என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது- தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி வாழ்த்து
    X

    'உங்கள் வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது'- தென் ஆப்பிரிக்க அணிக்கு உதயநிதி வாழ்த்து

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×