என் மலர்
நீங்கள் தேடியது "Tempa Bavuma"
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 102 ரன்னும், பவுமா 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25+ ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் பவுமாவின் (13 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 583 ரன்கள் குவித்து ஆரஞ் தொப்பிக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கம் செய்யப்பட்டார்.
- டி20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், ஆண்டிலே ஸ்டுக்வேப்ஸ், பெஹ்லுக்வே, லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
3-வது ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வைடன் மில்லர், டேவிட் மில்லர், , லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன், வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்.
3 டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
- இலங்கை தென் ஆப்பிரிக்காவில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .
கேப்டவுன்:
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
- 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.
டர்பன்:
இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 7 விக்கெட்டும், கோட்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 4வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ், பவுமா ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
4வது விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸ் 122 ரன்னில் அவுட்டானார். பவுமா 113 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா எஞ்சியுள்ள 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.






