என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது.
    • இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

    இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.
    • WTC போட்டிகளில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா பாலோ ஆன் கொடுக்கவில்லை.

    288 ரன்கள் முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 549 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    549 ரன் என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த தோல்வியால் இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதனால் வெற்றியின் சதவீதம் 48.15 ஆகும். இதன் அடிப்படையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

    முதல் இடத்தில் 100 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. 3-வது 4-வது இடங்கள் முறையே இலங்கை பாகிஸ்தான் அணிகள் உள்ளது.

    • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
    • இதில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

    துபாய்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்ற நிலையில் 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.

    இலங்கை அணி 3-வது இடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது.

    முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.

    கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
    • இதில் இந்தியா அணி எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தது.

    துபாய்:

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025 - 2027) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில் 100 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடருகிறது.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி (66.67 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி (66.67 சதவீதம்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்த இந்திய அணி (54.17 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 8-வது இடத்தில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2025 அக்டோபரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்தத் தொடர் 2025- 2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்படும். அதன்படி ஆஸ்திரேலியா 100 சதவீததுடன் முதல் இடத்திலும் இலங்கை அணி 66.67 சதவீததுடன் 2-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 61.90 சதவீததுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    4 முதல் 9 இடங்கள் முறையே இங்கிலாந்து (43.33), வங்கதேசம் (16.67), வெஸ்ட் இண்டீஸ் (0.00), நியூசிலாந்து (0.00), பாகிஸ்தான் (0.00), தென் ஆப்பிரிக்கா (0.00) ஆகிய அணிகள் உள்ளன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கு 12 புள்ளிகள், சமனுக்கு 4 புள்ளிகள், டையுக்கு 6 புள்ளிகள்.

    இதில் புள்ளிகள் கழிக்கும் விதிமுறையும் உள்ளது. அதன்படி மெதுவான ஓவர் வீதத்திற்காக 2 புள்ளிகள் கழிக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியது.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்துவீசியதற்காக இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 4வது இடத்தில உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லார்ட்சில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.
    • அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து நடத்துகிறது.

    ஐ.சி.சி.யின் வருடாந்திர மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வரும் 2027, 2029 மற்றும் 2031-ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

    சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஐ.சி.சி. தெரிவித்தது.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகது.

    • சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
    • டெஸ்ட் போட்டியை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன் சில்) 2019-ம் ஆண்டு அறி முகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.

    இந்த நிலையில் 2027-29ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறிய நாடுகளுக்கான டெஸ்ட்களை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேநேரத்தில் , இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் மாற்றமின்றி வழக்கமான 5 நாட்களுக்கு விளையாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய நாடுகள் விளையாடும் டெஸ்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றுக்கான செலவுகளை குறைக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    லண்டனின் லாா்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின்போது, 2027-29 டெஸ்ட் தொடரில் சிறிய அணிகளுக்கான டெஸ்டை 4 நாட்களாக குறைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐ.சி.சி தலைவா் ஜெய் ஷா இந்த முடிவுக்கு தனது ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தங்களுக்கான அட்ட வணையில் அதிக நாட்களை எடுத்துக் கொள்வதாலும், செலவும் அதிகமாவதாலும் டெஸ்டை நடத்த சிறிய நாடுகள் தயக்கம் காட்டுகின்றன.

    ஒரு டெஸ்ட்டுக்கான நாட்களை 5-க்கு பதிலாக 4-ஆக குறைக்கும்போது, 3 போட்டி கொண்ட தொடரை 3 வாரங்களுக்கு உள்ளாக முடிக்க இயலும். இது, அந்த நாடுகள் டெஸ்டை நடத்த உந்துதல் அளிக்கும். குறைக்கப்படும் ஒருநாளின் ஆட்டநேரத்தை சமன் செய்ய ஒரு நாளுக்குள் வீசப்படும் ஓவர்களின் எண்ணிக்கையை 90-ல் இருந்து 98 ஆக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
    • டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    லண்டன்:

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.

    இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.

    பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.

    குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. 

    ×