்லாததாலேயே. சிட்னி போட்டியில் இருந்து விலகினேன். மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை. நான் எங்கும் செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறேன். பும்ராவின் கேப்டன்ஷிப் பாராட்டத்தக்கதாக சிறப்பாக தான் உள்ளது.
மைக், லேப்டாப் அல்லது பேனா வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்கள் வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்பொழுது செல்ல வேண்டும், எப்பொழுது விளையாட கூடாது, எப்பொழுது Dugout-ல் உட்கார வேண்டும், எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரு குழந்தைகளின் தந்தை, என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
முன்னதாக, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரங்களில் ஆல் அவுட் ஆனது.
- இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
- இந்திய அணியில் ரோகித்துக்கு பதிலாக சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ரோகித் சர்மாவுக்கு பதிலாக அணியில் சுப்மன் கில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
கேப்டனாக இருந்த ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.
ஏற்கனவே இந்தப் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- 5 ஆவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது.
- இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்றும் நாளைய டெஸ்டில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பும்ரா மற்றும் பயிற்சியாளர் கம்பீருடன் இணைந்து ரோகித் சர்மா சிட்னி மைதானத்தை பார்வையிடும் வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ரோகித்தும் கில்லும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் நாளைய போட்டியில் ரோகித் விளையாடுவாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
? Sydney??? ??? ??? ??? 5⃣?? & ????? ????! ? ?#TeamIndia | #AUSvIND pic.twitter.com/zJ02MmpAST
— BCCI (@BCCI) January 2, 2025