என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.
    • பாகிஸ்தான் அணி 8-வது இடத்தில் உள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2025 அக்டோபரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்தத் தொடர் 2025- 2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    புள்ளிகளின் சதவீதம் அடிப்படையில் அணிகள் தரவரிசைப்படுத்தப்படும். அதன்படி ஆஸ்திரேலியா 100 சதவீததுடன் முதல் இடத்திலும் இலங்கை அணி 66.67 சதவீததுடன் 2-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 61.90 சதவீததுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    4 முதல் 9 இடங்கள் முறையே இங்கிலாந்து (43.33), வங்கதேசம் (16.67), வெஸ்ட் இண்டீஸ் (0.00), நியூசிலாந்து (0.00), பாகிஸ்தான் (0.00), தென் ஆப்பிரிக்கா (0.00) ஆகிய அணிகள் உள்ளன.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கு 12 புள்ளிகள், சமனுக்கு 4 புள்ளிகள், டையுக்கு 6 புள்ளிகள்.

    இதில் புள்ளிகள் கழிக்கும் விதிமுறையும் உள்ளது. அதன்படி மெதுவான ஓவர் வீதத்திற்காக 2 புள்ளிகள் கழிக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×