என் மலர்
நீங்கள் தேடியது "Points Table"
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
- இதில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
துபாய்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்ற நிலையில் 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.
இலங்கை அணி 3-வது இடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது.
முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.
கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.
- சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் அசத்தலாகப் பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்வியின் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடித்து வருகிறது.
குஜராத் முதல் இடத்திலும், டெல்லி 2வது இடத்திலும், பெங்களூரு 3வது இடத்திலும், மும்பை அணி 4வது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.
பஞ்சாப் 5வது இடத்திலும், லக்னோ 6வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும், ஐதராபாத் 8வது இடத்திலும், ராஜஸ்தான் 9வது இடத்திலும் உள்ளனர்.
- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
ஐதராபாத்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார்.
மும்பை அணியின் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
கடந்த வாரம் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் மும்பை அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
- பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 77 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
சண்டிகரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
மற்ற இடங்களில் தலா 2 வெற்றி பெற்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 3-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 4-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-வது இடத்திலும் உள்ளன
தலா ஒரு வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் 8-வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 10-வது இடத்திலும் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹாட்ரிக் தோல்வி எதிரொலியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9வது இடத்துக்கு சரிந்துள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள ரசிகர்கள் சென்னை அணி இதிலிருந்து மீண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.
- கடைசி இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- சென்னை 7-வது இடத்திலும், கொல்கத்தா கடைசி இடத்திலும் உள்ளது.
மும்பை:
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலையை இங்கு காணலாம்.
2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும் உள்ளது.
அடுத்த இடங்களில் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3-வது இடத்திலும், குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது. ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியுடன் பஞ்சாப் 5-வது இடத்தில் உள்ளது.
6-வது இடத்தில் இருந்த கொல்கத்தா, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கடைசி இடத்தையும், 10-வது இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. சென்னை 7-வது இடத்திலும், ஐதராபாத் 8-வது இடத்திலும், ராஜஸ்தான் 9-வது இடத்திலும் உள்ளன.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியருக்கான புளு நிற தொப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நூர் அகமதுவிடம் உள்ளது. அவர் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்டார்க் (2 போட்டி 8 விக்கெட்), கலீல் அகமது (3 போட்டி 6 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரனிடம் உள்ளது. அவர் 2 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சாய் சுதர்சன் 137, டிராவிஸ் ஹெட் 136 ஆகியோர் உள்ளனர்.
- பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி
- இங்கிலாந்து, நெதர்லாந்து போன்ற அணிகள் 4 வெற்றிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஏறக்குறைய கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாட வேண்டும். தற்போது பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன.
நேற்று பாகிஸ்தான்- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டிகளில் வங்காளதேசம் தோல்வியடைந்தது. இதன்மூலம் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. அந்த அணி வருகிற 6-ந்தேதி இலங்கையையும், 11-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளின் முடிவால் வங்காளதேசத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தோல்வியடைந்தால், அந்த அணிகளுக்கு அரையிறுதிக்கான வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கிலாந்து 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை. 4-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 8-ந்தேதி நெதர்லாந்தையும், 11-ந்தேதி பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்கு வெற்றிகள் பெற்றிருக்கும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் வருகிற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் முடிவைப் பொறுத்து ஒருவேளை அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். அது மிகவும் கடினம்.
இன்று தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். ஏற்கனவே ஐந்து வெற்றிகளை பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், அந்த அணிக்கு பெரிய பாதிப்பு இருக்காது. ஒருவேளை தோல்வியடைந்தால் நான்கு வெற்றிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அடுத்த இரண்டு போட்டிகளில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளை கட்டாயம் தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தியா 6 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் பெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தென்ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் வெற்றி பெற்ற 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3-வது இடத்தை பிடித்துள்ளது.
பாகிஸ்தான் 3-ல் வெற்றி பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 3 வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை, நெதர்லாந்து அணிகள் தலா இரண்டு வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் இலங்கை 7-வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 8-வது இடத்தையும் பிடித்துள்ளன.
- வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
- இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடம் முன்னேறியது.
துபாய்:
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்.
இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.
புதிய பட்டியலின் படி 6-வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 50 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து 7-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
68.51 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், 62.50 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், 50 சதவீதத்துடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.
36.66 சதவீதத்துடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும், 33.33 சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்திலும் உள்ளது.
- ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தா, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 3,4,5-வது இடங்களில் உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
- ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 39 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 வெற்றியுடன் 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 5, 6-வது இடங்களில் உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
- ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 47 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று 3, 4, 5, 6-வது இடங்களில் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணிகள் தலா 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 8, 9, 10-வது இடங்களில் உள்ளன.
- சென்னை, டெல்லி, லக்னோ தலா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 4 முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
- குஜராத் அணி ஐந்து வெற்றிகள் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மட்டும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற அணிகள் 12 போட்டிகளில் விளையாடிவிட்டன.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா முதல் இடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
சன்ரைசர்ஸ் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று வெற்றி பெற்றிருந்தால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்திருக்கும். தற்போது 4-வது இடத்தில் உள்ளது.
டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் தலா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி ரன் ரேட் அடிப்படையில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. லக்னோ 6-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் தலா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி 7-வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன. ஆர்சிபி டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. ஏதாவது ஒரு அணியிடம் பிளேஆஃப் சுற்றை வாய்ப்பை இழந்து விடும். குஜராத் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுடன் மோத உள்ளது. இதற்கும் அதே நிலைதான். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விடும்.
சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் வாய்ப்பில் நீடிக்க முடியும். டெல்லிக்கும் லக்னோவுக்கும் இடையே போட்டி உள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்கும். இந்த மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
- ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 5, 6, 7-வது இடங்களில் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.






