என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்
- ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.
ஐதராபாத்:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார்.
மும்பை அணியின் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
கடந்த வாரம் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் மும்பை அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.






