search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா இலங்கை தொடர்"

    • முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.

    கெபேஹா:

    தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டோனி-டி-சோர்சி முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஸ்டப்ஸ் 4 ரன்னும், எய்டன் மார்க்ரம் 20 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய ரியான் ரிக்கல்டன்-பவுமா ஜோடி பொறுப்புடன் விளையாடியது. அரைசதம் அடித்து அசத்திய பவுமா 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக ஆடி சதமடித்த ரிக்கல்டன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார். மார்கோ ஜான்சன் 4 ரன்னில் ஆட்டமிழக்க முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. கைல் வெர்ரைன் 48 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இலங்கை சார்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், அசிதா பெர்னண்டோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
    • டர்பன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.

    டர்பன்:

    இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 9 ரன்னும், டோனி டி ஜோர்ஜி 4 ரன்னும் எடுத்தனர். ஸ்டப்ஸ் 16 ரன்னும், டேவிட் பெடிங்காம் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர்.

    தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேப்டன் பவுமா (28), கைல் வெர்ரின்னே (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

    கனமழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டத்தை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

    இலங்கை அணி சார்பில் லஹிரு குமாரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • இலங்கை தென் ஆப்பிரிக்காவில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .

    கேப்டவுன்:

    இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

    தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:

    டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .

    ×